திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை

நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கண்களில் கண்ணீரை வர வைத்த கதையின் அமைப்பு நம்மையும் தூண்டுகிறது சில விடுதலை ஈடுபாடுகளில் அர்ப்பணித்துக் கொள்ள …
இக்கதை களம் கண்ணீருடன் கலங்க வைக்கிறது காலத்தில் இன்று …
கதைக்களம் 1987–களில் மலைக் கிராமத்தின் வளத்தை சுரண்டுவதற்காக அரசியல்வாதிகள் மற்றும் சில சமூகத் துரோகிகள் ஒரு கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக மலைவாழ் மக்களையும் வளத்தையும் அழித்து வருவதை எதிர்த்து அங்கு ஒரு கூட்டம்
அரசுக்கு எதிராக மலைவாழ் மக்கள் படை மூன்று மாவட்டங்களில்
எதிர் தாக்குதலை தாக்குவதற்கு தயாராக உள்ளதை அறியும் காவலர்கள் அவர்களை பிடிப்பதற்காகவே தன் பணியை அந்த மலை கிராமத்தில் மேற்கொள்கின்றனர் ..
மக்கள் படையை அழிப்பதற்காக மிகப்பெரிய தாக்குதலை ஏற்படுத்த காவலர்களை அமைத்தது மலைப்பகுதியில் ..
1* உண்மை மாறாமல் தன் வேலையே தெய்வம் என்ற நோக்கில் ஒரு காவலரின் கண்ணியத்தன்மை கட்டுப்பாடு மனப்பான்மை இரக்க குணம் அனைவரும் சமம் எனும் உள்நோக்கத்துடன் தன் பணியை செய்ய கிளம்புகிறார் …
படத்தின் ஆக சிறந்த முதல் கட்டமே ரயில் விபத்தின் காட்சிகள் கலங்க வைக்கிறது …
சூரி-குமரேசன்  தன் பணியை செய்ய நீண்ட மலை பயணத்தின் முடிவில் கிராமத்தை அடைந்த பின் தன் பணியை மேற்கொள்கிறார் ஓட்டுனராக …
பணியில் சேர்ந்த பின் தன் மேல் அதிகாரி கூறும் வேலைகளை செய்து வருகிறார்…இதில் இவருக்கான  வேலைகள் இல்லாமல் மன உளைச்சல் வேலைகளை அதிகமாக செயல்படுகிறார் ..
அதையும் வழிகளுடன் கடந்து தன் பணியை தினமும் முடிக்கிறார் …
மலை கிராமத்தில் ஒரு முடியாத பாட்டியின் மருத்துவ உதவியின் போது அப்பாட்டியின் பேத்தியின் சந்திப்பு அங்கே காதலையும் மனிதாபிமானத்தையும் ஏற்படுத்துகிறது இருவருக்கும் …
அங்கு அரசியல்வாதிகள் மக்கள் வளத்தையும் மலையின் வளத்தையும் சுரண்டுவதற்கான திட்டத்தை தொடங்கி கொண்டிருப்பது தெரியாமல்
குமரேசன் தன் காவல் பணியை செய்து கொண்டிருந்தார் …பிறகு அந்தப் பெண்ணின் கூறுகளில் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்கிறார் கொஞ்சம் கொஞ்சமாக ..
வழக்கமாக பணியில் இருக்கும் போது குமரேசனை சந்தித்த அவள் தனக்குத் திருமணம் ஆக உள்ளது ஆகையால் நாங்க வர வேண்டும் என்று கூறினால் …
பிறகு அங்கு சென்ற குமரேசன் இருவர் முன்னிலையும் மகிழ்ச்சியுடன் ஆசீர்வாதம் செய்தார் …
பிறகு சில நாட்களுக்கு பிறகு அவளிடம் கேட்ட பொழுது அவன் சரியில்லை தன் மனப்பான்மையை புரிந்து கொள்ளாமல் தன் நிலையை மட்டும் புரிந்து கொள்கிறான் என்று உரைத்தாள் குமரேசனிடம் அவள் …
இங்கும் துயரத்துடன் இருக்கும் குமரேசனுக்கு ஒரு ஆறுதல் கிடைத்து விட்டது என்று நினைத்து தன் காதல் நயத்தில் விழுகிறான் ..
?
2* பவானி ஸ்ரீ- இருவரும் நல்ல புரிதல் ஏற்படுத்தி தன் காதல் நிலையில் தன் கஷ்டங்களை பகிர்ந்து கொண்டு குமரேசன் தன் காவல் பணியையும் அப்பெண் தன் பாட்டியின் நிலையின் ஊர் மக்கள் நிலையிலும் தன் வாழ்க்கை வலியையும் கடந்து கொண்டிருக்கிறார்கள் இருவரும் ….
அப்பொழுது அன்றொரு பெண்ணை சுட்டு வீழ்த்துவதை கண்டு குமரேசன் மேல் அதிகாரியிடம் எதிர் கேள்வி விணைவியதால் குமரேசனுக்கு மிகவும் பனி சுமையை அதிகப்படுத்தினர் தூக்கம் இல்லாமல் அதை தாங்கி கடந்து தன் பணியை செய்து கொண்டிருந்தான் …
இதில் குமரேசனம் காதலியும் வாழ்க்கையைப் பற்றி நினைத்து பயந்தனர் காரணம் காவலுக்கும் மலைவாழ் மக்களின் நிலைமைக்கும் சம்பந்தம் இல்லையென்று ஊர் மக்கள் கூறுவார்கள் என்னும் நோக்கத்தில் இருவரும் சிந்தித்தார்கள்
ஆனால் இருவரும் தன் அன்பின் இயல்பு கெடாமல் இருக்க காதலை தொடங்கினார்கள் எதை வேண்டுமானாலும் எதிர்த்து போராடலாம் என்று காதலில்  …
இங்கு ஆகச்சிறந்த காதல் பாடல்கள் வரிகள் ஒவ்வொருவர் மனதையும் வென்று கொன்றது
அதற்கிடையே மலைவாழ் மக்கள் படை குழு திடீரென்று காவல்துறையை சுற்றி வளைத்து அன்று காவலர்களை முற்றுகையிட்ட சாலை அமைப்பதை எதிர்த்தனர் …இதனால் அங்கு பெரும் விபத்து ஏற்பட்டது நாலு காவலர்கள் வெடிகுண்டு விபத்தில் இறந்தனர்…
3* இதை கேள்விப்பட்ட  அரசாங்கம் அதிக காவலர்களை மலை கிராமத்தில் அமைத்து …அங்க தன்னலமற்ற மலைவாழ் மக்களையும் சிலரையும் சுட்டு வீழ்த்தியது …அங்கே யார் சென்றாலும் மக்கள் படை  சேர்ந்த வர்கள் என்று பலரையும் சுட்டு வீழ்த்தினார்கள் காவலர்கள் ..
இதைக் கண்டு அரசியல்வாதி கூட்டம் ஒன்று நடைபெற்றது மக்களை வழிநடத்த மக்கள் படை கூட்டத்தில் யாரும் இருக்கக்கூடாது என்று உள்நோக்கத்தில் …
ஆனால் மலைவாழ் மக்கள் தன் வாத்தியாருக்கு உயிரும் உயிரையும் அர்ப்பணித்தனர் தன் வளத்தை விட்டுக் கொடுக்காமல் காப்பாற்ற வேண்டும் என்று தன் சந்ததிகளுக்கு …
வாத்தியார் – விஜய் சேதுபதி இந்த கதை மாந்தரே மலைவாழ் மக்கள் கூட்டத்தின் தலைவர் மக்கள் படையை வழி நடத்தி மக்களுக்காக தன் மலைகளை வளத்தை  பாதுகாப்பை மேம்படுத்த போராடிக் கொண்டிருக்கும் போராளி …
வாத்தியாரை பிடிக்கவே அரசாங்கம் அனைத்து கட்டுப்பாடுகளையும் அழித்து மலைவாழ் மக்களின் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் வாத்தியார் எங்கே இருக்கிறார் என்று பலரையும் சித்திரவதை செய்ய தொடங்கினார்கள் …
4* அன்று மலைவாழ் மக்களை காவலர்கள் சிறைபிடித்த ஆண் பெண் என இருவர்களையும் அழைத்து வந்தனர்கள்..காவலர்கள் தளத்திற்கு ..
அங்கு ஆண்களையும் பெண்களையும் தனியாக நிற்க வைத்து காவலர்கள் தன் சுய ரூபத்தை காட்டத் தொடங்கினார்கள் …
எதிர்த்து கேள்வி கேட்கும் ஆண்களை அங்கே அடித்து துன்புறுத்தினார்கள் ..
ஆண்களை விட பெண்களை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள் சொல்ல முடியாத கதை இது ..
ஆம் பெண்களை நிர்வாணப்படுத்தி அந்த ஆய்வாளர் மேற்கொள்ளும் விசாரணை என்பது மிகவும் மோசமாகவும் கொடுமையாகவும் உள்ளது …அதில் பெண்களை சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டியும் தாலிகளை அருத்தும் அவர்கள் கண்களைக் கட்டி கைகளை உயர்த்தி கொடுமைப்படுத்தினார்கள் …அடித்து அப்பாவி பெண்களை வாத்தியார் எங்கே என்று விசாரணையை மேற்கொண்டனர் …
அங்கு குமரேசனின் காதலியையும் துன்பப்படுத்தினார்கள்.
இதைக் கண்ட குமரேசன் மிகவும் வருத்தம் அடைந்த நிலையில் ஓடி வந்து மேல் அதிகாரிகளிடம் முறையிட்டும் அவனை அவமானப்படுத்தினார்கள் ..குமரேசன் பலமுறை கேட்டும் அவர்கள் அவனை அலைய விட்டார்கள் ….
பிறகு நீண்ட தூர ஓட்டத்தின் முடிவில் மேலதிகாரியை நேரில் சென்று அங்கும் சந்திக்க முடியாமல் தன் சத்தத்தின் உச்சத்தில் மேல் அதிகாரியை சந்தித்தார் குமரேசன் …
பிறகு மேல் அதிகாரியிடம் அங்கு நடக்கும் சம்பவங்களை கூறி விளக்கினார் …
எனக்கு வாத்தியார் இருக்கும் இடம் தெரியும் என்னுடன் பத்து காவலர்களை அனுப்புங்கள் நான் சென்று கைது செய்து வருகிறேன் என்று கூறினார் குமரேசன் …
அதற்கு மேல் அதிகாரி அங்கு உனக்கு தெரிந்த பெண்  யாரேனும் இருக்கிறார்கள் என்று கூறினார் ..அதற்கு குமரேசன் ஆமாங்கய்யா ..என்று கூறினார் ..
5* முறையிட்ட பின் குமரேசன் உடன் சில காவலர்களை அனுப்பி வைத்தார் மேல் அதிகாரி …கிராமத்துக்குள் சென்ற குமரேசன் மேல் அதிகாரி இருக்கும் இடத்தை நோக்கி சென்றார் அங்கு வாத்தியாரின் வீட்டு முன்பு நின்று தன்னோட்டத்தை எதிர்பார்த்திருந்து கொண்டிருந்தபோது …
வாத்தியாரின் மக்கள் படையினர் எதிர் தாக்குதலை நடத்தினார்கள் ..பிறகு காவலர்களும் எதிர் தாக்குதல் என்ன நடத்தினார்கள் ..இதில் காவலர்களுக்கும் மக்கள் படையினருக்கும் பலத்த இழப்புகள் ஏற்பட்டு கொண்டிருந்தது ..
குமரேசன் தன் விடாமுயற்சியால் பல விபத்துகளை கடந்து வாத்தியாரை கண்காணித்து பின்னோக்கியே ஓடிக்கொண்டிருந்தான் ..பிறகு வாத்தியார் மக்கள் படை தலைவர் ஒரு வீட்டினுள் சென்ற பொழுது அங்க அந்த வீட்டின் பெண் அவரை அழைத்து வைத்துக் கொண்டார் ..
பிறகு குமரேசன் கதவின் முன்பு நின்று வரவில்லை என்றால் சுட்டு விடுவேன் என்று கூச்சலிட்டார் ..அந்த வீட்டின் பெண் அழுது பிரண்டும் அவர் அனுமதிக்கவில்லை
பிறகு வாத்தியாரே அந்த பெண்ணை சமாதானப்படுத்தி விட்டு பிறகு சரணடைந்தார் குமரேசனிடம் …
துப்பாக்கி முனையில் கைது செய்து வாத்தியாரை குமரேசன் அழைத்து வந்தார்
….
ஆனால் அழைத்து வந்த நாம் செய்தது தவறு என்று பிறகு தான் குமரேசனுக்கு புரிய தொடங்குகிறது மலைவாழ் மக்களுக்காக போராடிக் கொண்டிருந்த தலைவரை கைது செய்து தவறு செய்து விட்டோம் என்ற உள்நோக்கத்தில் குமரேசன்
இக்கதையின் முடிவு நிலையில் தவறை உணர்ந்து கொண்டே கதையை முடித்து விடுகிறார்கள்
ஆகையால் இதன் இரண்டாம் பாகம் இன்னும் ஆகச்சிறந்த பாகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் …
இப்படம் வரலாற்றில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் ஒரு ஆகச் சிறந்த படமே ….!! உண்மை சம்பவங்களின் உண்மைத் தன்மை மாறாமல் பிரதிபலிக்கிறது …!!
திரைப்படம் : விடுதலை
இயக்கம்  : வெற்றி மாறன்
நன்றிகளுடன் ….
கவிஞர் ம.செல்லமுத்து
 எம்.ஏ.பி.எட்..
நூத்தப்பூர் அஞ்சல்
பெரம்பலூர் மாவட்டம்
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *