தாழப் பறக்கும் காகங்கள்!

எங்கும் காகங்கள்!
எப்போதும்
அங்கு காகங்கள் தாழவே பறக்கும்.
தலையைத் தொட்டுச் செல்லும்
அதன் கருஞ்சிறகு
‘படபட’க்கும்.
கார்கள் மீது எச்சமிடும்,
நிமிர்ந்தவர்களைப் பயந்து தாழவிடும்,
தாழப் பறக்கும் அவை.
தரையிறங்கி கூட்டமாக தத்திக் கொண்டும்
கொத்திக் கொண்டும் உலவும்;
அவற்றை எந்த சலசலப்பும் விரட்டிப் பார்த்ததில்லை.
எங்குச் சென்று உயரப் பறந்தாலும்
அங்கு மட்டும் தாழவே பறக்கின்றன;
காகங்கள்.

– தேடன்

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *