மூத்த எழுத்தாளர் துடுப்பதி ரகுநாதன் எழுதியுள்ள “திரும்பிப் பார்க்கிறேன்” (வாழ்க்கை வரலாற்று நூல்) என்ற நூலை சமீபத்தில் வாசித்தேன்.
அறுபது ஆண்டுகளாக எழுத்துலகில் தடம் பதித்து சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என எழுதி க்கொண்டிருக்கும் தனது அனுபவத் தோடுதான் சந்தித்த எழுத்துலக பிரபலங்களைப் பற்றியும் தனது நூலில் மிக சுவாரஸ்யமாக தெரிவித்துள்ளார்.
இந்நூலில் வெளிமாகியுள்ள அனைத்து செய்திகளும் முகநூலில் அவரால் எழுதப்பட்டு பின்பு அச்சில் நூலாக வெளியாகியுள்ளது. ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்ற இந்நூலுக்கு பிரபல க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கியிருப்பது
நூலுக்கு பெருமை சேர்க்கிறது.
துடுப்பதி ரகுநாதன் அவர்கள் எழுதியுள்ள ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்ற நூல் தன் வாழ்க்கை வரலாற்றை தெரிவிப்பதாக இல்லாமல், தன் வாழ்நாளில் தான்
சந்தித்து மகிழ்ந்த பிரபலங்களைப் பற்றியே இந்நூலில் தெரிவித்துள்ளது வித்தியாசமாக உள்ளது..
தனது 80 வயதிலும் இன்றும் இதழ்களுக்கு சிறுகதைகள், கட்டு ரைகள் எழுதி வருகிறார். தனது அனுபவங்கள் மற்றவர்களுக்கும் பயன்படட்டும் என்ற நோக்கத்தில் இந்நூலை எழுதியுள் ளதாக தனது முன்னுரையில் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர்கள் நா.பார்த்த சாரதி, தி.க.சி, ஜெயகாந்தன் ஆகியோரை நேரில் சந்தித்ததையும் திரைப்பட பாடாலாசிரியர் கவிஞர்.முத்துலிங்கம் அவர்களிடம் இன்றளவும் நட்பில் உள்ளதை யும் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்களின் பாக்யா இதழில் தான் 100 சிறுகதைகள் எழுதியுள்ளதையும் அதனை பாராட்டி, தன்னோடு ஒரு மணி நேரம் வரை இயக்குனர்
கலந்துரையாடியதையும் தனது நூலில் எழுதியுள்ளார்.
‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்ற இந்நூலை ‘வசந்தா பிரசுரம்’ 384 பக்கங்களில் ₹.300/ விலையில் ஜனவரி -2021-ம் ஆண்டில் வெளியிட்டுள்ளது. வளரும் எழுத்தாளர்கள் அவசியம் வாங்கி படிக்கவேண்டிய நூலாக இது அமைந்துள்ளது.
நன்னிலம் இளங்கோவன்,
பொன்னி நகர்,
பட்டமங்கலம்,
மயிலாடுதுறை -609001
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்