“தோட்டியின் மகன்”
வாசித்து மீள்கிறேன்.
தகழி சிவசங்கரப் பிள்ளையின் தோட்டியின் மகனை சுந்தர ராமசாமி மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளார்.
காலச்சுவடு பதிப்பகத்தின் நவீன இந்திய கிளாசிக் நாவல் வரிசையில் சிறப்பிடம் பெறும் தோட்டியின் மகனை வாசித்து முடித்த போது கண்களில் கண்ணீரை உணர்ந்து வியக்கிறேன்.
இந்நாவல் என்னுள் ஏதோ ஓர் பாரிய தாக்கத்தை செலுத்தி இருப்பதை உணர்கிறேன்.
இதை வாசித்து முடிக்கும் போது நள்ளிரவு 2மணி கடந்திருப்பதைக் கூட நான் உணர்ந்திருக்கவில்லை.
1946இல் எழுதப்பட்ட தோட்டியின் மகனை 1952,53ஆம் வருடங்களில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Buy தோட்டியின் மகன் Thottiyin Magan Book Online at Low Prices in India | தோட்டியின் மகன் Thottiyin Magan Reviews & Ratings - Amazon.in
“வாழ்க்கையின் போதாமைகளை எண்ணி ரத்தத்தை தெறிக்க வைத்துக் கொள்ள ஒரு முகாந்திரம் தேடி அலையும் ஜீவிதம் அது”
வாழ்க்கை உணர்த்தும் குறைகளை அனுபவ வடிவங்களை படிக்கும் போது ரத்தம் கொதிப்பது போலிருக்கிறது.
தோட்டியின் மகனை வாசிக்க ஆரம்பித்தது முதல் ஏதோ ஓர் ஈர்ப்பு இருந்து கொண்டே இருந்தது. விருப்பும் வியப்பும் மனதில் அலையென மோதிக் கொண்டே இருந்தது.
கொடுமையான ஒரு வாழ்க்கையை இத்துணை நேர்த்தியாக ஆழ்மனதின் சுவர்களில் பதியும் படி அவர் கூறும் திறன் அற்புதமானது.
வெளியுலகு கண்டிராத ஒரு இருண்ட வாழ்க்கையின் பக்கங்களை எப்படி இவரால் இவ்வளவு சகஜமாகப் புகுந்து மன உணர்வுகளை அள்ளிக் கொண்டு வர முடிகிறது என்று வியக்கிறேன்.
தகழி வெளிப்படுத்துவது தோட்டிகளின் வாழ்க்கையின் அடிப்படைத் தகவல்கள் அல்ல.
அவர்களது ஆழ்மனங்களில் மூட்டும் அக்கினிச் சுவாலை என்பதை உணர்த்தும் போது என்னிலை மறந்து வியக்கிறேன். இந்த அக்கினிச் சுவாலையை எப்படி அவரால் மறு உருவாக்கம் செய்ய முடிந்தது என்பது வியப்பு.
தோட்டியின் மகன் | எழுத்தாளர் ஜெயமோகன்
Sundara Ramasamy
கொடுமையின் அகோரத்தில் மனம் கொள்ளும் ரணத்தில் ரத்தத்தில் உஷ்ணம் ஏறாமல் என்னால் தோட்டியின் மகனின் எந்தப் பக்கத்தையும் கடக்க முடியுமாக இல்லை.
நான் இது வரையில் அறிந்திடாத ஒரு உலகத்திக்குள் புகுந்து புறப்டத் தெரியாதவளாய் ஆயிரம் கேள்விகளோடு மனம் சோர்ந்து போயிற்று என்றே கூற வேண்டும்.
தோட்டியின் மனதில் உருவாகும் காதல்…
திருமணம்…
தோட்டிகளும் தொழிலாளர் வர்க்கம் தானே…
தொழிலில் ஏன் இந்த ஏற்றத்தாழ்வு..
அவர்களின் அன்றாட வாழ்க்கை முறை காட்சியின் யதார்த்தத்தில் இருந்து விடுபட முடியாது.
சுடலை முத்து தன் மகன் தோட்டி ஆகி விடக் கூடாது என்பதற்காக எடுத்த அத்துணை முயற்சிகளும் கசிந்துருகும் மெல்லிய பனியென அர்த்தமட்டுப் போகும்
ரணத்தை விளைவிக்கிறது
ஓர் பாட்டாளி வர்க்கம் அடக்கி ஒடுக்கப் படும் போது அச்சமூகத்திலிருந்து பாரிய உரிமைக் குரல் மேலோங்கும் என்பதே நிதர்சனம்…
மிஸ்ரா ஜப்பார்

புத்தகம்: தோட்டியின் மகன்
விலை: ₹166.00 INR
வெளியீடு: காலச்சுவடுLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *