ஆசிரியரின் தந்தை சந்தக் கவிஞர் திரு வே. சதாசிவம் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, அறம் கிளை தோழரான இறைமொழியின் முதல் சிறுகதை தொகுப்பு…
முதல் தொகுப்பு என்று உணர முடியாத வகையில், ஒவ்வொரு கதையின் கருக்களும் தெறிப்பாக, மனதை தாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
தொகுப்பில் உள்ள எல்லா கதையும், பெண் பிறந்ததில் இருந்து வளர்ந்து, பருவமெய்தி, பட்டம் பெற்று, வேலைக்குச் சென்று, திருமணம், குழந்தை, கணவர், முதுமை என்று வாழ்க்கையின் அத்தனை படிநிலைகளிலும், ஏதோ ஒரு அடியை தாங்கியவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை ஆழமாகச் சொல்கிறது.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல, அத்தனை சிறுகதையும் ஏதோ ஒரு பெண்ணின் சோகத்தை வருடிச் செல்கிறது ..
காதலில் கசிந்துருகி சிறுகதை சாமானிய கணவன் மனைவியின் ஊடல் தரும் அன்பின் வெளிப்பாடாக, பதமாக வெளிப்படுகிறது.
தொடரட்டி சிறுகதை அவள் அறியாது அவன் கட்டிய தாலியை புறக்கணிக்கும் புதுமைப் பெண்ணின் உணர்வுகளைச் சொல்கிறது.
ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டிய சிறுகதை தொகுப்பு நூல். பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் சிறப்பான கதைகளாக செதுக்கித் தந்திருக்கும் தோழர் இறைமொழிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..
தொடரட்டும் தோழர் தங்கள் எழுத்துப் பணி.
நூலின் தகவல்கள்
நூல் : தொரட்டி
நூலாசிரியர் : இறைமொழி
விலை : ரூ. 160/-
பக்கங்கள்: 120
வெளியீடு : நம் பதிப்பகம்
எழுதியவர்

கவிதா பிருத்வி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
கவிதா பிருத்வி
தஞ்சை

