பார்வதி பரமசிவன் கவிதைகள்
*************************************
1
நூறு ரூபாய்
என்றாலும்
மணியார்டரில்
வாங்கிய மகிழ்ச்சி !
ஃபோன்பேயில்
கிடைப்பதில்லை?!
*************************************
2
வாயால் சொல்ல
முடியாததையும்
வரிகளால் சொல்வதுதான்
‘கவிதை’
*************************************
3
மழைநீர்
மண்ணில் பட்டதும்
கிளம்பும் மண்வாசம்
ஏர் உழும்போது
எழும் ஒருவித வாசம்
மலர்களின்
மயக்கும் வாசம்
பட்டியலிடலாம்
பலவித வாசனைகள்
ஆனால்
நான்விரும்பும் வாசம்
உன் அருகாமை எனும்
நேசம்.
*************************************
📚 எழுதியவர்:
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


ஜோடனை இல்லாத இம்மாதிரியான கவிதைகளைப் படித்து ரொம்ப நாளாயிற்று,.
வாழ்வை ரசித்து அனுபவிப்போரால்தான் இப்படி எழுத முடியுமோ என்னவோ?