உலகமானது பல்வேறு ஒலிகளையும் ஒளிகளையும் உள்ளடக்கியது. ஒலிகள் முறைப்படுத்தப்படும் போது அவைகள் இசைகளாக மாறுகின்றன. இந்த இசையானது ஒரு கலையாக கருதப்படுகின்றது. ஆய கலைகள் அறுபத்திநான்கு என்று நம் முன்னோர்கள் கூறுவர்.
இவ்வகையான கலைகளை கற்பதன்மூலம் ஒருவருக்கு தத்துவ அறிவு, அரசியல் அறிவு, வீரம், விவேகம் போன்ற குணங்கள் உருவாவதாக அறியப்படுகின்றது. இந்த குணங்களின் தொற்றுவாயாக வடிவியல் காணப்பட்டத்தினை கணிதவியலார்கள் நன்கு உணர்த்திருந்தனர் வடிவியலும் கணிதமும் தொடக்க காலத்தில் தனித்தனி பிரிவாக கருதப்பட்டது. ஆனால் கணிதமும் வடிவியலும் ஒரு குறிப்பிட்ட ஈர்ப்பு சக்தியைக் கொண்டிருந்தன என்று அதனை இணைத்தவர் கிரேக்கநாட்டு தத்துவ கணித மேதை பிளாட்டோ ஆவார்.
அரசு சேவைக்கு ஆண்களை தயார்படுத்த தத்துவ நடவடிக்கைகளுடன், இசை, வானியல் போன்றவற்றில் தனிப் பிரிவு மற்றும் பல்வேறு வகையான வகைப்பாடு கொண்டு கணிதத்தில் தீவிரமான அறிவியல் பிரதிபலிப்பு கொண்டும் கற்பித்தல் பாடங்கள் மற்றும் உரையாடல்களை அடிப்படையாகக் கொண்டும் ஏதென்ஸ் நகரின் புறநகரில் கிமு 387 ஒரு பள்ளியினை நிறுவினார். இந்த கல்விநிறுவனமே உலகின் முதல் கல்விநிறுவனமாக இன்றளவும் பார்க்கப்படுகின்றது.
அந்த பள்ளியின் வாசலில் “வடிவியல் தெரியாதவர்கள் என் வாசலுக்கு வராதீர்கள்” என்று எழுதி இருந்தார். இவ்வகையான சொற்றொடரிலிருந்தே நமக்கு தெரிகின்றது அங்கு நடத்தப்பட்ட பாடங்களில் எவ்வளவு உண்மை உள்ளது என்று தத்துவங்களையும் அறிவியலையும் போதிக்கின்ற பள்ளியில் வடிவியலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதிலிருந்தே நமக்கு வடிவியலின் முக்கியத்துவம் தெரிய வருகின்றது.
அனைத்துப் பாடங்களுக்கும் அடிப்படையான அறிவியல் முறை வடிவியலாகும். இது வடிவியல் என்பது கணிதத்தின் ஒரு பிரிவாக மட்டுமே தற்போது கருதப்படுகின்றது. ஆனால் வடிவியல் அனைத்து அறிவியல் தொழில்நுட்பங்களும் அடிப்படையான ஒரு அடிப்படை படமாக கிரேக்க நாட்டு தத்துவ கணித மேதை பிளாட்டோ கருதினார். எனவே தான் அவர் தனது பள்ளியின் வாசலில் அந்த உண்மையை ஆணித்தனமாக உலகுக்கு அறிவிக்க “வடிவியல் தெரியாதவர்கள் என் வாசலுக்கு வராதீர்கள்” என்று எழுதியிருந்தார் .
தத்துவ மேதை சாக்ரட்டீசின் தலைமை மாணவராகவும் அரிஸ்டாட்டில் என்ற மேதையை உருவாகியவராகவும் ஒரு நாட்டின் ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்று அரிஸ்டோக்கிளீஸ் என்ற தனது பெயரினை மாற்றி பிளாட்டோ என்ற பெயரில் “குடியரசு ” என்ற புத்தகத்தினை எழுதியவராகவும் அறியப்படுபவர் கிரேக்க நாட்டு தத்துவ கணித மேதை பிளாட்டோ ஆவர்.
பெரிய செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தாலும் நாடு- மக்கள்-அறிவியல் -கணிதம் என்று உலகத்தினை ஊர் தோறும் சென்று போதிக்கும் சிந்தனைவாதி பிளாட்டோ. நாட்டுப்பற்று மிக்கவராக ராணுவத்தில் பணியாற்றினார். பிறகு தத்துவமேதை சாக்ரட்டீஸ் சீடராக இருந்து தத்துவ அறிவியலை கற்றார். கற்றத்தினை ஊருக்கு எடுத்து இயம்பினார்.
நல்ல அறிவார்ந்த மக்களையும் நாட்டினையும் சிறந்த அறிவியலையும் வளர்க்க பாடுபட்ட பிளாட்டோ தன்னுடைய மாணவர் ஒருவரின் திருமணத்திற்கு சென்ற போது இரவில் உறக்கத்தில் தனது 80 ஆம் வயதில் இறந்தார். மொழி, தத்துவம், அறிவியல் மற்றும் கணிதம் இவைகளை பிரித்து பார்க்காமல் அவைகளை ஒன்று சேர கற்பதும் இவை அனைத்திற்கும் அடிப்படையான வடிவியலினை பிழையற கற்பதும் அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும். இதனால் வலிமையான தேசம் உருவாகும் என்பதில் எவ்வித ஐயமில்லை ஆகவே நாம் அறிவின் வாசலுக்கு செல்ல வேண்டுமென்றால் வடிவியல் வாசலுக்கு செல்லவேண்டும். எனவே கணிதம் பயில்வோம் இயற்கையை வெல்வோம்.
துணை நூல்கள்
https://faculty.math.illinois.edu/~jelliot2/plato.html
http://www.antiquitatem.com/en/platonic-academy-geometry-nepotism/
https://www.storyofmathematics.com/greek_plato.html
தொடர்புக்கு [email protected]
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.