துளி
( கோவி.பால.முருகு)
சிறிய துளி
பெரிய குடத்தில்
அடைக்கப் பட்டதால்
துளியில் உருவம்
உறுப்புகளோடு உருமாறியது!
காற்றையும்,உணவையும்
குடத்திற்குள்ளேயே
சமைத்துக் கொண்டது!
குடத்தை உடைத்துக்
குப்புற வீழ்ந்தது!
இரத்தச் சேற்றில்
பிசைந்து கிடந்தது!
துளிகள் இங்கே
பரிணாம வளர்ச்சியில்
வானையும்,மண்ணையும்
கடலையும்,மலையையும்
தன்னுள் அடக்கி
ஆள நினைத்தது!
அன்பு,ஆசை
பொறாமை,கோபம்
அனைத்தையும் சுமந்து…..
மனம்,அறிவு,உணர்வு
இவைகளோடு
தான் யார் என்பதை
அறியாமலேயே!…
உணவு தேடுதல்,
உறவு தேடுதல்,
பாதுகாப்புத் தேடுதல்
என்னும்
விலங்கு வாழ்க்கையோடு…
அடுத்தத் துளியை
விதைக்கத் தொடந்தது!