Subscribe

Thamizhbooks ad

தோழர்கள் கற்க வேண்டிய எட்டு புத்தகங்கள்-ச.வீரமணி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு சார்பில் கட்சிக் கல்வி வரிசையின்கீழ் எட்டு புத்தகங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக கடந்த இரண்டு மூன்று மாதங்களாக “பீப்பிள்ஸ் டெமாக்ரசி” இதழில் விளம்பரம் வந்துகொண்டிருக்கிறது.

அவற்றின் தலைப்புகள் வருமாறு: 1. இயக்கவியல் பொருள் முதல்வாதம் (Dialectical Materialism), 2. வரலாற்றுப் பொருள்முதல்வாதம் (Historical Materialism), 3. அரசியல் பொருளாதாரம் (Politcal Economy), 4. கம்யூனிஸ்ட் இயக்கம் (Communist Movement), 5. கட்சித் திட்டம் (Programme), 6. சமூகக் குழுக்கள் (Social Groups), 7. ஸ்தாபனம் (Organization) மற்றும் எண்ணிடப்படாமல் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா சக்திகளின் அச்சுறுத்தல்மற்றும் அதனை எப்படி எதிர்கொள்வது? (Threat of RSS and Hindutva Forces; How to counter them) என்று எட்டு புத்தகங்கள் ஆகும்.

இந்தத் தலைப்புகள் என்னவோ பழையனதான். ஆனால் ஒவ்வொன்றையும் பிரித்து உள்ளே சென்றோமானால், இன்றையதினம் நம்முன் உள்ள அரசியல் நிலைமைகளுடன் குறிப்பாக ஆர்எஸ்எஸ்/பாஜகவினரின் மதவெறி சித்தாந்தத்தின் அடிப்படையில் அவர்கள் மேற்கொண்டுவரும் சூழ்ச்சிகளை நம்முடைய மேற்கண்ட மார்க்சிய சித்தாந்தத்தின் அடிப்படையில் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதைக் கூறியிருப்பதைப் பார்க்க முடியும்.

இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்னும் புத்தகத்தில் இயக்கவியல் பொருள்முதல்வாதம், இந்தியத் தத்துவம் (Indian Philosophy), அறிவியல் மற்றும் தொழில்நுட்பமும் அவற்றின் சமூக வரலாறும் என்று மூன்று உள் தலைப்புகளில் அரசியல் கல்வி போதிக்கப்பட்டிருக்கிறது.

சுமார் 135 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் இயக்கவியல் பொருள்முதல்வாதம் தொடர்பாக நாம் இதுவரை படித்த புத்தகங்களில் எல்லாம் இல்லாத பல விஷயங்கள் இதில் இருப்பதைக் காணலாம்.

இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்னும் பகுதி குறித்து அநேகமாக நாம் அனைவரும் அறிந்திருப்போம். அது 32 பக்கங்களில் இதில் இடம் பெற்றிருக்கிறது. ஆயினும் அதற்கு அடுத்து, இந்தியத் தத்துவம் என்னும் பகுதியில் இந்தியாவில் நடைபெற்ற தத்துவப் போராட்டம் மிகவும் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நாஸ்திக தர்சனா என்னும் தலைப்பின்கீழ் உள்ள பகுதியில் லோகாயதா தர்சனா, புத்திசம் (புத்தமதம்), ஜைனிசம் (சமணம்) என்பவை குறித்து இடம் பெற்றிருக்கின்றன.

ஆஸ்திக தர்சனா என்னும் தலைப்பின்கீழ் சாங்க்யா தர்சனா, மீமாம்சா, வேதாந்த தர்சனா முதலியன இடம் பெற்றிருக்கின்றன. இந்திய சித்தாந்தங்கள் (Indian Idealism) என்னும் பகுதியில் உபநிஷத்துகள், மனுஸ்மிருதி முதலானவை இடம்பெற்றிருக்கின்றன.

அடுத்து, நம் நாட்டிலிருந்த பக்தி இயக்கங்கள் குறித்தும், பிரிட்டிஷ் காலனி ஆட்சி காலத்தில் உருவான மறுமலர்ச்சி சீர்திருத்த இயக்கம் குறித்தும் ஜோதிராவ் புலே, நாராயண குரு, பி.ஆர். அம்பேத்கர் குறித்தும் இடம் பெற்றிருக்கின்றன.

தேசிய இயக்கம் என்னும் தலைப்பின்கீழ், பாலகங்காதர திலகர், அரவிந்த கோஷ், ரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி ஆகியவர்களின் பங்களிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

அடுத்து, பெரு முதலாளிகள்-நிலப்பிரபுக்கள் ஆட்சியின்கீழ் ஜவஹர்லால் நேரு, நவீன தாராளமயக் கொள்கைகள், நவீன தாராளமயம் முதலானவை அலசி ஆராயப்பட்டிருக்கின்றன.

மூன்றாவது தலைப்பு இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும், அதனுடைய சமூக வரலாறு குறித்தும் ஆராய்கிறது.

சுமார் 135 பக்கங்கள் உள்ள இந்தப் புத்தகத்தின் விலை ரூ30.

இதேபோன்று கல்வி வரிசையில் இரண்டாவதாக வெளியிடப்பட்டிருக்கும் புத்தகம் வரலாற்றுப் பொருள்முதல்வாதம். இதுவும் நான்கு உள்தலைப்புகளைப் பெற்றிருக்கிறது. வரலாற்றுப் பொருள்முதல்வாதம், இந்தியாவில் சமூக கட்டுமானங்கள் மற்றும் வரலாற்றை மார்க்சியத்தின் அடிப்படையில் புரிந்துகொள்ளுதல், இந்திய வரலாற்றைத் திரித்தல், இந்துத்துவா சக்திகளால் இந்திய வரலாறு திரிக்கப்படுதல் ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன.

56 பக்கங்களைக் கொண்ட இதன் விலை ரூ20.

கல்வி வரிசையில் மூன்றாவதாக இடம் பெறுவது அரசியல் பொருளாதாரம். 104 பக்கங்களைக் கொண்ட இதன் விலை ரூ30.

கல்வி வரிசையில் நான்காவதாக இடம் பெறுவது கம்யூனிஸ்ட் இயக்கம். இதிலும் ஏகாதிபத்தியம்-சோசலிசம்; விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கு; சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு என்று மூன்று உள்தலைப்புகள் இருக்கின்றன.

80 பக்கங்களைக் கொண்ட இதன் விலை ரூ20.

கல்வி வரிசையில் ஐந்தாவதாக இடம் பெறுவது கட்சித் திட்டம். 2022 அக்டோபரில் கட்சியின் கல்வி உப குழு நடத்திய மத்திய ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பங்கேற்றவர்களுக்கு ஒரு குறிப்பை சுற்றுக்குவிட்டது. அது விவாதத்திற்குப்பின் இறுதிப்படுத்தப்பட்டு, இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் கட்சித் திட்டம் மற்றும் இடது ஜனநாயக முன்னணி மற்றும் நடப்பு அரசியல் நடைமுறை உத்தி (Current Political Tactical Line) இடம் பெற்றிருக்கின்றன.

64 பக்கங்கள் உள்ள இதன் விலை ரூ20.

கல்வி வரிசையில் ஆறாவதாக இடம் பெறுவது சமூகக் குழுக்கள் என்னும் புத்தகமாகும். இதில் அடையாள அரசியல் மற்றும் சமூகக் கேள்விகள்: மதம், ஜாதி, பாலினம்; இந்துத்துவா மதவெறி; பெண்களின் பிரச்சனை மற்றும் பாலின சமத்துவம் குறித்து உள்தலைப்புகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

71 பக்கங்கள் உள்ள இதன் விலை ரூ20.

கல்வி வரிசையில் ஏழாவதாக இடம் பெறுவது ஸ்தாபனம் ஆகும். இதில் கட்சி ஸ்தாபனத்தின் கொள்கைகள்; கட்சி ஸ்தாபனம் மீது நடப்புக் கடமைகள்; கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகள் என்று மூன்று உள்தலைப்புகளில் விஷயங்கள் கூறப்பட்டிருக்கின்றன.

64 பக்கங்கள் உள்ள இதன் விலை ரூ20.

அடுத்ததாக, கட்சிக் கல்விக்காக எனத் தலைப்பிட்டு, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா சக்திகளின் அச்சுறுத்தல் மற்றும் அதனை எப்படி எதிர்கொள்வது என்று ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டிருக்கிறது. 64 பக்கங்கள் உள்ள இதில் இந்தியாவில் ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் அனைத்து அமைப்புகள் குறித்தும், அவை செயல்படும் வழிமுறைகள் (modus operandi) குறித்தும் துல்லியமாக அலசி ஆராயப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு இந்த எட்டு நூல்களும் பாசிஸ்ட்டுகள் பல்வேறு முனைகளிலும் தொடுத்திருக்கும் தாக்குதல்களை முறியடித்திட ஒவ்வொரு கட்சித்தோழரும் படிக்க வேண்டிய போராயுதங்களாகும்.

..

Tag: Dialectical Meterialism, Historical Materialism, Programme, Organization, Threat of RSS and Hindutva, S. Veeramani, CC Publications,

Latest

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...

நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்

சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ கிரீன் பர்கர் அசோசியேட்ஸ் ஐஎன்சி ,யுஎஸ்ஏ  தமிழில் :எதிர் வெளியீடு முதல் பதிப்பு 2016 -நான்காம் பதிப்பு 2021 600 பக்கங்கள்- ரூபாய் 699 தமிழாக்கம்...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான் கதையில் வரும் குருவம்மா என்கிற எருமை தான் கதாநாயகி என்றாலும் அதில் மிக முக்கியமான செய்தியான கவனக்குறைவு பற்றி சூசகமாக...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு . சற்று பொறுமையாய் நேரம் மெனக்கெட்டு வாசிக்க ; இதயம் உள்ள ஒவ்வொருவரையும் வேண்டுகிறேன். தூங்கவிடாமல் துரத்தும் குழந்தைகளின் மரண ஓலம்...

1 COMMENT

  1. அவசியம் படிக்க வேண்டிய நூல்கள் தான் நண்பரே….

    ந க துறைவன் வேலூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here