தங்கேஸ் கவிதைகள்
**********************************************
1. அசைவற்ற பொழுதுகள்
அசைவற்ற பொழுதுகளை
அசைத்துப் பார்த்துக்
கொண்டிருக்கிறது
காற்றோடு புணரும்
ஓர் அரசமரத்திலை
எந்த அரூபத்தின் பவனியை தரிசிக்க
திடீரென்று கோடி கண்கள் முளைத்து விடுகின்றனவோ
புழுதி படிந்தஇந்த வீதிக்கு ?
நிலவு நதியாகும் தருணம்
உறங்கா மீன்களின்சுவைக்கு
பலியாகி கொண்டிருக்கிறது
உடைந்து போன விடியலின் கரு
புதையுண்ட சொல்லொன்று
சுயம்பாக முளைத்தெழ
கனவெங்கும் பறந்தலைகின்றன
மழைத் தட்டான் பூச்சிகள்
கசாப்பு கடையில் கட்டப்பட்டிருக்கும்
திசையறியா ஆட்டுக்குட்டி
இரவின் திரண்ட சாபத்தை
கத்தி கத்தி தீர்க்கும் போது
நினைவில் வந்து வந்து போகிறது
முதுகு வளைந்த
கூர்மையான வெட்டுக் கத்தி
**********************************************
2. நிலவாய் இருப்பதின் துயரம்
3.
எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவனை
எச்சில் ஒழுக வாசிக்கிறான் அபஸ்வரத்தில்
சீயம் மாற்றாத நாதஸ்வரத்தில்
யார் மீது கோபமோ
மாட்டை வெளுப்பது போல வெளுக்கிறான்
தவில்காரன்
மூன்று முறை முச்சந்தியில் சுற்றியபின்பு
புறப்பட்டுவிட்டது சொர்க்க ரதம்
கூட்டம் சேர்ந்தும் பிரிந்தும் கலைந்தும்
காடுநோக்கி ஏகும்
அதைப் புதைத்துவிட
சாலைகளில் சிதறிய பூக்களில்
நான்கு சக்கரங்களும் இரண்டு சக்கரங்களும் சதாய்க்க
பெட்டிக்கடை ராமன் வாழைப்பழச் சீப்பை அவிழ்த்து
வீட்டுக்குள் வைக்கிறான்
சத்தமில்லாமல்
சமத்து நாய்க்குட்டியாய்ப்
பாடையின்கீழ் செல்லும் மரணம்
தெருமுக்கு திரும்பியதும்
அனைவருக்கும் போக்கு காட்டிவிட்டு
அடுத்ததெருவிற்குள் நுழைந்துவிடுகிறது
அத்தனை லாவகமாய்
📚 எழுதியவர்:
தங்கேஸ்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
