தி. ஜானகிராமனின் ‘அடி’ – ஒரு குறுநாவல் முன்னுரை
தமிழ் இலக்கியத்தில், மனித உணர்வுகளையும் சமூக யதார்த்தங்களையும் மிக நுட்பமாகப் பதிவு செய்தவர்களில் தி. ஜானகிராமன் (தி.ஜா) ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை. ஒரு சிற்பி சிலையைச் செதுக்குவது போல, தன் கதாபாத்திரங்களை வார்த்தைகளால் உயிர்ப்பிப்பதில் அவர் நிகரற்றவர். அவரின் படைப்புகளில் ஒன்றான ‘அடி’ என்னும் குறுநாவல், அவரின் தனித்துவமான கதைசொல்லும் திறனுக்கும், கதாபாத்திர உருவாக்கத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இக்கட்டுரை, அந்த குறுநாவலின் கதைக்களம், முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் அதன் தலைப்பின் ஆழமான பொருளைப் பற்றி ஆராய்கிறது.
கட்டுரை
மேலே உள்ள தொகுப்பில் சுமார் ஏழு குறுநாவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆறு குறுநாவல்களை இரண்டு வருடம் முன்னரே படித்துவிட்டேன். இந்தத் தொகுப்பில் கடைசிக் குறுநாவலாகக் கொடுத்திருப்பது அடி என்ற பெயர் கொண்ட குறுநாவல். அஃதாவது இன்ஜினியரிங்கில் டிராயிங் வரையும் போது டீடெய்லிங் கொடுப்பது வளக்கம். அதேபோல் தி.ஜானகிராமன் அவர்களால் மட்டுமே ஒரு கதாபாத்திரத்திற்கு இப்படிக்கூட டீடெய்லிங் கொடுக்க முடியும் என்பதை அவரது கதைகளைப் படித்தவர்களுக்குத் தெளிவாகப் புரியவரும்.
யாரும் யோசித்திருக்க மாட்டார்கள் இப்படியெல்லாம் நாம் ஒரு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுத முடியுமென்று.
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு குறைந்தது பத்து அல்லது பதினைந்து பக்கங்கள் மிகையில்லாமல் வளைத்து வளைத்து எழுத முடியும்மென்றால் அது தி.ஜானகிராமன் அவர்களால் மட்டுமே என்று கூறலாம்.
அடி என்ற குறுநாவலில் உள்ள கதாபாத்திரங்கள் அனைத்தும் மனதில் நிற்க்க கூடியவையாக அமைத்திருப்பார் ஆசிரியர் திரு தி.ஜா அவர்கள்.
இங்கே நாம் பார்க்கவிருக்கும் கதாபாத்திரம் தையும்மாள், செல்லப்பா, மங்களத்தம்மாள், சிவசாமி, பட்டு, முச்சாமி மற்றும் அம்பாகடாட்சம் ஆவார்கள்.
இதில் நாயகன் என்று பார்கிறபோது செல்லப்பா, மற்றும் நாயகி மங்களத்தம்மாள் என்கின்ற மங்களம். செல்லபாவின் தாய் தையும்மாள்.
சிவசாமி, பட்டுவின் கணவன், இவர்கள் இருவரும் தையும்மாளுடைய சொந்தங்கள். இந்தக் கதைக்களம் முழுவதும் இவர்களைச் சுற்றியே வலம் வரும்.
மாயவரத்தில் பட்டமங்கலத் தெருவில் பெரிய வீட்டில் வசிக்கும் மொந்தனூர் அய்யர் வீட்டில், தையும்மாள் சமையல் வேலை செய்துவந்தாள். அவளது பிள்ளைத்தான் செல்லப்பா.
அய்யர் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் அதே சமயத்தில் செல்லப்பாவும் படித்துவந்தான். ஒருகட்டத்தில் தையும்மாள் தன் அண்ணன் உடல் நலம் சரியில்லை என்று மாயவரத்திலிருந்து தாழங்குடிக்கு சென்று தன் அண்ணனுடன் தங்கிவிட்டாள் தையும்மாள்.
அவளுடனே அவளது பிள்ளை செல்லப்பா உடன் சென்றுவிட்டான்.
மெட்ரிகுலேஷன் படித்துக்கொண்டிருக்கும் போது கடைசிப் பரீட்சையில் தேர்ட்சிப் பெறவில்லை. செய்தி தெரிந்த உடன் அவன் தன் அம்மா தையும்மாளுக்கு ஓர் கடிதம் எழுதிவிட்டு தாழங்குடியை விட்டு ஓடிவிட்டான்.
கடிதத்தில் கவலை கொள்ள வேண்டாம் எந்தத் தப்பான முடிவிற்குச் செல்லமாட்டேன். வேலை தேடியே நான் இப்போது இந்தத் தாழங்குடியை விட்டுச் சென்றிருக்கிறேன். கூடிய விரைவில் நல்ல வேலை கிடைத்தவுடன் மீண்டும் உங்களை வந்து பார்பேன் என்று எழுதிவைத்து வட்டு ஊரைவிட்டு ஓடிப் போய் விட்டான்.
மூன்று வருடங்கள் எந்தத் தெடர்புமில்லாமல்தான் இருந்தது அவனுக்கும் அவனது அம்மாளுக்கும். மூன்றாம் வருடம் முதல் முறையாக மும்பையிலிருந்து ஓர் கடிதம்.
வேலை கிடைத்தள்ளது பட்டாளத்தில் என்று. பிறகு அடுத்தச் சில மாதங்களில் பூனாவிலிருந்து ஓர் கடிதம் பயிற்சிக்கா பூனாவில் இருக்கிறேன் என்று. பிறகு மாறி மாறி ஒவ்வொரு இடங்களிலிருந்து அவளுக்குக் கடிதம் எழுதிய வண்ணமாக இருந்தான் செல்லப்பா.
நான்கு ஆண்டுகள் கழித்து. அம்பாலவில் போஸ்டிங், ஊர் ஊராக மாறி மாறி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது ஒரு மாதிரியாக உள்ளது ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்துத் திருமணத்திற்கு நீயும் மாமாவும் ஏற்ப்பாடுகள் செயுங்கள் என்று எழுதியிருந்தான்.
பிறகு செல்லப்பா அவனது மாமா மரணமடைந்த செய்தியை கேட்டு ஊர் வந்தான். காரியங்களெல்லாம் முடிந்து பத்து பதினைந்து நாட்கள் ஆனவுடன் அவனது அம்மா அவனுக்கு மங்களத்தைத் தேர்வு செய்தாள். அவன் நல்ல உயரமான ஆள் ஆனால் மங்களம் குள்ளமானவள். பொருத்தம் சற்றுக் குறைவு. ஆனால் வேறு வழயில்லை சொந்தங்கள் அனைவரும் ஒன்ற கூடி முடிவெடுத்ததால் அவனால் மாற்றிக் கூற முடிவில்லை. மங்களத்தைத் திருமணம் செய்துகொண்டான்.
அவனது திருமணத்தில்தான் மங்களத்தின் குடும்பத்தினரால் பெரிதும் போற்றப்படும் ஓர் மகான் அவரது பெயர்தான் அம்பாகடாட்சம். அவரது மனைவியுடன் இவர்களது திருமனத்திற்கு வருகை புரிந்திருந்தார். அம்பாகடாட்சம் ஈஸ்வரி பக்தர் எப்போதும் ஈஸ்வரி ஈஸ்வரி என்று சொல்லிக்கொண்டே இருப்பவர். அவரிடம் எப்போதும் இவர்களுடைய குடும்பம் அருள் வாக்குக் கேட்டுத்தான் எந்தொரு முக்கியமான முடிவையும் எடுப்பார்கள்.
மங்களத்தையும் மாப்பிள்ளையையும் ஆசீர்வதிக்க வந்திருந்தார் அம்பாகடாட்சம் மற்றும் அவரது மனைவி.
திரு தி.ஜா கதைக்கு “அடி” என்று வைத்திருக்கிறாரே என்னவாக இருக்கும் என்று பக்கங்களைப் புரட்டினேன் ஆனால் சுமார் நாற்பதிலிருந்து ஐம்பதாவது பக்கத்தைப் படிக்கும் போதுதான் நமக்கு விளங்கும் ஆசிரியர் “அடி” என்று ஏன் கதையின் தலைப்பாக வைத்திருக்கிறார் என்று. ஆம் அம்பாகடாட்சம் மங்களத்தின் முதுகில் அடி அடியென்று அடித்துத் தட்டி ஆசீர்வாதம் செயவதால்தான்.
பிற்பாடு இதே அடிதான் ஒருவது தவறான நடவடிக்கையைத் திருத்த உதவுகிற மாதிரி அமைத்திருக்கிறார் ஆசிரியர்.
பட்டு, சிவசாமி ஏழ்மையில் கஷ்டபடுகிறார்கள், தையும்மாளின் கண் ஆப்ரேஷன் போது பட்டு வந்திருந்து தையும்மாளை முழுமையாகப் பார்த்தகொண்டாள். பட்டுவின் கணவனுக்கு ஒழுங்கான வேலை இல்லை, எந்த வேலையிலும் அவனால் நிரந்தரமாக இருக்க முடிவில்லை பாதியிலேயே வந்துவிடுவான். தையும்மாளின் வலியுறுத்தலின் பேரில் செல்லப்பா சிவசாமி மற்றும் பட்டுவை தங்களுடன் கூட்டிச்செல்கிறார். சிறிது காலம் மங்களத்தமாளுக்கு உதவியாக இருக்கிறார்கள் அங்கு இருக்கும் மக்கள் பேசும் பாஷையைல்லாம் கற்றுக்கொண்டனர். சிறிது காலம் கழிந்து செல்லப்பா சிவசாமிக்கு ஒரு நல்ல வேலையை வாங்கிக் கொடுக்கிறார்.
முடிவுரை
‘அடி’ என்பதற்கு விளக்கத்தை நாம் கதையை முழுமையாகப் படிக்கும் போது தெரியவரும். ஒருபுறம் ஆசீர்வாதமாக வழங்கப்படும் ‘அடி’, மறுபுறம் ஒருவரின் தவறான போக்கைத் திருத்த வாழ்க்கை கொடுக்கும் ‘அடி’ என இருவேறுபட்ட பொருளை இத்தலைப்பு தன்னுள் கொண்டுள்ளது. தி.ஜா அவர்கள் மட்டும்தான் இதுபோன்று ஒரு கதையினை எழுத முடியும் என்பதில் ஐயமில்லை, ஏனெனில் உலகில் நடக்காததை அவர் எழுதவில்லை. இங்கு இந்தச் சமுகத்தில் நடந்தவை அல்லது நடப்பவையே அப்போதே அவர் தன் எழுத்தின் மூலம் நமக்குப் கொடுத்திருப்பார். ஆக, ‘அடி’ என்னும் இக்குறுநாவல், தி.ஜானகிராமனின் எழுத்தாளுமைக்கும், மனித வாழ்வின் ஆழங்களைப் படம் பிடித்துக் காட்டும் அவரின் திறனுக்கும் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
எழுதியவர் :
✍️ – லோ.பாலமுருகன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளதிற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

