தங்கேஸ் கவிதைகள்
**********************************************
1. என் கவிதையே,,
உன்னுடன் தான் நான்
போராடிக்கொண்டிருக்கிறேன்
என் சகியே
உலக இலக்கயங்களில் தோய்ந்து வரவா
மீண்டும் ஒரு காதலில் மூழ்கிவிlடவா
சித்துக்காட்டும் குருவியுடன்
பறந்து வரவா
இல்லை காற்றோடு இறகாக
உதிர்ந்து விடவா
கொட்டும் பனியில் கொட்ட கொட்ட விழித்திருக்கும்
அந்த நிலவுடன் கொஞ்சம்
நனைந்து வரவா
ஒரு கள்ளமற்ற சிரிப்பில் கலந்து விடவா
இரு கண்ணீர் துளிகளில் அமர்ந்து பவனி வரவா
இல்லை கடவுளைக் கொஞ்சம் தியானித்து வரவா
நான் என்ன செய்ய வேண்டும்
சொல் சகியே
உடனே சொல் என்றேன்
** நீ செய்வதற்கு ஒன்றுமில்லை
கொஞ்சம் பேசாமல் இருந்தாலே போதும்
என்றது என் கவிதை**
**********************************************
2. நிழல்கள்
எதிர்வீட்டுச் சுவற்றில் தரையிரறங்குகின்றன
என் நிழலின் விழுதுகள்
நானோ என் நிழலின்
பார்வையாளன்
கருவறையில் தோன்றிய கருமைநிறம்
பூசி அலைகின்றன
கால்கள் இல்லாத இந்த நிழல்கள்
பகலெல்லாம் நாய் வாலென நீண்டிருக்கும்
நிழல்கள் தான் எத்தனை எத்தனை ?
சாதி நிழல்கள்
மத நிழல்கள்
முகத்திற்கு ஒரு நிறம் காட்டும்
தந்திர நிழல்கள்
கோவில் கருவறையில்
தீப தீபத்தின் வெளிச்சத்தில்
கல்சுவரில் விழுந்து உயிர்த்து
தரிசனம் தருகிறது
மூலவரின் நிழல்
நாமோ காற்றில்அசைந்தாடும்
அகல் விளக்கின் நிழல்கள்
பதறி படபடத்து
கண்மூடுவோம்
வாழ்வின்
தரிசனம் கிடைக்கும் முன்பே
**********************************************
3. வீட்டு நாய்களும் தெரு நாய்களும்
தெரு நாய்க்கும்
வீட்டு நாய்க்குமான
ஆகப் பெரிய வித்தியாசம்
கை சங்கிலி தான்
அடுத்ததாக
எசமானிடம் அதிகமாகக் குழையயும்
வாலசைப்பு
எந்த மனிதனும் தெரு நாய்களை
வீட்டிற்குள் சேர்ப்பதில்லை
பதிலுக்கு
எந்த தெரு நாய்களும் வீட்டு நாய்களை
தங்கள் இனத்திலேயே சேர்ப்பதில்லை
இப்படி பத்து சதவீத நாய்களை
வீட்டிற்குள் அடைத்து வைத்து
தொன்னூறு சதவீத நாய்களை
தெரு நாய்களாக்கிய பெருமை
இந்த மனிதனையே சேரும்
இதில் வேடிக்கை என்னவென்றால்
மனித சுபாவம் ஏறிப் போய்
பித்தான வீட்டு நாய்கள்
தெரு நாய்களை இகழ்ச்சியாகப் பார்த்து
வக்கனை காட்டுவது தான்
மேலும் நாகரிகமாக குரைக்கிறோமென்று
பேர் பண்னிக் கொண்டு
தங்கள் பாஷையை தாங்களே
கடித்து குதறுவதும் தான்
📚 எழுதியவர்:
தங்கேஸ்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
