முனைவர் பெ.சசிகுமார்- தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் |

”நுண்ணுயிர் என்றவுடன் ஒரு இயற்கை விவசாயியாக புத்தகத்தின் உள்நுழைந்தேன் தேடல் நிறைந்த ஒரு மாணவனாக வெளியே வந்தேன்”
புத்தகத்தின் தலைப்பைப் படித்தவுடன் பெரும்பாலான மக்கள் நம்பும் கடவுளைப்பற்றிய புத்தகமோ என யோசிக்கத் தோன்றும்.

ஆனால், உண்மையில் எங்கும் வியாபித்திருக்கும் நுண்ணுயிர்கள் குறித்த அர்ப்புதமானப் புத்தகம். இந்தத் தலைப்பைத் தேர்வு செய்தமைக்காக முதலில் பாராட்டு.
நுண்ணுயிர்கள் ஒன்று உள்ளதை அனைத்து தரப்பினரையும் பேசவைத்ததே கொரோனா தான், கொரோனா அச்சம் விலக அதற்கு காரணமான கிருமி- நுண்ணியிரைத் தெரிந்து கொள்வதாக அமைந்தது .

அச்சம் தந்த அந்த நுண்ணுயிர்கள்தான் எங்கும் பரவி இருப்பது அனைத்து செயல்பாடுகளுக்கும் காரணமாக இருப்பது வியப்பனது அல்லவா?
இந்த அறிவியல் பாடத்தினை அனைவரும் ஆர்வமுடன் படித்து அறிந்து கொள்ள வைத்திருப்பதுதான் ஆசிரியரின் வெற்றி. முனைவர். பெ. சசிகுமார் அவர்கள் ஸ்ரோவில் விஞ்ஞானியாகப் பணிபுரிந்து வருகிறார்.இதுவரை 20 மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார்.

நாசாவில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் முனைவர், கஸ்தூரி வெங்கடேஸ்வரன் அவர்கள் அணிந்துரை தந்திருப்பது சிறப்பு.
”இது பாரம்பரியத்திற்கும் நவீன அறிவியலுக்கும் இடையிலான பாலம். நுண்ணுயிர்கள் குறித்த மர்மங்களை புரிய வைத்துள்ளது” என்கிறார்.
தயிர் தயாரித்தல்,செரிமானம், சூழ்நிலையை சமநிலையில் வைப்பதற்கு,உயிரி எரிபொருள், தாவரங்கள் வளர்ப்பதில், இட்லி தயாரிக்க, இப்படி எல்லா

இடங்களிலும் வியாபித்துள்ள நுன்ணுயிகளை விளக்குவது சிறப்பு.
மாணவர்களுடன் நடக்கும் உரையாடலாக வடிவமைத்திருப்பது அருமை.
இதில் குறிப்பிடும் அனைத்தும் அனைவரும் அறிய வேண்டிய அறிவியல் உணமைகள்/ளும் வியப்பில் ஆ

மனித உடலில் உள்ள 78 வகையான உறுப்புக்கள் உள்ளன.ஒவ்வொரு உறுப்பும் அதற்குத் தேவையான செல்களை உற்பத்தி செய்து கொள்கின்றன. சுமார் 32.7 இலட்சம் கோடி செல்கள் உள்ளன. இதயத்தில் மட்டும் 300 கோடி செல்கள் இருக்கின்றன.

மனிதனுக்கு தீங்கு என்று நினைக்கும் அந்த அதீத சூழ்நிலைகளை தான் வாழ உகந்த சூழ்நிலையாக மாற்றி நுண்ணுயிர்கள் வாழ்கின்றன பாறையில் இருக்கும் வேதிப் பொருட்களை உணவாக மாற்றுகின்றன கிரிமிகளைப்பற்றி ஒரு அச்சமும் பிரமையும் எப்போதும் மக்களிடம் உள்ளது. ஆனால், உலகில் உள்ள எண்ணற்ற நுண்ணுயிர்களில் ஒரு விழுகாட்டிற்கும் குறைவான நுண்ணுயிர்கள்தான் நோயை உருவாக்குபவை. அவைகளைத்தான் கிருமிகள் என்று கூறுகிறோம். அதைத் தவிர, மற்ற அனைத்தும் இந்த புவிக்கும் மனிதர்கள் போன்ற விலங்குகளுக்கும் நன்மை பயக்கும் உயிரினங்கள்தான், பாக்டீரியாவுக்கும் வைரசுக்கும் வித்தியாசம் அறிய வேண்டிய ஒன்று. பாக்டீரியாவால் பரவும் நோய்களுக்கு ஆண்டிபயாடிக் எனப்படும் பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்த்துகள் பயன்படும்.

ஆனால், வைரஸ் தனியாக உயிர் வாழாது.அவை உயிர்வாழ்வதற்கு உயிர் உள்ள வேறு ஒரு பொருளின் ஆதரவு தேவை. பாக்டீரியாவின் இயக்கத்தை கண்டறிவது போல் வைரஸ் இயக்கத்தை கண்டறிவது எளிதல்ல. ஆய்வில் அதனைத் தாக்குவதற்கான மருந்துகளைத்தான் தடுப்பூசி என்கிறோம் கழிவுகள் மட்டுமல்ல, பூமியில் மனிதனால் உருவாக்கப்படும் பலவிதமான குப்பைகளை மக்கச் செய்து பூமியின் சிறத்தனமையைப் பாதுகாப்பதில் நுண்ணுயிர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

பொருளை மக்க வைப்பது என்றால் கரிமப் பொருடகள் முதலில் சிறு சிறு துகல்களாக மாற்றப்படுகிறது.அவற்றை நீராகவும் வாயுக்களாகவும் மாற்றுவது பாக்டீரியாவின் வேலை.

எந்த ஒரு பொருளை நுண்ணுயிரியினால் சாப்பிட முடியாதோ அதனை மனிதனாலும் சாப்பிட முடியாது இயற்கையாக மண்ணில் கிடைக்காத சத்துக்களை உரங்கள் மூலம் செடிகளுக்கு கிடைக்கச் செய்வதற்கும் நுன்ணுயிர்கள் உதவித் தேவை உயிரி தொழில் நுட்பமானது சுகாதாரப் பாதுகாப்பு ,பயிர் உற்பத்தி மற்றும் விவசாயம்,தொழில்துறை, உயிரி எரிபொருள் என என்ணற்ற வகையில் பயன்படுத்தப்படுகின்றன.

சிகிச்சை, நோய் கண்டறிதல், பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றிலும் உயிரி தொழில் நுட்பப் பயன்படுகள் விரிவடைகின்றன , விண்வெளி உயிரியல் துறை விண்வெளியில் மனிதன் வாழமுடியுமா என்பதை ஆய்வு செய்து வருகிற்து. மனித குல வளர்ச்சிக்கு இது அடுத்தப் பாய்ச்சலை உருவாக்கும்.புத்தகத்தில் பயணிப்பது பிரமிப்புகளுக்கு இடையில் பயணிப்பது அவசியம்.

இதனை, விஞ்ஞானத்தில் வேட்க கொண்ட அனைவரும் வாசிக்க .வேண்டும். மாணவர்களுக்கு நிறைய ஈர்ப்புகள் உள்ளது இயற்கை விவசாயம் என்றால் என்ன என்பதை அறிவியல் பூர்வமாக விளக்க விவசாயிகளும் இயற்கை ஆர்வலர்களும் இந்தப் புத்தகத்தை அவசியம் வாசிக்க வேண்டும்.

 

நூலின் தகவல்கள் 

நூல் : “தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்”
                  நுண்ணுயிர் எனும் நண்பன்

ஆசிரியர் : முனைவர் பெ.சசிகுமார்

வெளியீடு : புக்ஸ் பார் சில்ரன், பாரதி புத்தகாலயம்

விலை ரூ130.00

தொடர்புக்கு : 44 2433 2924

 

எழுதியவர்  

கு.செந்தமிழ் செல்வன்
 தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *