தூரிகை வரையும் மின்மினிகள் | Thoorigai Varaium MinMInikal

கற்றறிந்தோர், கலைஞர்கள் கல்விமான்களுக்கோர் இலக்கியப்பசி தீர்க்கும் ஹைக்கூ கவிதைகள் தூரிகை வரையும் மின்மினிகளாக உங்கள் கரங்களை வந்தடைந்திருக்கின்றன.

Dr. ஜலீலா முஸம்மில் அவர்கள் படைத்த தூரிகை வரையும் மின்மினிகள் எனும் விருந்தில் 786 வகையறாக்களைச் சுவைத்தேன். அவற்றில் சில சுவைகளை நான் உங்களோடு வார்த்தைகளாகப் பகிர்ந்து கொள்கின்றேன்.

நான் ரசித்தது. சிரித்தது, சிந்தித்தது, வியந்தது என்று வகைப்படுத்தியுள்ளேன்

முதலில் நான் ரசித்தவைகள்
“கிராமத்துக்குச் சென்ற பாட்டி
உறங்கவே இல்லை
பட்டணத்துப் பேரன்”

இங்கு பாட்டியும் உறங்கவில்லை. பட்டணத்துப் பேரனும் உறங்கவில்லை. பாட்டி ஏன் உறங்கவில்லை?
கிராமத்து வீட்டில் ‘அவரது இளமைக்கால மகிழ்ச்சியும், துன்பமும் கலந்த கலவையான நினைவுகள் அவரைத் தூங்கவிடவில்லை. பட்டணத்துப் பேரன் ஏன் உறங்கவில்லை?
கதை சொல்லித் தாலாட்டித் தூங்கவைக்கப் பாட்டியில்லை,என்னவொரு பரிதாபம்.இருவர் கண்களும் பனிக்கின்றன. தூக்கமின்றித் தவிக்கின்றன.

“பரந்த உலகம்
பரவசத்தோடு பார்க்கிறேன்
அப்பா உன் தோள்களில்”
அப்பாவின் தோள்களில் இருந்து இந்த உலகைப் பார்க்கின்ற பார்வை. மிக அழகானது, அலாதியான அனுபவத்தைத் தருவது.எந்தவொரு மகளுக்கோ மகனுக்கோ புத்தியில் என்றும் இனித்துக் கொண்டிருப்பது.

“தேநீரில் எறுப்பு
இனிப்புடன் சுவைக்கும்
அகால மரணம்” .

“உடல் முழுக்கப் பாரம்
சளைக்காமல் இழுக்கும்
பாதையில் நத்தை.”

“தற்கொலைத் தாக்குதலுக்கென்று அறிந்திருக்கவில்லை
பெட்டிக்குள் அடுக்கப்பட்ட
தீக்குச்சிகள்”
இவை யாவும்

என்னைச் சிரிக்க வைத்தவை.
கவிஞரின் நகைச்சுவை உணர்விற்கு சான்று பகரும் கவிதைகளாக இவற்றைப் பார்க்கிறேன்.
” அரச ஊழியர்கள் வயதெல்லை
அறுபதென அறிவிக்கின்றார்.
எழுபதுகள் தாண்டிய சபாநாயகர்.
“கந்தலை உடுத்தபடி
கம்பீரமாக நிற்கிறது
காவல் வெருளி”
“மேகத்தில் உருவங்கள்
அண்ணாந்;து வானம் சிரித்தபடி
ஒண்ணுக்கிருக்கும் சிறுவன்.
‘ குப்பைத்தொட்டியில்
அதிகமாக இருந்கின்றது
நாய்களின் தேடல்.”

“ஒட்டுபவனுக்கு வறுமை
பயணிக்கு நாகரீகமோகம்
இருவர் காற்சட்டையிலும் ஓட்டை,

நான் வியந்தவைகள்
“வீட்டுக்கு வந்த தாய்
மகள் பரிமாறுகிறான்.
பெருந்துக்கம்.”

வீதிக்குழி நீரில்
குளித்துக் கொண்டிருக்கும்.
ஒரு துண்டு வானம்”

“கால்களின் தாளத்தில்
மெல்ல உருவாகிறது
கைத்தறித் துணி.”
“வரிக்கு வரி
அழகாகத்தான் இருக்கிறது
வரிக்குதிரை”

“விழித்தே கிடக்கிறது.
பசித்தவனையும் புசித்தவனையும் பார்த்து
நெடிய இரவோடு நிலா”

“சாதிக்கும் இடத்திற்கு
சென்று வென்று விடுகிறது
சாதி”
சிந்திக்க வைக்கும் கவிகள் பற்றி நான் அதிகம் பேசமாட்டேன் ஏன் என்றால் நீங்களும் சிந்திக்க வேண்டும் என்பதற்காக.
“மக்கள் போராட்டம் குறைந்து
சகமான நிலையில்
வாழ்க்கையின் வலிகள்”

“புத்தாடையில் தாத்தா
கம்பீரமாக இருக்கிறார்
அஞ்சலிக்கு முதியோர் இல்லத்தில்”

“இறந்தது பிறந்த சிசு
கவலைப்படவில்லை
மலட்டுப் பட்டம் பெற்ற பெண்.”

எல்லா மதங்களும்
ஒரே வரிசையில்
கொரோனா புதைகுழிகள்

“துடித்துத் துடித்து
விழுங்கி விடுகிறது
நேரத்தை நொடிமுள்”
நான் சொல்லவில்லை. இதையும் கவிஞர்தான் சொல்கிறார். அவரது 763வது கவிதையில்,
இறுதியாக அவரது குடும்பம் குறிப்பாக அவரது தாய், கணவன், பிள்ளைகள் அவருக்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்பு நல்கி மேலும்; பல படைப்புக்கள் வெளியிடுவதற்கு உதவி புரிய வேண்டும் என்று கேட்டு,
எல்லாம் வல்ல இறையோன் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்கி, இலக்கிய உலகிற்கு இன்னும் பல நூல்கள் வெளியிடுவதற்கு உறுதுணை புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

நன்றி.

நூல் : தூரிகை வரையும் மின்மினிகள்

நூலாசிரியர் : Dr ஜலீலா முஸம்மில் MBBS SL

பக்கங்கள் : 196

தொடர்புக்கு : 0771308495

 

எழுதியவர்

கே. பாத்திமா ஹஸ்னா
போதனாசிரியர்.

 

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *