பெண்கள் மீதான அத்துமீறல்கள் , தீண்டாமை , வன்முறைகள், பெண்களின் மன போராட்டத்திற்கு காரணமான ஆண் வர்க்கத்தையும், ஒரு சில பெண் வர்க்கத்தையும் ரிப்பேர் செய்ய 11 சிறுகதைகள் கொண்ட தொரட்டி சிறுகதை தொகுப்பு அமைந்துள்ளது.
யோசித்து யோசித்து மனதினுள் வெம்பி மன இறுக்கத்தில் இருக்கும் அவளின் பாட்டியை பார்த்து பேத்தி, ஏன் யோசித்திட்டே இருக்க , புடிக்கலான கழட்டவேண்டியதுதானே என்று சொல்லி செல்லும் வார்த்தை அவளின் மனதை விடுதலை அடைய செய்கிறது 40 வருசம் கழித்து , மூக்கில் இருந்து விடுதலை அடைந்த மூக்குத்தி அடுத்த நிமிடத்தில்.
தொலைந்து போன பாசம் சிறுகதை …. பெண்ணிற்கு பெண்ணே எதிரி….
மாமியாரை மோசமாக நடத்தும் மருமகள் மல்லிகா தன் மகனை நல்லா சாப்புடு அப்ப தான் நீ பெரியவனா பிறகு அம்மாவை நல்லா வெச்சி காப்பாத்துவனு சொல்லும் போது முரளியின் மனம் சுரீலென்று அனல் வீசி … மத்தவங்களுக்கு வந்த தக்காளி சட்டினி … தனுக்கு வந்த ரத்தம் என்று எடுத்துக்கொள்ளும் மல்லிகாவை கண்டிக்காமல் …. கடந்து செல்லும் முரளி ….
அம்மாவிடம் சென்று ஆறுதலாய் பேசும் போது மகனின் பாசம் தாயின் இருமையை விலகி சென்கின்றன…
தொரட்டி ….
தன்னுடைய சம்மதம் இல்லாமல் குடிபோதையில் வந்து தாலிகட்டிய மாமாவை உறவுகள் கண்டிக்காமல் அவனுடனே சேர்ந்து வாழ பரிகாரம் தேடும் பெற்றோர்கள்..
அவனுக்கு தண்டனையாக , தன் தாலியை கழட்டி கட்டியவனிடமே கொடுத்துவிட்டு தாலி இல்லாமல் அவனுடன் மனைவியாக வாழும் சுகுணா என கதை முடிகிறது…
தாலி கட்டினவன் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என இருக்கும் அடிமை தனம் அகல வேண்டும் , நிலைமை மாற வேண்டும்.
பெண் குழந்தைகளின் மீதான சீண்டல்கள், அத்துமீறல்கள் பெரும்பாலும் அவர்கள் அடிக்கடி புழங்கும் ஜந்துக்களே (ஆண்கள்) காரணமாக உள்ளதை மெய்பிக்கும் தரவாக “பட்டாம்பூச்சியின் வண்ணம் இன்னும் என் கைகளில்” “நெஞ்சி முள் படுக்கை ” சிறுகதைகள் அமைந்துள்ளது.
பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு வேளியே பயிரை மேய்வது போல் இருப்பதை மீண்டும் பதிவு செய்கிறது.
இன்றைய ஆண் குழந்தைகள் தான் எதிர்காலத்தின் ஆண் சமுகமாக உருவாகபோகிறார்கள். ஆண் பிள்ளைகளை ஓழுக்கமாக வளர்க்க இந்த சமுதாயத்தில் அப்பாவுக்கும் / அம்மாவுக்கும் கூடுதல் கவனம் தேவை.
ஒரு வீரிய மிக்க , ஆரோக்கியமான சமுதாயம் அமைய பெண்களின் இயல்பில் எந்த ஒரு தாக்குதல்களும் இன்றி ஒவ்வொரு தனி நபரும் பொறுப்புடன், ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டிய அவசியத்தை தொரட்டி கதைகள் வழியாக ஆசிரியர் இறைமொழி அவர்கள் வலியறுத்துகிறார்!!.
தோழர் அவர்களின் படைப்புகள் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்!!!
நன்றி !!!
நூலின் தகவல்கள்
நூலின் பெயர் : “தொரட்டி (சிறுகதைகள் )”
ஆசிரியர் : இறைமொழி
பக்கங்கள் : 119.
விலை : ரூ. 160/-
வெளியீடு : நம் தமிழ் பதிப்பகம்
எழுதியவர்

ஞா ஆனந்தன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

