இந்த நூற்றாண்டின் இந்திய ராமானுஜன் பாமா சீனிவாசன் | This century's Indian Ramanujam is Bhama Srinivasan(Mathematician) - Ayesha Era. Natarasan - https://bookday.in/

இந்த நூற்றாண்டின் இந்திய ராமானுஜன் பாமா சீனிவாசன்

தொடர்- 5 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

 இந்த நூற்றாண்டின் இந்திய ராமானுஜன் பாமா சீனிவாசன் (Bhama Srinivasan)

தூய கணிதம் குறித்த ஆய்வில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த இந்தியாவின் தனிப்பெரும் கணித மேதை பாமா சீனிவாசன். வரையறுக்கப்பட்ட குழுக்கள் எனவும் கணித பிரதிநிதித்துவ கோட்பாட்டின் தன் பணிக்காக அறிய பல விருதுகளை பெற்றுள்ள கணிதவியலாளர் அவர். 1990களில் எம்மாநாதர் என்னும் கணித மேதையின் நினைவாக பல விரிவுரை கௌரவங்கள் வழங்கப்பட்டன. அத்தகைய கௌரவத்தை அடைந்த முதல் உலக கணிதவியலாளர் என்கிற பெருமையை பாமா சீனிவாசன் (Bhama Srinivasan) பெற்றார். உலக அளவில் வெளிவரும் பல்வேறு கணித ஆய்வு மற்றும் அறிவியல் குறித்த சஞ்சிகைகளில் இந்த செய்தி பெரிய அளவில் அன்று விவாதிக்கப்பட்டது.

மான் செஸ்டர் பல்கலைக்கழகத்தில் J A GREEN என்கிற கணிதவியல் நிபுணர் பாமா சீனிவாசனின் பால் பிரதிநிதித்துவம் குறித்த கணித வரையறைகளை ஆய்வு செய்து உலகளவில் அதை அறியவைத்தார். சிகாகோவில் உள்ள ILLIONIS பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் எமரிட்டா என்னும் கணித நிபுணர் பாமா சீனிவாசனின் கணித கண்டுபிடிப்புகள் குறித்து பல விரிவான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பாமா சீனிவாசன் பிரபலமான கணிதவியல் நிபுணர் PAUL FONG உடன் இணைந்து பல அரிய கணித ஆய்வுக் கட்டுரைகளை கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளார்.

MODULAR REPRESENTATION THEORY என்கிற துறை பாமா சீனிவாசனின் நிபுணத்துவம் கொண்ட கணிதத்தின் புதிய துறை ஆகும். மாடுலர் பிரதிநிதித்துவ கோட்பாடு என்று அதை தமிழில் அழைக்கிறார்கள். இது பகா எண்கள் நேர்மறை குணாதிசயத்தின் K கே புலத்தின் மீது வரையறுக்கப்பட்ட குழுக்களில் நேரியல் பிரதிநிதித்துவங்களை ஆய்வு செய்யும் பிரதிநிதித்துவ கோட்பாட்டின் ஒரு பகுதியாகும். குழு கோட்பாட்டின் பயன்பாடுகள் உடன்  இயற்கணித வடிவவியல் குறியீட்டு கோட்பாடு சேர்க்கை இயர் மற்றும் எண் கோட்பாடு போன்ற கணிதத்தின் பிற கிளைகளில் பதித்துவங்கள் குறித்து இயற்கையாகவே இந்த இயல் ஆய்வு செய்கிறது. 1902 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட புகார்கள் மீதான பிரதிநிதித்துவ கோட்பாட்டின் ஆரம்பகால வேலை டிக்சன் என்பவரால் வழங்கப்பட்டது. இயற்கணிதம் என்கின்ற புதிய ஆர்டினியன் மோதிரக் கோட்பாடு நோக்கி இந்த கண்டுபிடிப்புகள் விரைகின்றன. இன்று இந்த கோட்பாடு இல்லை என்றால் நம்முடைய ATM உட்பட இணைய பணபரிவர்த்தனை நடப்பதற்கு சாத்தியமில்லை.

Bhama Srinivasan

இந்தக் கோட்பாட்டில் பாமா சீனிவாசனின் பங்கு குறித்து. உலகளவில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மற்றும் ILLIONIS பல்கலைக்கழகத்தில் பாமா சீனிவாசனின் கண்டுபிடிப்புகள் குறித்து பாடங்கள் வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா கணிதவியல் நிறுவனம் சார்பாக அவர் பலமுறை தன்னுடைய கண்டுபிடிப்புகள் குறித்து கணித உரைகள் நிகழ்த்தியுள்ளார். பாமா சீனிவாசன் தீவிரமாக இயங்கும் மற்றொரு கணித துறை DELIGNE-LUSZTIG கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோட்பாடு பொதுவில் 1976 ஆர் ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டாலும் வரையறுக்கப்பட்ட எளிய குழுக்களின் கணிதம் LIE வகையில் பொருத்தப்படுவதற்கு பாமா சீனிவாசனின் அணுகு முறையில் பெரிய அளவில் உதவியிருக்கிறது.

இயற்கணிதக்குழு என்று உலக அளவில் அறியப்படும் இந்த துறை குறித்த விரிவான ஆய்வாளர்களின் பட்டியலில் பாமா சீனிவாசனின் பெயர் இடம் பெற்றுள்ளது. கணிதம் அனைத்து துறைகளுக்கும் தாய் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய துறையை இயற்பியல் ஓடு இணைக்காவிட்டால் இயற்பியலின் கண்டுபிடிப்புகளின் நவீன அம்சங்கள் எந்த விதத்திலும் நம்மால் பரிசோதித்துப் பார்க்க முடியாதவையாக மாறிவிடும். கணிதவியல் மட்டுமல்ல வேதியல் கண்டுபிடிப்புகள் இன்று நம் அன்றாட பொருட்களை உற்பத்தி செய்கின்றன. மருத்துவத் துறையின் கண்டுபிடிப்புகள் பல்வேறு கருவிகளை அடிப்படையாக கொண்டவை இவை அனைத்தையும் கடிதத்தோடு இணைக்கின்றது.

Higher rep course poster

 

 

இயர்கணித ஆராய்ச்சியை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் சென்ற பெருமை பாமா சீனிவாசனை சாரும். பாமா சீனிவாசன் சென்னையில் பிறந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணிதம் பயின்றவர். பிறகு தனது கணித முதுகலை பட்டத்தையும் அதே பல்கலைக்கழகத்தில் படித்தார் . 1960ல் தன்னுடைய முனைவர் பட்டபடிப்புக்காக இங்கிலாந்து சென்றார். கீலே பல்கலைக்கழகத்தில் முதலில் கணித விரிவுரையாளராக தனது தொழில்முறை கல்வி பணியை தொடங்கி அவர் இங்கிலாந்திலேயே தங்கி இருந்தார். 1965 முதல் அவர் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பெல்லோஷிப் பெற்று முனைவர் பட்டம் வென்றார். தான் படித்த சென்னை பல்கலைக்கழகத்தின் ராமானுஜன் கணித கல்வி நிறுவனத்தில் கற்பிப்பதற்காக அவர் இந்தியாவிற்கு திரும்பினார். கிளார்க் பல்கலைக்கழகம் மாஸேசூட்டஸ்  பணிபுரிய அவரை அழைத்தது. அவர் நியூ ஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மேம்பட்ட கல்வி நிறுவனத்தில் ஒரு உறுப்பினராக இணைந்தார். இந்த மேம்பட்ட அறிவியல் நிறுவனத்தில் முக்கால உறுப்பினர்களில் ஒருவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்பது குறிப்பிடத்தக்கது.

ILLIONIS பல்கலைக்கழகத்தில் தன்னுடைய நீண்டகால பணியை தொடங்கினார். கிளாசிக்கல் குழுக்களின் பிரதிநிதித்துவ கோட்பாட்டில் தனக்கென்று மிக முக்கிய கண்டு பிடிப்புகளை நிகழ்த்தினார். அமெரிக்கா கணிதவியல் சங்கம் என்று அழைக்கப்பட்ட ஒரு அமைப்பில் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெர்மனியில் உள்ள எசன் பல்கலைக்கழகம், சிட்னி பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியா,மற்றும் ஜப்பானிலுள்ள டோக்கியோவின் அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சர்வதேச அளவில் வருகை தரும் பேராசிரியர் பணி அவருக்கு வழங்கப்பட்டது. தனது துறையில் வெளிவந்த பல ஆய்வு இதழ்களுக்கு ஆசிரியராக இன்றும் அவர் பணியாற்றி வருகிறார். அல்ஜீப்ராவின் தொடர்களில் மோனோ கிராப்கள் என அவருடைய பணி தொடருகிறது. கணிதத்தில் பெண்களுக்கான சர்வதேச சங்கத்தில் அவர் ஆறு ஆண்டுகள் தலைமைப் பொறுப்பை வகித்தார்..

பாமா சீனிவாசனின் கண்டுபிடிப்புகள் கணித தேற்றங்கள் இன்றைய நவீன அறிவியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. விண்வெளியில் நாம் பறக்கவிடும் செயற்கைக் கோள்கள் அனுப்புகின்ற, அது திரட்டுகின்ற பல்வேறு புள்ளி விவரங்களை ஆய்வு செய்து மிக வேகமாக தட்பவெட்பம் உட்பட பலவற்றின் முடிவுகளை அறிவிக்க பாமா சீனிவாசனின் தேற்றங்கள் உதவுகின்றன. பாமா சீனிவாசன் பல அரிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அறிஞர் எம்மா நாதர் கணிதத்தை உலகிற்கு அறிமுகம் செய்த பல பாடபுத்தகங்களை பாமா சீனிவாசன் எழுதி இருக்கிறார். உலக பெண் கணிதமேதைகளை புகைப்படங்களாக கொண்டு ஒரு சிறப்பு சீட்டுக்கட்டு வெளியிடப்பட்டது. ஒரு சீட்டுக்கட்டில் மொத்தம் 52 அட்டைகள் மட்டுமே இருக்கமுடியும்…

அன்று முதல் இன்று வரை உலக அளவில் பெயர் பெற்ற பெண் கணிதவியல் நிபுணர்களின் புகைப்படங்கள் இடம் பெற்ற உலக அளவில் வெளியிடப்பட்ட அந்த ஒரே சீட்டுக்கட்டில் பாமா சீனிவாசனின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது என்பது எவ்வளவு பெரிய பெருமை. சென்னை பல்கலைக்கழகத்தில் இளம் கணித பட்டப்படிப்பையும், முதுகலை கணிதம் மிகுந்த ஆர்வத்தோடு கல்வி கற்று ஒருவர் உலக அளவிலான கணித கோட்பாட்டியல்க்குள் நுழைய முடியும் என்பதற்கு பாமா சீனிவாசன் ஒரு மிகப்பெரிய உதாரணமாகும். இந்த நவீன ராமானுஜனை போற்றுவோம். கணிதத்தில் மேலும் மேலும் அடுத்த தலைமுறையை இணைப்போம்.

 

கட்டுரையாளர் :
Chemical Biologist Expert and Scientist Govindasamy Mugesh (கோவிந்தசாமி முகேஷ்) | ஆயிஷா இரா. நடராசன் (Ayesha Era Natarasan) | Thyroid Hormone (தைராய்டு ஹார்மோன்) - https://bookday.in/
                  ஆயிஷா இரா. நடராசன்

 

 

 

 

 

 

 

 

 

 

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்  : தைராய்டு ஹார்மோன் செயல்பாட்டின் வழிமுறை வித்தகர் கோவிந்தசாமி முகேஷ்

ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும் : thamizhbooks.com

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Show 2 Comments

2 Comments

  1. N.Latha

    Very useful and to read in our mother tongue.I felt very happy to read .Thank u very much sir.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *