தேனி சுந்தர் "நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன" புத்தகம் ஓர் அறிமுகம் (Theni Sundar's Natchathirangal Eatti Paarkinrana Tamil Book)

தேனி சுந்தரின் “நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன” – நூல் அறிமுகம்

“நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன” (Natchathirangal Eatti Paarkinrana) புத்தகம் ஓர் அறிமுகம்…

அனைவருக்கும் வணக்கம்.

‘தயவுசெய்து இந்த புகழ் பாப்பாவ மட்டும் எனக்கு கொடுத்திடுங்க’..

இதைத் தவிர வேறென்ன வேண்டும்?!!!..

மரியாதைக்குரிய தேனி சுந்தர் அவர்களின் ‘நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன’ (Natchathirangal Eatti Paarkinrana) இந்த புத்தகத்தில் அப்பாவும் மகளும் வாழ்ந்திருக்கிறார்கள்.. பின் எப்படி அந்த நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்காமல் இருக்கும்?..

குழந்தை இலக்கியங்கள் என்று நான் படித்ததெல்லாம் ஒருவேளை குழந்தை இலக்கியங்கள் இல்லை போலும் என்று தோன்றுகிறது எனக்கு.. இவருடைய மகளுக்கும் இவருக்குமான உரையாடல்கள் தான் குழந்தை இலக்கியமாய் மலர்ந்து கொண்டிருக்கின்றன..

நான் தோழருடைய முந்தைய புத்தகத்தை வாசிக்கும் போதே எழுதியிருந்தேன்.. குழந்தைகளுடனான உரையாடல்களை முதலில் எல்லோராலும் ரசிக்க முடியாது. அப்படியே ரசித்தாலும் யாரும் அதை தொகுக்க முன்வர மாட்டார்கள் என்று.. ஆனால் சுந்தர் அவர்கள் தொடர்ந்து அதை செய்து வருகிறார். இப்படியான பெற்றோர் கிடைக்க புகழ் பாப்பா உண்மையில் ‘வரம்’ பெற்றிருக்க வேண்டும்.. ஆனால் இன்னொரு புறம்.. புகழை மகளாய் பெற இவர்கள் ‘தவம்’ செய்திருக்க வேண்டும்..

ஆரம்பமே அட்டகாசம்..

டீச்சராக மாறி கை வலிக்க வலிக்க காலைல இருந்து அம்மாவை எழுத வச்சிருக்காங்க புகழ் பாப்பா.. இப்படின்னு பார்த்தா.. இன்னொரு நாள் சித்தப்பா மகன் சர்வினை விட்டா போதும்னு ஓட வச்சிருக்காங்க..

பத்து.. பதினாலு.. எட்டு அஞ்சு.. அந்த நட்சத்திரங்களை எண்ணுச்சே அதுதான் குழந்தை.. ஒவ்வொன்றையும் வியக்க வியக்க பார்ப்பதும்.. தான் புரிந்து கொண்டவைகளுக்கு தன் மழலை மொழியில் வார்த்தைகள் இடுவதும் தான் குழந்தைகள்..

ரோட்டில் கிடக்கும் மஞ்சள் கலரு எலுமிச்சையை மிதித்தால் பேய் வருமின்னு சொல்வதும்.. அந்தப் பேயை கண்ணு குத்த சாமி வருவதும்.. இறுதியில் சாமி, பேய்.. எல்லாமே சும்மாச்சுக்கும் தான்னு புரிய வைப்பதும்.. அடடா இப்படிதான் விளையாட்டாகவே பகுத்தறிவையும் ஊட்ட வேண்டும்..

தேனி சுந்தர் "நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன" புத்தகம் ஓர் அறிமுகம் (Theni Sundar's Natchathirangal Eatti Paarkinrana Tamil Book)

ஏ ஃபார் ஆப்பிள்
ஏ ஃபார் பால்
ஏ ஃபார் பூனை..
எம்புட்டு ஏ ஃபார்.. ஹா..ஹா..ஹா..
முடியல யப்பா..

இதுல ஹைலைட்டே..
கண்ணாடிக்கார ஆண்டிச்சாமி, காந்தி தாத்தா ஆகிப்போன கதைதான்..

ஏ.டி.எம் ல பணம் எடுத்துட்டு வந்த அப்பாவ பார்த்து மகள் கேட்டாளே ஒரு கேள்வி.. “உள்ள யாருமே இல்ல.. களவாண்டுக்கு வந்துட்டியா”?..

டார்வின் சொன்னதும் ஒருவேளை உண்மைதான்..
இத..இத..இத..இத.. எழுதிட்டு வந்திருங்க ஈஸியா சொல்லிர்ராங்கப்பா..
எழுதும்போது எங்களுக்குத் தான கைவலிக்குது.. இனி நானும் எழுதக் கொடுப்பதை குறைத்துக் கொள்கிறேன்..

வீட்டில் இருக்கும் ஒரு பல்லியைக் கூட குழந்தைகள் எவ்வளவு கூர்மையாக கவனிக்கிறார்கள்!!..

அதிலும் பாப்பா ஒருபடி மேல.. ஏம்ப்பா அந்த பல்லியோட சொந்தக்கார பல்லிக நைட்டே வந்து அழுதுட்டு போயிருக்குமா.. ஐயோ எவ்வளவு இலகிய மனம்.. இந்த குழந்தைகளுக்குத் தான்..

ப்பா.. ஒனக்கு முத்தம் கொடுத்தா.. இந்த தாடி என்னய குத்திக் குத்தி வைக்குதுப்பா.. அடடா அந்த வலிக்காத அடிகள் கன்னத்துக்கு.. வடியாத இன்பம் அப்பாவுக்கு.. இந்த வாழ்வே கவிதை தான்..

ஏம்ப்பா இதுகூட தெரியாதா.. அண்ணன் சட்டைல சேப்பு இருக்கும்.. என் சட்டைல இருக்காது.. ஆடை அரசியல் அட்டகாசம்..

‘சுருளி’ அருவியில வாங்கின ஒரு பொம்மை.. ‘சீனா’ வரைக்கும் சென்று உற்பத்தி ஆகி வந்தது.. ஆகச் சிறந்த அறிவு..

இந்த குழந்தைகள் தான் எவ்வளவு கேள்விகள் கேட்கிறார்கள்.. எப்படியெல்லாம் கேட்கிறார்கள்.. ஒரு கேள்விக்கு ஓராயிரம் பதில்கள்..

அதைவிட ஒரு பதிலுக்கும் ஓராயிரம் கேள்விகளைக் கேட்கிறார்கள்.. உண்மையில் இப்படியாக தான் குழந்தைகளை பேசவிட்டு கேட்கவிட்டு.. உலகைப் பற்றிய நேரடி அனுபவத்தை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்..‌

வியந்து வியந்து வாசித்தேன் புகழ் பாப்பாவை.. மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு ஆயுட்காலம் கூடுமாம்.. அது உண்மை என்று இந்த புத்தகத்தை வாசித்தால் உணர்ந்து கொள்ளலாம்.. இப்படியான ஒரு படைப்பை தந்த உங்களுக்கும் உங்கள் மகள் புகழ் மற்றும் டார்வினுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.. என்றென்றும் மகிழ்ந்திருங்கள்..

பின் குறிப்பு: தேனி சுந்தர் அவர்கள் தானாக எழுத்தாளர் ஆகவில்லை.. அவ தான் அவதாரம் எடுக்க வைத்திருக்கிறாள்.. தங்கப் புள்ள..😅

நல்ல மகள்.. நல்ல அப்பா.. அட போங்கப்பா..

கடைசியில இப்படியான ஒரு பெண் குழந்தை எனக்கு இல்லையே என ஏங்க வைத்து விட்டாள் புகழ்.. ❤️

நூலின் தகவல்கள் : 

நூல் : நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன (Natchathirangal Eatti Paarkinrana)
ஆசிரியர் : தேனி சுந்தர்
பதிப்பகம் : புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை 18
விலை : ₹60/-
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

நூல் அறிமுகம் எழுதியவர் : 

ஆசிரியர். சித்ரா
நீலகிரி மாவட்டம்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *