திரிசாரணீயம்- thirisaraniyam

 

சமூகத்துக்கு உதவும் இயக்கம்

சாரணர் இயக்கம்-ஸ்கவுட்ஸ் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பள்ளிகளில் என்.சி.சி., பசுமைப் படை போல் சாரணர் இயக்கமும் புகழ்பெற்ற ஒன்று. அந்தக் காலத்தில் நிறைய பள்ளிகளில் சாரணர் இயக்கத்தில் மாணவர்கள் இருந்தனர். மற்றவர்களுக்கு உதவுதல், நேரம் தவறாமல் இருப்பது, அவசர கால உதவிகள் போன்றவை சாரணர் இயக்கத்தில் பழக்கப்படுத்தப்படுகின்றன. முகாம் அமைத்துத் தங்குவது, மாணவர்களே வேலைகளைப் பகிர்ந்துகொண்டு செய்வது, தலைமைப்பண்பை வளர்த்தெடுத்தல் போன்றவையும் சாரண இயக்கத்தில் சிறப்பாகக் கற்றுத்தரப்படுகின்றன. பள்ளிக் காலத்தில் சாரண இயக்கத்தில் சேர முடியாமல் போய்விட்டதே என நினைப்பவர்களும் வளர்ந்த பிறகு சாரணர் இயக்கத்தில் சேர்ந்து செயல்பட முடியும். அதற்காக உருவாக்கப்பட்டதே திரிசாரணீயம்.

இது குறித்து ‘சாரணர் இயக்கத் தந்தை’ பேடன் பவுல் எழுதிய நூலை, தமிழில் தந்துள்ளார் மொழிபெயர்ப்பாளர் கி.ரமேஷ். இந்த நூல் திரிசாரணர் இயக்கத்தைப் பற்றி விரிவான தகவல்களையும் தெளிவான புரிதலையும் வழங்குகிறது. சமூகம் தொடர்ந்து இயங்கவும் மேம்படுவதற்கும் கூட்டுச் செயல்பாடுகள் அவசியம். அந்தத் தேவையைப் பூர்த்திசெய்யும் அமைப்புகளில் ஒன்று திரிசாரணர் இயக்கம் என்பது நன்கு விளக்கப்பட்டுள்ளது.

 

நூலின் தகவல்கள் 

நூல் :  திரிசாரணீயம்

ஆசிரியர் : ராபர்ட் ஸ்டீவன்சன் ஸ்மித் பேடன் பவுல் பிரபு

தமிழில் : கி.ரமேஷ்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 72 99 579627 , 044-24332924

விலை : ரூ.100

 

நூலறிமுகம் எழுதியவர் 

-நேயா

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *