ரவிஅல்லது எழுதிய மூன்று தமிழ் கவிதைகள் (Ravi Allathu Tamil Kavithaikal) | ஏழாவது சுவை | பிறர் மனமறியாத பேதமை | மகோன்னதமடையாத மறுகல்

ரவிஅல்லது எழுதிய மூன்று கவிதைகள்

1. ஏழாவது சுவை.
*********************************************

சமைக்கத் தேவையானவைகளை வாங்கும்பொழுது
அவருக்கு விருப்பமானதையே வாங்கினேன்.
சமைத்தலின் பாங்கிலும்
அவருக்கு பிடிப்பதனுடன்
அறு சுவை பொங்க
அன்பையும் கலந்துதான் முடித்தேன்.
பரிமாறி பார்த்திருக்கும் வேளையில்
வந்தமர்ந்து உண்ணும் சூழலானவரை
என் கனவிலும்
இதற்கு முன் அறியேன்.
உண்பதற்குள்தான் இருக்கிறது
வாழ்க்கையின் உண்மை முடிச்சுகள்
சில முறை அவிழ்ந்தும்
பல முறை அவிலாமலும்
ஆச்சரியமாகவென்று
நினைத்துக் கொண்டிருக்கும்பொழுது
உணவுச் சுவையில் மீண்டும் மீண்டும்
உண்பரின் மகிழ்வால்
எனக்குள் எழும் உணவளித்ததன்
உன்னதப் பூரிப்பை
வார்த்தைப் படுத்த வழிகள் இல்லை.
நீங்களொரு முறை
விரும்பி
விருந்திட்டிப் பார்த்துப் புரியாமல்.
***

2. பிறர் மனமறியாத பேதமை.
*********************************************

அசௌகரியமாகக் கதவு தட்டும்
அவசரம் எதுவாகவும் இருக்கலாம்.
எனது மூன்றாவது முகத்திற்கும்
உனது பக்குவம்
ஏதுவாக இடைஞ்சல்களற்றுக் கடக்கலாம்.
பிறர் பொருட்டான
எனது தயக்கத்தின் வெட்க நாளங்கள்
சோம்பிவிடும் நோதலை
என்ன செய்வாய்
என் சோதரனே?

3. மகோன்னதமடையாத மறுகல்
*********************************************

தகிக்கும் வெயிலில்
குளிர்மையாக்கிய நீயே
கொட்டும் பனியிலும்
கதகதப்பூட்டுகிறாய்
எப்பொழுதும்
யாவுமாக எனக்கு.

பற்றிவிட எத்தனிக்கும்
எல்லாக் கணங்களும்
நழுவிக் கொண்டே இருக்கின்றாய்
மாராப்பின் மடிப்புகளாக
மகிழாதத் துயரில்
ஆழ்த்தினாலும்
மாறிடாத அன்பில்.

கவிதை எழுதியவர்:

– ரவிஅல்லது

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *