Subscribe

Thamizhbooks ad

தொடர்- 2 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு

வரலாற்றுத் திருடர்கள்

சனாதான சக்திகள் சமூத்தை தேங்கி நிற்கும் குட்டையாகவோ அல்லது சாக்கடையாகவோ வைத்திருக்கவே விரும்புகின்றன.  மாற்றங்கள் அவர்களுக்கு விருப்பமானதல்ல. வேத காலமே பொற்காலம் என்ற மாயையை மீண்டும் மீண்டும்  விதைக்கக் காரணம், அந்த  சதுர்வர்ண அமைப்பின் கனவு அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.  சமூகத்தின் மேல் அடுக்குகளில் அமர்ந்து  ஒரு பெருங்கூட்டத்தை அடிமைகளாக மேய்க்கும் மனுவின் சூத்திரம் அவர்களின் லட்சியமாய் இருக்கிறது.

ஆனால் மனித குல வரலாறு அவர்கள் கற்பனைப்படியே இருக்காது அல்லவா?  மாற்றம்  என்பது  மாறாவிதியாதலால் அவர்களின் பெருங்கனவு இந்தியப் பெருங்கண்டத்தில் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. வேதகாலமே ஆதியந்தம் அற்றது என்ற புனைவுகள் அறிவியல் வளர்ச்சியால் அடித்து நொறுக்கப்பட்டது. அகழ்வாராய்ச்சிகள் சிந்துவெளி நாகரிகம் வேதகால கலாச்சாரத்திற்கு ஆயிரம் ஆண்டுகள் முற்பட்டது என்ற அணுகுண்டு வீசப்பட்டு அதிர்ச்சியில் உரைந்தனர். அகழ்வாய்வு, மொழியியல், வரலாற்றுச் சூழல், சமூக மானுடவியல் இவையனைத்திற்கும் வேதகாலமே முற்பட்டது என்ற பொய்யைக் கிழித்தெரிந்தன.

எனவேதான் சனாதனத்தின் உயிரைப் பாதுகாக்கும் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தனது துவக்க காலம் முதலே இந்திய வரலாற்றை மாற்றி எழுத அலைகின்றனர். “நமக்கான வரலாற்றை நாமே எழுதிக்கொள்ள வேண்டும்” என குருஜி கோல்வால்கர் 1930 களில் எழுதியதும், பேசியதும் அவர்கள் கற்பனைகளை வரலாறாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில்தான்.  உண்மையில் வரலாற்றை ஏன் மிகவும் முக்கியத்துவமாக சனாதான கூட்டம் பார்க்கிறது என்பது முக்கியமானது.

இந்திய தேசம் முழுமைக்கும்  ஒற்றை ஆட்சியும், ஒற்றை மொழியும், ஒற்றைப் பண்பாடும், ஒற்றை கடவுளும் அவர்கள் கனவாக இருக்கிறது. ஆனால்  இந்திய நிலப்பரப்பின் இயல்பும், இனக்குழுக்களும், மொழிகளும் அவர்கள் சடங்குகள் சார்ந்த பண்பாட்டு அசைவுகளும்  அவர்களுக்குப் பெரும் தடையாக இருக்கிறது. வரலாறு உண்மையை பறைசாற்றுகிறது. எனவே வரலாற்றை தங்களுக்கு ஏற்றார்போல திரிப்பதும், இட்டுக்கட்டி எழுதுவதும், தம் வசதிக்குப் புதிதாக உருவாக்குவதும் எதிர்காலத் தலைமுறையை தங்கள் வசம் கொண்டு வந்து சேர்க்கும் என நம்புகின்றனர்.

அவர்கள் எவ்வுளவு அயோக்கியத்தனமாகக் கதைகளை உருவாக்குகின்றனர் என்பதற்கு அவர்களின் குருஜி கோல்வால்கர் விஷம் கக்கும் வார்த்தைகளின் தொகுப்பானBunchOfThoughts தமிழில்  “ஞான கங்கை” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மூன்றாம் பாகம் “ இப்படி துவங்குகிறது.

“நமது நாட்டுப் புராதன நூல்களிலும் வெளிநாட்டுக் குறிப்புகளிலும் காணப்படும் செய்தி ஒன்று உண்டு. ரோம் நாட்டு அரசர்களில் ஒருவன் விசித்திரமான  நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய நாட்டில் யாராலுமே அதைக் குணப்படுத்த முடியவில்லை. அந்தக் காலத்தில் மருத்துவக் கலையின் குரு என்று கருதப்பட்ட நமது நாட்டின் உதவியை அவன் கோரினான். நம் நாட்டு அரசகுடும்ப மருத்துவர் ஒருவர் அங்கு சென்றார். அரசனின் மண்டை ஓட்டைத் திறந்து மூளையில் அறுவை சிகிச்சை நடத்தி, மன்னனின் நோயைக் குணப்படுத்தினார். அந்த விஞ்ஞானக் கலையை அந்நாட்டு மக்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்காக அந்த மருத்துவர். மேலும் மூன்றாண்டுகள் அங்கு தங்கினார்.

பின்னர் பெரும் புகழுடனும் மரியாதைகளுடனும் பாரதம் திரும்பினார். அறுவை சிகிச்சை மிக முன்னேறியுள்ள இன்றைய நிலையிலும்கூட மூளையில் அறுவை சிகிச்சை செய்வது என்பது மிக ஆபத்தானதாகக் கருதப்படுகிறது என்பதையும் கண்டிப்பாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் நவீன அறுவை சிசிச்சை முறையான பிளாஸ்டிக் சர்ஜரிகூட நமது புராதன ஆயுர்வேத மேதைகள் வெளி உலகத்திற்கு அளித்த நன்கொடைதான் ”.

சரி யார் அந்த ரோம் நாட்டு மன்னன்? எந்தக் காலம்? யார் அந்த மண்டையோட்டு மருத்துவ குரு? என்ன ஆதாரம்? பிளாஸ்டிக் சர்ஜரி  ஆயுர்வேதக் கையேடு எங்கே? மூச்… குருஜியைக் கேள்வி கேட்கலாமா? இதுதான் அவர்களின் வரலாற்று லட்சனம். அவர்கள் உருவாக்கும் வரலாற்றை யாரும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்கிறனர்.

எனவேதான் வரலாற்றுத் திருட்டை முதன்மைப் பணியாகச் செய்கின்றனர். இந்தத் திருட்டை முழுமையாகப் புரிந்து கொள்ள ஒரு எளிய கையேடாக உள்ளது தோழர் அ.மார்க்ஸ் எழுதிய ”ஆரியக் கூத்து” என்ற புத்தகம். எதிர் வெளியீடாக 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு 2021 ஆம் ஆண்டு எழுத்து பிரசுரம் வெளியீடாக மூன்றாம் பதிப்பு மீண்டும் வந்துள்ளது.ஆரியக் கூத்து

சனாதனம்: எதிர்ப்பும் எழுத்தும் என்ற இந்தத் தொடரில் தவிர்க்க முடியாத புத்தகம் இது.

மூன்று பகுதிகள் உள்ள இந்த நூலில் முதல் பகுதியில் தமிழக அந்தணர் வரலாறு என்ற புத்தகத்தையும் அதை எழுதிய பென்னம் பெரிய அந்தணர் வரலாற்று ஆசிரியர்களையும் தோலுரிக்கிறார். ஆரிய விவாதத்தில் பார்ப்பனர்கள் எப்படி புரட்டு செய்கின்றனர்.  ஆரியப் பிரச்சினையின்  அடுத்தகட்ட நகர்வு என்ன? வரலாற்றை இன அடிப்படையிலாக்குததில் அடிப்படை என்ன? ஆரிய இனம் மற்றும் ஆரியப் படையெடுப்பு குறித்த கருத்தாக்கத்தை ஆய்வுலகம் கைவிட்டது எந்த அடிப்படையில்?  இன அடிப்படையிலான வரலாறு எழுதுதலில் அண்ணல் அம்பேத்கரின் குறுக்கீடு என்ன என்று மிகவும் காத்திரமான தரவுகளுடன் எழுதி இருக்கிறார் அ. மார்க்ஸ்.

அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் வரலாறு என்ற அங்கதத்துடன் துவங்கும் இரண்டாம் பகுதி மிக பிரபலமான குதிரை மோசடியாகும். சிந்து வெளி ஹராப்பாவில் கிடைத்த பொறிப்புகளை இதுவரை படிப்பதற்கான வழிகிடைக்காமல் உண்மையாக அகழ்வாராய்ச்சியாளர்கள் மூளையைக் கசக்கிகொண்டிருக்க, சங்கிக் கூட்டம் ஏற்பாடு செய்த ராஜராம் – ஜா என்ற இரு ”ஆராய்ச்சியாளர்கள்” அவைகளை படித்தது மட்டுமல்ல அந்த சின்னங்களில் குதிரையே புழங்காத பகுதிகளில் குதிரைகள் இருப்பதையும் ”கண்டுபிடித்தனர்”. எப்படி என்கிறீர்கள்? எல்லாம் கம்யூட்டர் கிராபிக்ஸ்தான்.

வெட்கமே இல்லாமல் இவர்கள் இப்படி செய்த அய்யோக்கியத் தனத்தை மொழியியல் அறிஞர்கள், அகழ்வாராய்ச்சியாளர்கள், கணிணி வல்லுனர்கள், விஞ்ஞானிகள் என்ற ஒரு கூட்டமே ஆதாரங்களுடன் மறுத்தது. ஆனால் அதைபற்றியெல்லாம் கவலைப்படும் கூட்டமா அது. மண்டையோட்டு நிபுணரை அறிமுகம் செய்த குருஜியின் கூட்டமல்லவா அது. இல்லாத சரஸ்வதி நதியை இருப்பதாக கற்பிதம் செய்வதும் இந்த கூட்டம்தான்.

வரலாற்றை மாற்றிவிட இவர்கள் எப்படித் துடிக்கிறார்கள் என்பதை அறிமுகம் செய்வது மூன்றாம் பகுதியாகும்.

சங்பரிவார் அமைப்புகளிடம் அதிகாரம் கிடைத்ததும் அவர்கள் எப்படி வரலாற்றை கட்டமைக்க நினைக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். “2020 பிப்ரவரி 1 அன்று முன்வைத்த நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்து அகழ்வாய்வுத் திட்டங்களை முன்வைத்தார்.”

1.ராகிகார்ஹி : இது ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தின் மேற்கு திசையில் இது அமைந்துள்ளது.  2.ஹஸ்தினாபூர்: மகாபாரதத்தில் கவுரவர்களின் தலைநகரமாகச் சொல்லப்படுவது. இந்தியாவின் வடக்கு திசையில் உத்தரப் பிரதேசம் மீருட் மாவட்டத்தில் உள்ளது. 3.தோலவீரா: இது குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டம் பச்சாவ் தாலுகாவில் உள்ளது. சிந்துவெளி நாகரிக எச்சங்கள் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எட்டுப் பகுதிகளில் ஐந்தாவது பெரிய பரப்பு இது. இந்தியத் துணைக் கண்டத்தின் மேற்கு திசையில் அமைவது. 4.ஆதிச்ச நல்லூர் – தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. அதாவது இந்தியத் துணைக் கண்டத்தின் தெற்குத் திசையில் உள்ளது. அகழ்வாய்வு நடந்து புகழ்பெற்ற பகுதி இது. 5. சிவசாகர்: அசாம் மாநிலம் சிவசாகர் தலைநகரம் இது. ‘அஹோம்’ அரச வம்சத்தின் தலைநகராகவும் (1999-1788) இருந்த இப்பகுதி அகழ்வாய்வு முக்கியம் வாய்ந்த ஒன்று ஆனாலும் சிந்துவெளி. நாகரிகத்துடன் தொடர்புடையதல்ல. இது இந்தியத் துணைக் கண்டத்தின் கிழக்கு திசையில் அமைகிறது.”

நான்கு திசைகளிலும் அகழ்வாய்வுத் தளங்கள் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டன. முதலில் ராக்கார்ஹி பகுதியிலான ஆய்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அங்கு தீவிரமாக ஆய்வுகள் தொடங்கின. அவர்கள் நோக்கம் ஆரியர்கள் வந்தேறிகள் அல்ல என நிரூபணம் செய்வதுதான். அப்படி செய்தால்தான் இந்துக்கள் அல்லாத அனைவரும்  படையெடுப்பாளர்கள் என்று அறிவிக்க முடியும். மட்டுமல்ல சாத்திர சனாதான குப்பைகளை, கற்பனை இதிகாச புளுகுகளை உண்மையென அறிவிக்க முடியும்.

ஆக வரலாறு அவர்களின் ஆயுதமாக மாற்றப்படுகிறது. நவீன விஞ்ஞான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இளம் தலைமுறையை வசீகரம் செய்து வருகின்றனர். வாழ்வியல் நெருக்கடி முற்றும் போது, தனிமனித சுயம் கேள்விக்குள்ளாகும் போது அவனது தேடல் பழம் பெருமைகளை  நோக்கி திரும்புவது இயல்பானது. அங்குதான் சனாதான கூட்டம் ஆர்வமாய் காத்திருக்கின்றனர்.

எனவே உண்மை வரலாற்றை கண்டடைவதும், அவைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதும் சனாதன எதிர்ப்புப் போரின் மிக முக்கிய பணி என்பதை உணர்ந்து அத்தகைய எழுத்துகளை முன்னெடுக்க இயன்றவரை முயல்வோம்.

Latest

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

சாதிக் ரசூல் கவிதைகள்

1) VIP ---------- எந்த வேலையும் செய்யாத எனக்கொரு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது எந்த வேலையும் செய்யாத என்னைக் கண்காணிக்கும் வேலையை நீயே தேர்ந்தெடுத்துக்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில் சால்வெடார் டாலி , ஹீரோனிமஸ் பாஷ் மற்றும் மார்க் சகல் என்பவர்கள் பகழ்பெற்றவர்கள். பாஸ் நெதர்லாந்து ஓவியர்....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here