கவிதை : தேசப் பதர்கள் – கோவி.பால.முருகு

கவிதை : தேசப் பதர்கள் – கோவி.பால.முருகு

விடுதலைப் போரில் ஓடி ஒளிந்து
மன்னிப்புக் கடிதம்,
அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்த
நீங்கள் தேச பக்தர்கள்!

விடுதலைப் போரில் களத்தில் நின்று
வீரச்சமர் புரிந்த பரம்பரை
நாங்கள் தேசத் துரோகிகள்!

மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவைப் போற்றும்
நீங்கள் தேச பக்தர்கள்!

மகாத்மா காந்தியை மதித்துப் போற்றும்
நாங்கள் தேசத் துரோகிகள்!

மதவெறியால் மண்ணில் கலவரம் செய்யும்
நீங்கள் தேச பக்தர்கள்!

மதவெறியை எதிர்த்துப் போரிடும்
நாங்கள் தேசத் துரோகிகள்

மனிதனை மனிதன் மதத்தால் மோதவிட்டு
வேடிக்கை பார்க்கும்
நீங்கள் தேச பக்தர்கள்

மனித நேயத்தை மனதில் விதைக்கும்
நாங்கள் தேசத் துரோகிகள்!

உணவை உடையை வழிபாட்டை
தீர்மானிக்க முயலும்
நீங்கள் தேச பக்தர்கள்!

உணவை உடையை வழிபாட்டை
அவரவர் உரிமை எனும்
நாங்கள் தேசத் துரோகிகள்!

வடமொழி இந்தியை,சமஸ்கிருதத்தை மட்டுமே
திணிக்க நினைக்கும்
நீங்கள் தேச பக்தர்கள்!

அவரவர் மொழியைப் போற்றி
மதிக்கும்
நாங்கள் தேசத் துரோகிகள்!

மசூதியை,தேவாலயத்தை
இடித்துத் தள்ளும் பதர்கள்
நீங்கள் தேச பக்தர்கள்!

கோயில்களை மசூதியைத் தேவாலயத்தை
இடிக்காத பகுத்தறிவாளர்
நாங்கள் தேசத் துரோகிகள்!

காவி மட்டுமே நாட்டில்
இருக்க நினைக்கும்
நீங்கள் தேச பக்தர்கள்!

காவியும் பச்சையும் வெள்ளையும்
கைகோர்க்க நினைக்கும்
நாங்கள் தேசத் துரோகிகள்!

உரிமையைக் கேட்டால்
கொன்று குவிக்கும்
நீங்கள் தேச பக்தர்கள்!

உரிமைக்காய்ப் போராடும் மக்களோடு
நிற்கும் நாங்கள்
தேசத் துரோகிகள்!

ஏழு ஆண்டுகளாய்
வாயால் வடைசுடும்
வெத்து வேட்டு
நீங்கள் தேச பக்தர்கள்!

ஏழு ஆண்டுகளாய் மக்களுக்ககாகப்
போராடி வரும்
நாங்கள் தேசத் துரோகிகள்

கருத்து ரிமையின் குரல்வளையை நெறித்து
கோவிந்பன்சாரே,நரேந்திர தபோல்கர்,கௌரி லங்கேஷ்கர்,கல்புர்க்கியைக் கொலை செய்த
நீங்கள் தேச பக்தர்கள்!

கருத்து ரிமைக்குக் குரல்கொடுக்கும்
நாங்கள் தேசத் துரோகிகள்!

நீங்கள் தேச பக்தர்கள் இல்லை…!
தேசப் பதர்கள்…!

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *