சரவிபி ரோசிசந்திராவின் “தொலைந்துப்போய் சில வருடங்களாகிறது” (கவிதை)

சரவிபி ரோசிசந்திராவின் “தொலைந்துப்போய் சில வருடங்களாகிறது” (கவிதை)

நம்மைத் தேடிப் பார்க்கிறார்கள்
நாம் தொலைந்துப்போய்
சில வருடங்களாகின்றன

இப்போது தான் தேடுகிறார்கள்
நாம் அமர்ந்திருந்த நாற்காலியை அறையில் வைத்திருக்கிறார்கள்
தொட்டு ரசிக்கிறார்கள்
நம் புகைப்படத்தை
நம்மை அழ வைத்தவர்கள்
இன்று நமக்காக
அழுகிறார்கள்
நாம் பேசுவதைச் செவிமடுத்துக் கேட்காதவர்கள்
நம் குரல் கேட்கத் தவிக்கிறார்கள்
நம் உணர்வு அறியாமல் உளறியவர்கள் உணர்வாய்ப் பேசுகிறார்கள்
இவை எல்லாம் நாம்
இறந்தப் பின்னால் தான் கிடைக்கும் எனில் வாழ்க்கை எதற்கு?
வாழும்போதே கிடைக்க வேண்டும் மனமகிழ்வு
இல்லையேல்
வாழ்க்கை வெறுங்கனவு…

 

எழுதியவர் 

சரவிபி ரோசிசந்திரா




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *