தாமஸ் எரிக்சன் (Thomas Erikson) எழுதிய "Surrounded by Idiots" - புத்தகம் ஓர் அறிமுகம் |  Self-help book | தலைமை பண்பு சிறந்ததொரு புத்தகம்

தாமஸ் எரிக்சன் (Thomas Erikson) எழுதிய “Surrounded by Idiots” -நூல் அறிமுகம்

தாமஸ் எரிக்சன் (Thomas Erikson) எழுதிய “Surrounded by Idiots” – புத்தகத்தில் இருந்து…

நாம் மற்றவர்களிடம் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வதற்கு என்னென்ன நுட்பங்களை கையாள வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை எடுத்துக்காட்டி, மற்றும் தலைமைத்துவப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் தம் குழுவினரை பற்றிய தெளிவான ஆய்வை மேற்கொள்ள சிறந்ததொரு புத்தகம்..

புத்தகத் தலைப்பு என்னை ஈர்த்து அலையினால் அடித்து செல்லப்படும் கடற்சிற்பியைப் போல ஆசிரியர் கூறும் வெவ்வேறான மனித குணாதிசயங்களின் நிலைகள் பற்றிய ஆழத்திற்குள் அடித்துச் செல்லப்பட்டேன்.. ஆம்

எரிக்சன் ஒரு ஸ்வீடிஷ் மக்கள் நடத்தை நிபுணர், சுறுசுறுப்பான விரிவுரையாளர் மற்றும் அதிகம் விற்பனையாகும் எழுத்தாளர்களில் சிறப்பு மிக்கவர், இப்புத்தகம் 1.5 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி பிரபலமாகியது மட்டுமல்லாது நிறைய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இந்நூலின் சிறப்பு..

How to judge and assess the personalities around us and how we can enhance our relationship better with them through the estimation is well explained in the book..

நம்ம வாழ்க்கையில ஆதியிலிருந்து அந்தம் வரைக்கும் நிறைய பேரோட பழகுவதற்கான வாய்ப்புகள் கிடைக்குது அதுல பார்த்தோம்னா சில பேர்கிட்ட பழகுறதுக்கு நமக்கு ரொம்ப பிடிக்கும்!! சில பேருக்கு நம்மளோடு பழகுறதுக்கு ரொம்ப பிடிக்கும்!! அதுல கொஞ்சம் வித்தியாசமா சில பேருக்கு நம்மள கண்டா ரொம்ப எரிச்சலா கடுப்பாயிருக்கும் அதே போல நமக்கும் சில பேரை கண்டா புடிக்கவே செய்யாது இதை மாதிரி பல பேரோடு நமக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கும்..

அதனை தெளிவுபடுத்தவே எரிக்சன் நான்கு விதமான நடத்தை வகைகளை நான்கு வண்ணங்களில் வகைப்படுத்துகிறார்: ஆதிக்கம் செலுத்தி கட்டளையிடும் சிவப்புகள், நகைச்சுவை உணர்வோடு தன்னகத்தே அனைவரையும் ஈர்க்கும் மஞ்சள்கள், சாந்தமான பச்சையவர்கள், மற்றும் அனுபவமிக்க பகுப்பாயும் நீலவர்கள்.

*Red* is the dominant personality with leadership qualities who can solve any problematic conflicts with confidence but they lose relationships easily..,
Eg : Barak Obama, Venus
Williams and Mother Therasa..

*Yellow* is the inspiring and creative personality who is a good entertainer and easily attract everyone through their inspiring speech but fails in their actions..
Eg : Robin Williams, Oprah Winfrey but (in our region best eg *our Politicians😜*)

*Green* personalities are good in maintaining relationships and they never lose anyone.. They are supporting all and have good tolerance & no other conflicting ideas but not good in decision making..
Eg: Michelle Obama, Gandhiji..

*Blue* is the analytical personality who needs facts, figures and exact info to do an action for blues, *Process is more important than the output* they never compromise in quality..
Eg: Bill Gates, Einstein..

எந்த வண்ணத்தோடு எந்த வண்ணத்தின் நிலைப்பாடு உள்ள மனிதர்களை இணைத்தால் ஒரு செயல் சிறப்பாக முடியும் என்பதை கணிக்கவும் இந்நூல் பேருதவியாக இருக்கிறது..

Thomas Erikson Surrounded by Idiots Book Review In Tamil Written By Sugirtha Guna

ஆசிரியரின் கூற்றுப்படி 5% பேருக்கு ஒரு வண்ணத்திற்கான குணாதிசயங்கள் மட்டுமே உள்ளது, 80% மக்களுக்கு 2 வண்ணங்களுக்கான குணாதிசயங்கள் உள்ளன, மீதமுள்ள 15% மக்களுக்கு மூவர்ண குண நலன்கள் உள்ளன, ஆனால் யாருக்கும் நான்கு வண்ணங்கள் இல்லை என்பது தெளிவு

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஆசிரியர் வெவ்வேறு நடத்தைகளின் மனோபாவத்தைப் பற்றி பேசுகிறார். ரெட்ஸ் ஆதிக்க வர்க்கத்தை கொண்டுள்ளது. இது மிக வேகமாகவும் செயல்படுகிறது. .
மஞ்சள் மனோபாவம் ஒரு சாதாரண நீர் கண்ணாடி போன்றது மற்றவரை தன்னகத்தை ஈர்க்கும் சக்தியுடையது, ஆனால் பச்சையின் மனோபாவம் நல்லுறவை ஏற்படுத்தும் . மறுபுறம் ப்ளூஸ் மனோபாவம் செய்யும் செயல்களில் தெளிவை ஏற்படுத்துகிறது.

பல்வேறு வகையான நபர்களைக் கையாள்வதற்கான தீர்வை முன்னிறுத்துகிறது இந்நூல் பல்வேறு வகையான நபர்களைக் கையாள்வதற்கான சிறந்த வழி அவர்களின் நடத்தையை ஏற்றுக் கொள்வதற்கான நுண்ணறிவுகளை படமிட்டு காட்டுகிறது.

நம் வாழ்க்கையை இன்னும் ருசிகரமாக மாற்றுவதற்கு மற்றவர்களைப் பற்றிய கணிப்பு மிக அவசியம் அதோடு தொடர்ச்சியான கற்றல், சுய விழிப்புணர்வு மற்றும் நம்மை மாற்றிக் கொள்ளும் திறன் ஆகியவை நம்மை அழகிய சிற்பங்களாக மாற்றும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை

இப்புத்தகத்தில் நான் விரும்பாத சில விஷயங்கள்:

ஒரே செய்தி இந்த புத்தகத்தில் வெவ்வேறு அத்தியாயங்களில் பல முறை மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது.

நபரின் நடத்தை அவரது வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் எவ்வாறு மாறக்கூடும் என்பதை ஆசிரியர் விளக்கவில்லை. உதாரணமாக, தனது இருபதுகளில் சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஒருவர் பின் நாட்களில் தனது அனுபவமும், கிடைத்த அறிவின் காரணமாக தனது ஐம்பதுகளில் இருக்கும்போது நீல நிறமாக மாறக்கூடும்.

மற்றொரு எடுத்துக்காட்டு என்னவென்றால், ஒரு விலையுயர்ந்த பொருளை அவரது முதலாளி/நிறுவனத்தால் செலுத்தும்போது அந்த நபர் சிவப்பு அல்லது மஞ்சள் நிறமாக மாறக்கூடும், ஆனால் அதே நபர் தனது சொந்த பாக்கெட்டிலிருந்து விலையை செலுத்த வேண்டியிருக்கும் போது நீல அல்லது பச்சை நிறமாக மாறுவார் (நிறைய ஆராய்ச்சி மற்றும் பேரம் பேசுவார்) இவ்வாறு இடத்திற்கு ஏற்ப அவர்களது குணாதிசியங்களின் நிறங்கள் மாறும் என்பதை சுட்டிக்காட்ட மறந்துவிட்டார் ஆசிரியர்.

மேலும் இந்த புத்தகம் குற்றவியல் நடத்தை, அவர்களின் மூல காரணம் மற்றும் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி பேசவில்லை. அப்படிப் பேசப்பட்டிருந்தால் இன்னும் சுவாரஸ்யமிக்கதாய் இருந்திருக்கும் என்பது என் கருத்து..

மேலும் தாங்கள் எந்த மாதிரியான மனோபாவம் மிக்கவர் என்பதை அறிந்து கொள்ளவும், மற்றவர்களை பற்றி இன்னும் கூடுதல் புரிதல்களை மேற்கொள்ளவும், இப்புத்தகத்தை வாசிக்க தவற வேண்டாம்..

நூலின் விவரம்: 

Book : *Surrounded by Idiots*
Author : *Thomas Erikson*
Genre: Self-help book
Originally published: 4 June 2014
Price: ₹1,825.

எழுதியவர் : 

✍🏻 அ.சுகிர்தா குணசீலி,
திருநெல்வேலி..

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *