உனக்கு ஒரு வீதம் நன்மை இராத போதும்
உனக்கு ஒரு வீதம் முக்கியத்துவம் தராத போதும்
உனது திருப்தி இன்மையிலும்
உன் நிம்மதி குலைந்த நிலையிலும்
உள்ளத்தீ உனை உருக்கும் பொழுதிலும்
எதிர்க்கவியலா மாற்றத்தின் பிடியிலும்
எதிர்பார்ப்புகள் கருகிய வேளைகளிலும்
உன் மௌனத்தின் முகவரி தொலைத்து
உன் மனக்கிலேசம் துடைத்து
ஊழ் துயரச்சிறை உடைத்து
ஆன்மாவில் மெல்லிய சிறகுகள் வளர்த்து
அத்துணை நேசத்துடன்
அத்துணை பிரியத்துடன்
அத்தகைய பாந்தத்துடன்
நீ தருகின்ற
புன்னகை
பரிவு
கைலாகு
குசலம்
வளமை
வாழ்த்து
உபகாரம்
சலுகை
இவைதாம்
எல்லையற்ற பெருநேசத்தின்
வெளிப்பாடுகள்
எல்லையற்ற பெருந்தன்மையின்
கோட்பாடுகள்
இப்படித் தோற்றுப்போவதில்
எதையும் நீ இழப்பதில்லை…!
Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தகவிமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.