மு.அழகர்சாமி எழுதிய மூன்று கவிதைகள்
1
ஏரிகளையும்
கம்மாய்களையும்
அபகரித்து
வீடுகளாய் மாற்றினர்….
ஆற்றுக்
கரையோரங்களை
அபகரித்து
தோட்டங்களாய்
மாற்றினர்……
நீர் வழித்தடங்களை
மறித்து
புறவழிச்சாலையாக
மாற்றினர்…
காத்திருக்கும்…..
அடுத்து…..
எத்தனை வருடங்கள்
ஆனாலும்.
நீதிமன்றம் செல்லாமலே
தன் உடைமைகளை
தனதாக்கி கொள்ளும்.
ஏரிகளும்….
கம்மாய்களும்….
ஆறுகளும்…..
ஆக்கிரமித்தல்…
நிரந்தரமில்லை
இயற்கையிடம்…….
2
அடுப்புக்கரி
அப்பிய
ஈயச்சட்டியில்
என் கண்ணம்மா
பாட்டி
போட்டுக்
கொடுத்த கடும்காபியின்
சுவையை
இதுவரையில்
எந்த டிகிரி
காபியும்
தரவில்லை…
3
என் கண்களுக்கு
எவ்வளவு
ஏக்கமோ?
உன்னைப் பார்த்தவுடன்
அப்படியே
படம் பிடித்து
வைத்துக்கொண்டது….
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

