நீ பறித்து சூடிடத்தான் பூத்திருக்கிறது
என்னுள் காதல்
உன்னில் நனைந்திடவே பொழிகிறது
என்னுள் காதல் மழை…
எப்படிப் பத்திரப்படுத்துவதென்றே தெரியவில்லை
உன்னிதழ்கள் என்மேல் வரைந்த
ஈர ஓவியங்களை..
அது ஏனோ காய்வதேயில்லை
நீ தந்த முத்தங்களின் ஈரம் மட்டும்…
நினைப்பை தொலைத்து
உந்தன் நினைவை மறக்க
நினைக்கும் பொழுதெல்லாம்
மறக்க மறந்து நினைத்தே தொலைகிறேன்
உன்னை…
இதோ … நீ தொலைத்த
நீ சிந்திய வெட்கங்களைச் சுமந்த
உனது கைக்குட்டை தான்
இன்று என் துக்கங்களையும்
சுமந்து திரிகிறது….
– சசிகலா திருமால்
கும்பகோணம்

