இப்படி பண்ணிட்டீங்களே பீட்டா மேடம்!
ஆயிஷா இரா நடராசன்
பீட்டா ஹாலஸ்ஸி(Scientist Beata Halassy) ஒரு வைராலஜிஸ்ட் குரேஷியா நாட்டில் உள்ள ZAGREB பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தில் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் அவரை குறித்த ஒரு செய்தி உலகத்தையே உலுக்கி எடுத்துவிட்டது. தன்னுடைய சொந்த ஆய்வகத்தில் தானே வளர்த்த ஒரு வகைவைரஸ்களை தனக்குதானே மருந்தாக செலுத்திக்கொண்டு சுயபரிசோதனையின் மூலம் தனக்கு ஏற்பட்ட மார்பக புற்றுநோய்க்கு(breast cancer) வெற்றிகரமாக அவர் சிகிச்சை அளித்து கொண்டார். நேச்சர் ஆய்விதழில் சமீபத்தில் வெளிவந்த அவருடைய கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சியாளர்களையும் மருத்துவர்களையும் குறிப்பாக மருந்துகம் பெனிகளையும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகிஉள்ளது..
பீட்டா அம்மையார் 2020 ஆண்டில் தன்னுடைய 49வயதில் நீக்கப்பட்ட இடது மார்பகத்தில் மீண்டும் புற்றுநோய் உருவாவதை கண்டுபிடித்தார்.ஏற்கனவே நோய்காரணமாக இடது மார்பகம் அகற்றப்பட்ட நிலையில் இந்த இரண்டாவது மறுநிகழ்வு அவருக்கு மீண்டும் கீமோதெரபியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சூழலை ஏற்படுத்தியது. ஜாக்ரேப் பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்ட் ஆய்வாளர் அதுவரை நிரூபிக்கப்படாத தானே கண்டுபிடித்த ஒரு சிகிச்சையை தனக்குத்தானே அளித்து கொள்ள முடிவுசெய்தார்.
அன்ஹோலிடிக் வைரோ தெரப்பி எனும் சிகிச்சை முறை ஆங்கோலிட்டிக் என்று அழைக்கப்படும் வைரஸ்களுடன் ஒருவருக்கு நடத்தப்படும் சிகிச்சை ஆகும். புற்றுநோயின் ஒரு குறிப்பிட்ட வகைபாட்டை இப்படியான சிகிச்சை முறைகள் கண்டிப்பாக சரிசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்ஹோலிடிக்வைரஸ் என்று அழைக்கப்படுகின்ற இவை நேரடியாக புற்றுநோய் கட்டிகளின்மீது செலுத்தப்படும் வைரசுகள் சம்பந்தமானது ஆகும். குறிப்பாக நமக்கு ஏற்படுகின்ற அம்மை வைரஸ் புற்றுநோய் கட்டிகளின்மீது நேரடியாக செலுத்தப்படும்பொழுது அவை அத்தகைய சூழ்நிலையில் ஒன்றுடனொன்று வினைபுரிந்து புற்றுநோய்சிகிச்சையில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது பரிசோதனை அடிப்படையில் தற்போது ஏற்கப்பட்டுள்ளது.OVT சிகிச்சை முறை என்று இதனை அழைக்கிறார்கள்.
இந்த சிகிச்சையை தான் பீட்டா அம்மையார் தனக்குத்தானே கொடுத்துக்கொள்ள முடிவு செய்தார். அதற்காக தான் பணிபுரியும் ஆய்வகத்திலேயே அவர் இம்மாதிரியான வைரசுகளை வளர்த்து எடுத்தார். சிகிச்சை அளிக்கப்பட்டு இடது மார்பகத்தையே இழந்து இழந்த நிலையில் மீண்டும் அதேஇடத்தில் புற்றுநோய் தோன்றுவதன் மூன்றாம் நிலையில் அவர் இத்தகைய முடிவை எடுக்கநேர்ந்ததாக அவருடைய ஆய்வுக்கட்டுரை தெரிவிக்கின்றது. இது மருத்துவத்துறையின் நெறிமுறைகள் பலவற்றை உடைதெரிகிறது என்பதால் உலகமே ‘என்ன பேட்டா மேடம் இப்படி செஞ்சுட்டீங்களே’ என்று அலறிக்கொண்டிருக்கிறது.
அவருடைய ஆய்வுக்கட்டுரையை வெளியிடாமல் செய்வதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அன்று தனக்குதானே சுயபரிசோதனை செய்து கொண்டதுடன் அடிப்படைகளை ஒரு பிரமாண்ட ஆய்வுகட்டுரையாக ‘ஐ ஆஃப் செயன்ஸ்’ இதழில் அவர் வெளியிட்டிருந்தார். இந்த கட்டுரையை வெளியிடுவதற்கு உண்மையிலேயே ஒரு துணிச்சலான ஆசிரியர் தேவைப்பட்டார் என்கிறார் பீட்டா ஹாலஸ்ஸி (Scientist Beata Halassy) . சிகிச்சை வெற்றி அடைந்ததோடு கடந்த நான்கு ஆண்டுகளாக தனக்கு புற்றுநோயின் அறிகுறிகூட இல்லை என்று முடிவுகளை அவர் வெளியிட்டபொழுது அதை வரவேற்பதா இல்லையா இப்படி சுயபரிசோதனை செய்து கொள்வது நெறிமுறைக்கு எதிரானதா இல்லையா என்று விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன..
அவர் OVT சிகிச்சை முறையில் நிபுணத்துவம் பெற்றவர் அல்ல. ஆய்வகத்தில் வைரஸ்களை வளர்ப்பதிலும் சுத்திகரிப்பதிலும் மட்டுமே நிபுணத்துவம் உள்ளவர். அப்படிபட்டவர் இந்த சுயபரிசோதனையை தேர்ந்தெடுத்தது சட்டப்படி சரியா என்கின்ற ஒரு விவாதம் தற்போது மருத்துவ ஆய்வுத்துறையில் உலகையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் வரலாற்றில் இப்படி நடப்பது முதல் முறையல்ல. மருத்துவதுறையில் தங்களைத்தாங்களே பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வது என்பது பல ஆண்டுகாலமாக இருந்துவரும் சிக்கல். தான்தனக்குதானே பரிசோதனை என்பது ஒரு விஞ்ஞானி தன் உடலை தானே விஞ்ஞான பரிசோதனைங்களுக்கு உட்படுத்துகின்ற நிகழ்வாகும். தற்போது வரை இம்மாதிரியான சோதனைகளின் மூலம்மிகவும் மதிப்புமிக்க மருத்துவத்தின் பல்வேறு நுணுக்கங்களை வெளிக்காட்டுகின்ற எதிர்பாராத நுண்ணறிவுகளை இவ்வகை ஆய்வுகள்வளர்த்தெடுத்து உள்ளன என்பதே உண்மை.
அதன் சமீபத்திய உதாரணம் நோர் மன்தகார்டு என்கிற அமெரிக்க விஞ்ஞானி நாசா விண்வெளி வீரர் அமெரிக்காகடற்படையில் கேப்டனாக இருந்தவர். STS-7 விண்வெளி பயணத்தின் பொழுது விண்வெளியில் இருந்த படிதனக்கு சில மருந்துகளை செலுத்திக்கொண்டு சுயபரிசோதனை செய்து உலக அளவில் கவனத்தை ஈர்த்தார். பிறகு கடும் விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டார். கோவிட் 19 காலத்தில் டியான்ஜின் பல்கலைக்கழகத்தில் வாங்ஜின்ஹாய் என்கிற நோய்தடுப்பு அறிஞர் விலங்குகளில் பரிசோதிக்கப்படாத கோவிட் 19 தடுப்பூசி ஒன்றை தானேகண்டுபிடித்து தனக்குத்தானே அதை செலுத்திக்கொண்டு அது குறித்த ஆய்வுக்கட்டுரையையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இது மாதிரியான நிகழ்வுகள் ரஷ்யாவில்ஸ் புட்னிக் ஐந்து என்று அழைக்கப்படும் கோவிட் 19 தடுப்பூசி காலத்திலும் நடந்துள்ளது.
லியோனார் டோடாவின்சி, ஆண்ட்ரியாஸ்வேசாலியஸ் இன்று சரித்திரத்தில் இடம்பிடித்த அறிஞர்கள் பலர் அப்படி செய்திருந்தாலும் 1892 ஆம்ஆண்டில் MAX VON PETTENKOFER என்னும் அறிஞர் காலராவுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான அந்த முக்கியமான சோதனையோடு இந்த சுயபரிசோதனை விஷயத்தை உலக அளவில் தொடங்கி வைத்தார் என்று வரலாறு சொல்லுகிறது. இவருடைய முறைகளை பின்பற்றி பிறகு ராபர்ட் காட்ச்காலராவுக்கான இறுதி மருந்தை அடைந்தார் இதே போன்ற விஷயங்கள் மலேரியா நோய் விஷயத்திலும் மஞ்சள்காய்ச்சல் விஷயத்திலும் நடந்துள்ளது.
ஆனால் 1956 ஆண்டுக்கான மருத்துவ கண்டுபிடிப்புக்கான நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியைச் சேர்ந்த வெர்னர் ஃபோர்ஸ்மேன் தனக்குதானே உறுப்பு அடிப்படையில் மயக்கமருந்தை உட்படுத்திக்கொண்டு ஒரு வடிகுழாயை தன் கை நரம்பிக்குள் செலுத்திக் கொண்டார் வடிகுழாய் ஒரு நரம்பை துளைக்க முடியுமா என்று அப்போது யாருக்கும் தெரியவில்லை இருந்தாலும் ஃபோர்ஸ்மேன் வெற்றிபெற்றார். அவர்பாது காப்பாகவே வடிகுழாயை தனது இதயத்திற்குள் செலுத்திக்கொண்டு STUD என்று இப்போது நாம் அழைக்கின்ற இதய வடிகுழாய்நிபுணராக உருவானார். இந்த சுயபரிசோதனை நடந்த ஆண்டு 1929 ஆகும்.
ஆனால் இது போல மனிதர்கள் தனக்குத்தானே பரிசோதனை செய்வது மட்டுமல்ல தேவை இல்லாத மருந்து பரிசோதனைகளை நேரடியாக மனிதர்கள் மீது செலுத்துவதை உலகஅளவில் தடை செய்து வைத்திருக்கிறார்கள்.. ஹிட்லர் ஆட்சியின் பொழுது நாஜிக்களின் மருத்துவர் ஷர்டா நியூரம்பர்க்.. சித்திரவதை முகாம் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்ததற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.. அப்போது உலக அளவில் சர்வதேச மருத்துவ பரிசோதனை மற்றும் மனித பரிசோதனை நெறிமுறை கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.. இது நியூரம்பர்க் குறியீடு என்று அழைக்கப்பட்டது அமெரிக்க அரசாங்கத்திற்கும் பிராண்ட் என்று அழைக்கப்படுகின்ற மருந்து நிறுவனத்திற்கும் இடையே நடந்த நீண்ட வழக்கின் காரணமாக இது எட்டப்பட்டது.. நியூரம்பர்க் குறியீடு 10 கட்டளைகளை கொண்டது.
1964 ஆம் ஆண்டு ஹெல்சின்கி என்கின்ற பின்லாந்தின் உடைய நகரத்தில் மனிதர்களை நேரடியாக மருத்துவ நிறுவனங்கள் பரிசோதிப்பதற்கு எதிராக சர்வதேச மருத்துவ கவுன்சில் WMA ஒரு உலக அளவிலான கூட்டத்தை கூட்டியது மனித ஆராய்ச்சி நெறிமுறைகளின் அடிப்படை ஆவணமாக கருதப்படுகின்ற ஹெல்சின்கி இன் பிரகடனம் அப்போது வெளியிடப்பட்டது இந்த பிரகடனத்தின்படியும் சுய பரிசோதனை செய்து கொள்வது சட்டப்படி குற்றமாகும்.. பிரகடனம் எட்டு முறை இதுவரை திருத்தப்பட்டுள்ளது…2024 ஆம் ஆண்டு எழுபத்தி ஐந்தாவது கூட்டத்தின் பொழுது எட்டாவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.. மருத்துவ ஆராய்ச்சி நெறிமுறைகளின் பரிணாம வளர்ச்சி இப்படி இருக்க.. ஒவ்வொரு நாடும் தன்னுடைய சொந்த சட்ட நலன்களின் மூலம் அரசாங்கத்துக்கு தெரியாமல் எத்தகைய மருத்துவ ஆராய்ச்சியும் நடைபெறுவதை முற்றிலுமாக தடைசெய்து உள்ளன.
அமெரிக்காவினுடைய தத்துவ அறிஞர் ரூத் மெக்காலின்பயோ எத்திக்ஸ் BIOETHICS என்று தனியாகவே மருத்துவ துறை புதிய பாடம் ஒன்றை ஏற்படுத்தி மனித சமுதாயத்திற்கு நல்லதோ அல்லது கெட்டதோ மனிதர்களின் மீது நேரடியாக மருந்துகளை பரிசோதிப்பது மனித நெறி முறைக்கு உகந்ததா என்பதற்கான தனித் துறையை நிறுவியிருக்கிறார்… அறிவியல் அறிஞர் சர் ஹம்ப்ரி டேவி.. இன்று இருந்திருந்தால் நைட்ரஸ் ஆக்சைடு சிரிக்கும் வாயுவை தனக்குத் தானே ஏற்றுக் கொண்டதற்காக கைது செய்யப்பட்டிருப்பார்..
பீட்டா அம்மையார் தேர்வு செய்த OVT என்று அழைக்கப்படும் வைரஸ்களை பயன்படுத்துகின்ற சிகிச்சை முறை பெரும்பாலான மருத்துவ பரிசோதனைகள் விலங்குகளின் மீது செலுத்தப்பட்டு பலமுறை நிரூபிக்கப்பட்டு மிக மிக கால தாமதமாக மனிதர்களை வந்து அடைகிறது.. மெட்டாஸ்டிக் புற்று நோயில் இவ்வகையான விஷயங்கள் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்துகின்றன.. அதிலும் குறிப்பாக தற்பொழுது பீட்டா அம்மையார் பயன்படுத்தி இருக்கும் அம்மை நோய் .. வைரசுகள் நமக்கு நன்மை கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கையே முதலில் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.. வைரஸ்களை புற்றுநோய் கட்டியின் மீது அவர் செலுத்திய போது.. ஒரு பொருள் நெருப்பில் பொசுங்குவது போல அந்த கட்டி கொஞ்சம் கொஞ்சமாக சிறுத்துப்போய் இறுதியில் அறுவை சிகிச்சை மூலம் எளிதில உடலிலிருந்து.. எடுத்துவிட முடிந்த அளவிற்கு புற்று நோய் கட்டி கரைந்து போனது.
இவ்வகை வைரசுகளை வில்லன்களாக மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த மருத்துவ உலகிற்கு அவர் கொடுத்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சி.. அவர் மீது வழக்குகள் தொடரப்படுகின்றன.. அதிலும் குறிப்பாக வழக்கை தொடர்பவர்கள் புற்றுநோய் சம்பந்தமான சர்வதேச கார்பரேட் மருந்து கம்பெனிகள் தான் .. ஒரு பிரம்மாண்ட போராளியாகவும் தலைசிறந்த அறிஞராகவும் பேட்டா அம்மையார் எதிர்காலத்தில் போற்றப்படும்வதற்கும் வாய்ப்பிருக்கிறது.. அவரவர்கள் வீட்டிலேயே ஒரு வைரஸை வளர்த்து தனக்கு தானே சிகிச்சை அளித்து கொண்டால் என்ன ஆகும் என்று மருத்துவ உலகம் பதறும் அது ஒரு பக்கம் இருக்கட்டும்..
இந்த மருத்துவ நெறிமுறை என்பதெல்லாம் நம்ம ஆட்கள் தலைவலி முதல் பிரசவ வலி வரையில் தனக்கு தானே மருத்துவம் பார்த்துக் கொள்ளவும் மருந்து கடையில் கிடைக்கும் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடவும் யூடியூப் அப்பாடக்கர் அட் வைஸ் வரை ஆன நம்முடைய ‘சொந்த’ சிகிச்சை முறைக்கு பொருந்துமா என்று .. ( நம்ப டோலோ வாழ்க்கையை எந்த கொம்பனாலும்அசைக்க முடியாது!) இன்னும் தெரியவில்லை..
கட்டுரையாளர் :
ஆயிஷா இரா நடராசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகச் சிறப்பு. கட்டுரையாளர் ஆயிஷா நடராசன் கூறியிருப்பது போல, இப்போது பீட்டா அம்மையார் மீது வழக்குத் தொடரப்படலாம். எதிர்காலத்தில் முக்கியமான மருத்துவக் கண்டுபிடிப்பென்று அவர் கொண்டாடப்படுவார்.
எப்போதும் எல்லாத்துறைகளிலும் அத்துமீறுகிறவர்கள்தான் புதிய பாதைகளை அமைத்து வந்திருக்கிறார்கள்.
அண்மையில் அறிவியல் பத்திரிக்கைகளில் பீட்டா ஹெலாசி அம்மையாரின் சுய மருத்துவ பரிசோதனையின் வெற்றியைப் பற்றி வெளிவந்த செய்தியை ஆராய்ந்து முந்தைய மருத்துவ வரலாற்று சம்பவங்களை தொடுத்து புனையப்பட்ட சுவாரசியமான கட்டுரை. இதில் ஒரு பக்கம் அம்மையாரின் செய்கை காலத்தின் அவசரம் என்றால் மறு பக்கம் இனி வருங்காலத்தில் மார்பகப் புற்றுநோயாளிகள் பலர் OVT சிகிச்சையை (சட்டத்திற்கு புறம்பாக இருந்தாலும்) நாடுவார்கள். மருந்து புத்தாக்கம் மற்றும் அனுமதி கிடைப்பதற்கு 7 ஆண்டுகள் வரை ஆகலாம். அதுவரை பீட்டா அம்மையார் (கெமோ தெரபி பக்க விளைவுகளுடன்) உயிர் வாழ்ந்திருப்பாரா என்பது சந்தேகம். துணிச்சலுடன் 4 ஆண்டுகளுக்கு முன் சுய சிகிச்சை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வருவது அதிசயம் தான். மருத்துவ வரலாற்றில் சுமார் 500 நபர்கள் சுய சிகிச்சை எடுத்துக்கொண்டார்கள் என்பதும் அவர்களில் சிலருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதையும் காணலாம். வர்னர் ஃப்ராஸ்மேன் (1056 – Cardiac Catheterization) அவர்களில் ஒருவர்!
Correction: வர்னர் ஃப்ராஸ்மேன் (1956 – Cardiac Catheterization) அவர்களில் ஒருவர்!
Beta Halassy is brave, faith in her belief and strong both in mind and heart. Her faith in herself is the key reason for her cure.
நிமிர்ந்த நன் நடை , நேர் கொண்ட பார்வை, நிமிர்ந்த ஞானம் செருக்கு இருப்பவர் பாரதியின் புதுமைப்பெண். செம்மை மாதர் திறப்பு வில்லை என்று பாடியுள்ளார்.