கருப்பினத்தவர்களுக்கான போட்டியில் ஜாக் ஜான்சன் பட்டத்தை வென்றார் பட்டத்தை வென்றவுடன் அவர் உலக ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற வெள்ளை நிற வீரர்களை தன்னுடன் மோதுமாறு போட்டிக்கு அழைத்தார். உலக ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற யாரும் அவருடன் மோதத் தயாராக இல்லை காரணம் கருப்பர்களுடன் மோதுவதை கீழ்த்தரமாக கருதி புறக்கணித்தனர். ஜாக் ஜான்சன் அறைகூவல் விடுத்த நேரத்தில் உலக ஹெவி வெயிட் குத்துச்சண்டை சாம்பியனாக ஜேம்ஸ் ஜே ஜெப்ரிஷ்(James J. Jeffries) இருந்தார். ஜாக் ஜான்சனுடன் மோத முடியாது என்று கூறிய அவர் பட்டத்துடனே ஓய்வு பெறுவதாக அறிவித்து வெளியேறினார்.
கருப்பினத்தவர்களுக்கான போட்டியில் ஜாக்ஜான்சன் பட்டத்தை வென்றவுடன் உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற வெள்ளைநிற வீரர்களை போட்டிக்கு அழைத்தார். அவருடன் மோத முடியாது என்று அப்போதைய வீரர்கள் மறுத்துவிட்டனர். கருப்பர்களை கீழ்த்தரமாக கருதி அவர்களோடு மோதுவதை தவிர்த்து வந்தனர். ஜாக் ஜான்சன் அறைகூவல் விடுத்த நேரத்தில் உலக ஹெவி வெயிட் குத்துச்சண்டை சாம்பியனாக ஜேம்ஸ் ஜே ஜெப்ரிஸ் (James J. Jeffries) இருந்தார். ஜாக் ஜான்சனுடன் மோதமுடியாது என கூறிய அவர் பட்டத்துடனே ஓய்வு பெறுவதாக அறிவித் தார்.
அடுத்ததாக உலக ஹெவி வெயிட் குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை கனடா நாட்டைச் சேர்ந்த டாமி பர்ன்ஸ் (Tommy Burns) வென்றார். உலக குத்துச்சண்டை வீரர் என்ற பட்டம் இவருக்குத்தான் அந்த நேரத்தில் பொருத்தமாக இருந்தது. காரணம் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, பிரான்ஸ் என அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்து உலக ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தை பெற்று வந்தார். மிகவும் அழகான தோற்றம் உடையவர்.
ஜாக் ஜான்சன், டாமி பர்னஸ்சுடன் மோதுவதற்கு அழைப்பு விடுத்தார். அதை அந்த வெள்ளைநிற வீரன் மறுத்துவிட்டார். கருப்பர்களுடன் மோதுவதில்லை என்று நிறவெறி எண்ணம் மேலோங்கி இருந்தது. ஆனாலும் ஜாக் ஜான்சன் விடுவதாக இல்லை. இரண்டு ஆண்டுகள் டாமி பர்னஸ்சை பின்தொடர்ந்து கேலிசெய்தார். ஒரு போட்டிக்காக அவரை பத்திரிகையி லேயே கேலிசெய்து செய்தி வெளியிட்டார். கருப்பர்களையும் வெள்ளையர் களையும் மோத வைத்து நல்ல காசுபார்க்க வேண்டும் என்ற எண்ணம் குத்துச்சண்டை நடத்தக்கூடியவர்கள் மத்தியில் இருந்தது. எனவே போட்டிக்கான பரிசுத்தொகை 30 ஆயிரம் டாலர் என்று அறிவித்தார்கள். (இன்றைய தினம் அதன் மதிப்பு 11 லட்சம் டாலர்). அத்துடன் டாமி பர்னசை பரிசுத் தொகையை காட்டி போட்டிக்கு, சம்மதிக்க வைத்தார்கள்.
‘நான் எனது பட்டத்தை தக்க வைப்பேன். யாரையும் என்னுடன் மோதுவதற்குதடைசெய்யமாட்டேன்.வெள்ளையரோ,கருப்பரோ,மெக்சிகனோ,இந்தியரோ, (செவ்விந்தியர்கள்) யாராக இருந்தாலும் அவர்களுடன் மோதி பட்டத்தை பாதுகாப்பேன். உலக ஹெவி வெயிட் பிரிவில் நான் சிறந்த மனிதனாக இல்லை என்றால் எனக்கு இந்த பட்டம் வேண்டாம்” என்று டாமி பர்னஸ் பிரகடனப்படுத்தினார். மேலும் நான் ஜான்சனை வீழ்த்தாவிட்டால் என் பெயர் டாமின் பர்னஸ் அல்ல என்று கொந்தளித்தார். ஒரு கருப்பனை வீழ்த்த வேண்டும், அதே நேரத்தில் அதிக பரிசுத்தொகை பெறவேண்டும், உலக பட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற மூன்று இலக்கையும் அடைய துடித்தார்.
டிசம்பர் 26 1908 ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரத்தில் சிட்னி ஸ்டேடியத்தில் இரண்டு வீரர்களும் குத்துச்சண்டை வளையத்துக்குள் தோன்றினார்கள். மேலாடைகளை அகற்றியவுடன் ஜாக் ஜான்சனின் உடல் மேலாண்மை வெளிப்பட்டது. ஜாக் ஜான்சன், டாமி பர்னசைவிட அதிக எடையும் அரை அடி உயரமும் கொண்டவர். உண்மையில் அந்தபோட்டி குத்துச்சண்டைப் போட்டியாக இல்லாமல் ஒரு யுத்தம் போன்றே காட்சி அளித்தது. 20,000 பார்வையாளர்கள் கூடினார்கள். காவல்துறை கடுமையான கட்டுப்பாடுக ளுடன் போட்டியை நடத்த அனுமதி அளித்தது. ஜாக் ஜான்சனை பொறுத்தவரை பரிசுத்தொகை என்பதைவிட, உலக ஹெவிவெயிட் சாம்பியன் என்ற பட்டத்தைவிட, வெள்ளைநிற வெறியை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்குதான் அவரது நாடிநரம்புகள் அனைத்திலும் ஓடிக்கொண்டிருந்தது.
மொத்தம் 20 சுற்று போட்டியில் 14வது சுற்றில் ஜாக் ஜான்சன் வெற்றி பெற்றார். ஒரு சுற்றில்கூட டாமி பர்னஸ் வெற்றி பெறவில்லை. ஜாக் ஜான்சனால் வரலாறு மாற்றி எழுதப்பட்டது. ஜாக்சனின் இந்த வெற்றி சிட்னி அரங்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். ஆனால் அமெரிக்காவை உலுக்கி எடுத்தது. முதல் உலக ஹெவி வெயிட் சாம்பியன் மட்டும் அல்ல கருப்பினத்தைச் சேர்ந்தவன் வெற்றி வீரனாக வலம் வந்தான் என்பதுதான் முக்கியமான வரலாற்று நிகழ்வு. இந்தப் போட்டி ஒரு வெற்றியுடன் முடிந்து விடவில்லை. அதன்பிறகு வெள்ளை நிறவெறி வெகுண்டு எழுந்தது. சமூகத்திலும், சட்டத்தின் அடிப்படையிலும், நிறத்தின் அடிப்படையில் கருப்பர்களை அடக்கி வைத்திருந்த வெள்ளையர்கள் குத்துச்சண்டையில் ஒரு கருப்பனின் வெற்றியை ஏற்க முடியாமல் அங்கேயும் அடக்கத் துடித்தார்கள். இதற்காக அமெரிக்க சமுகம் கொடுத்த விலை மிகஅதிகம். இதோ அதனுடைய தொடர்ச்சி.
மாபெரும் வெள்ளை நம்பிக்கை: (Great White Hope)
ஜாக் ஜான்சன் வெற்றி கருப்பர்களிடம் எழுச்சியையும், குத்துச்சண்டையை இன விடுதலைக்கான சண்டையாகவும் பார்க்கப்பட்டது. வெள்ளையர்களிடம் இனவெறியை தூண்டி விட்டது. ஜாக் ஜான்சன் சாம்பியன் பட்டத்தை பெற்றபிறகு இதுவரை மற்றவர்களுக்கு கிடைக்காத அளவிற்கு பத்திரிகைகளால் அதிகம் பேசப்பட்டார். பொறுக்குமா வெள்ளை நிறவெறி. அமெரிக்காவின் புகழ் பெற்ற எழுத்தாளர் ஜாக் லண்டன், டாமி பர்னசின் தோல்வியை ஒரு படுகொலை என்று பேசினார். வெள்ளை இனத்தின் மேன்மையை நிரூபிக்க மாபெரும் வெள்ளை நம்பிக்கை (Great White Hope) வெற்றிபெற வேண்டும் என்ற அறைகூவல் விடுத்தார். மேலும் அவரே, பட்டத்தை துறக்காமலே ஓய்வு பெற்ற ஜேம்ஸ் ஜே ஜெப்ரிசை அழைத்தார். தனது பண்ணை வீட்டிலிருந்து வெளியே வந்து ஜாக் ஜான்சனின் சிரிப்பை சிரச்சேதம் செய் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஜாக் லண்டன் மட்டுமல்ல பத்திரிகைகளும் பல்வேறு ஊடகங்களும் கருப்பின சாம்பியனுக்கு எதிராக செய்திவெளியிட்டுக்கொண்டே இருந்தன. புகழ்பெற்ற நியுயார்க் டைம்ஸ் (Newyork Times) பத்திரிக்கை கருப்பின மனிதன் வெற்றி பெற்றால், அறியாமையில் இருக்கும் அவனது ஆயிரக்கணக்கான சகோதரர்கள், அவனது இந்த வெற்றியின் மூலம் வெள்ளையர்களுக்கு சமமான உடல்பலத்தை பெற்றுவிட்டோம் என்று தவறாக புரிந்து கொள்வார்கள். ஆகவே இந்த வெற்றி வெள்ளையர்களால் முறியடிக்கப் பட வேண்டும்” என்று எழுதி இனவெறி தீயை அமெரிக்கா முழுவதும் பற்ற வைத்தது.
ஜேம்ஸ் ஜே ஜெப்ரிஸ் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதற்கு முன்னால் குத்துச்சண்டை அமைப்பாளர்கள் ஜாக் ஜான்சனை வேறுசில சாம்பியன்களுடன் மோதவிட்டு தோற்கடிக்க நினைத்தனர். குறிப்பாக இதற்காக காட்சிபோட்டிகளை நடத்தினார்கள். இதில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அழைத்தார்கள். டோனி ரோஸ், அல் காப் மேன், ஸ்டான்லி கெட்செல் போன்ற வீரர்களை 1909ல் ஜாக் ஜான்சன் தோற்கடித்தார். கெட்செலுடன் நடந்த போட்டி காட்சி போட்டியையும் கடந்து ஒரு உண்மையான போட்டியாகவே மாறியது. ஆனாலும் வெள்ளை நிறவெறியின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை.