கவிதை: எங்கள் வகுப்பறைக்கு காது வேண்டும்..! – தேனி சுந்தர் ..

கவிதை: எங்கள் வகுப்பறைக்கு காது வேண்டும்..! – தேனி சுந்தர் ..

 

பிரயோசனமே இல்லன்னாலும்
பிள்ளைன்னு ஒருத்தன் இருக்கான்..
பெற்றோரின் நிம்மதி..

பத்து பைசா தரலன்னாலும்
புருசன்னு ஒருத்தன் இருக்கான்..
பெண்களின் நிம்மதி..

அப்படித் தான் வகுப்பறைக்கும்..
கேட்கவே கேட்காதுன்னாலும்
காதுன்னு இருந்தது ..

சத்தம் சத்தமா பேசுனோம்..

போகப் போக சரியாயிடும்..
கேட்க வச்சுடலாம்..
நம்பிக்கை இருந்தது..

Andhimazhai - அந்திமழை - வகுப்பறை வாசனை - 4 ...

ஆன்லைன் வகுப்புக்கு
வாய்தானே தலை..
தலைதானே வாய்..

எப்பவாவது காது கேட்கும்..
கேட்கும் போது
சொல்லிப்புடலாம்..
நீ
சொல்றது
ஒண்ணும் புரியல..

நம்பியிருந்த நமக்கு..
நாமம் போடும் கணக்கு..
அம்பானி வகையறாக்களின்
கார்பரேட் கணக்கு..!!

என்ன செய்யலாம்..
குரலுக்கு எப்போது மதிப்பு..?
கேட்க வேண்டும்..
யாராவது கேட்க வேண்டும்..
காது வேண்டும்..!!

எங்கள் வகுப்பறைக்கு
காது வேண்டும்..!

– தேனி சுந்தர் ..

Show 1 Comment

1 Comment

  1. பாரதிராஜா

    அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *