திருப்பாவை
கைத்தலம் பற்ற கனாக்கண்ட
தோழி ஆண்டாள்
வில்லிபுத்தூரிலிருந்து புறப்பட்டாள்
காவிரிக்கரை நோக்கிப் பயணம்.
நீரின் அமைதியான வேகம்
வெண்பனிப் பொழிவு
பெண்கள் நீராடும் மண்டபம்
கலகலப்பான பேச்சு
நாமாவளி உச்சரிப்பு
மேகங்கள் சூழ்ந்து உயர்ந்தோங்கிய
ரங்கன் கோபுரம் நுழைவாயில்
பக்தர்கள் வரிசை
காணும் அழகிய காட்சிகள்
விழிப்பு நிலையில் துயிலும் ரங்கன
அருகில் துயில் மறந்து அமர்ந்து
” காமாஹா – காமக்ருத்: காந்த:
காம: காமப்ரத: ப்ரபு ” என்று
விஷ்ணு சஹஸ்ரநாமம் உச்சரிப்பு சதாநேரம்.
ஆண்டாள் அரூபமாய்
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நாள்
திருப்பாவை பாடும் கூட்டம்
பலரின் மௌன தரிசனம்
அரங்கனை விட்டு அகலாத மகாலட்சுமி தேவி
” நல்லா தரிசனம் பண்ணுங்க” என்றாள்
என்னருகில் நின்ற மனைவி
அப்போது எதை தரிசித்தன
தீட்சண்யமான என் கண்கள்?..

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

