கோவி.பால.முருகுவின் "துன்பம் விலகும்" கவிதை | புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

கோவி.பால.முருகுவின் “துன்பம் விலகும்” கவிதை

“துன்பம் விலகும்” கவிதை

நெடுநாள் கனவு நனவாய் ஆகுமா?-உன்
நீண்ட துன்பம் விலகிப் போகுமா?

உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்தாய்
ஒருவேளை உணவுக்கு ஓடிப் பறந்தாய்
உடுத்தும் ஆடை ஒன்றுடன் திரிந்தாய்
ஓட்டை ஆடை உதறிட மறந்தாய்!

நெடுநாள் கனவு நனவாய் ஆகுமா?-உன்
நீண்ட துன்பம் விலகிப் போகுமா?

கூரை வீட்டில் குறுகி வாழ்ந்தாய்
கொட்டும் மழையில் குளிரில் நனைந்தாய்
கூனிக் குறுகி கொள்கை தளர்ந்தாய்
கொடுப்பதை ஏற்கும் நிலையில் வளர்ந்தாய்!

நெடுநாள் கனவு நனவாய் ஆகுமா?-உன்
நீண்ட துன்பம் விலகிப் போகுமா?

வாய்க்குச் சுவையாம் வாய்ப்பைத் தேடாய்
வாய்த்ததே அமிழ்தம் வாங்கிச் சுவைப்பாய்
வந்த நோய்க்கு வடிகால் தேடாய்
வாட்டம் அடைந்தும் வளர்ப்பதைக் காணாய்!

நெடுநாள் கனவு நனவாய் ஆகுமா?-உன்
நீண்ட துன்பம் விலகிப் போகுமா?

நிலத்தில் கீழோர் நிலையை எண்ணார்
நிலவும் உடைமை நேரெனக் கொள்ளார்
நிமிர்ந்து நின்று உரிமை கேளார்
நீளும் வறுமை நெருப்பில் நிற்பார்

நெடுநாள் கனவு நனவாய் ஆகுமா?-உன்
நீண்ட துன்பம் விலகிப் போகுமா?

அள்ளிக் கொடுத்தநீ ஆண்டியாய் திரிவதா?
அடுத்தவன் கையை அண்டிப் பிழைப்பதா?
ஆற்றல் எல்லாம் அந்நியர்க் கானதா?
அறிவைக் கூட அடகு வைப்பதா?

நெடுநாள் கனவு நனவாய் ஆகுமா?-உன்
நீண்ட துன்பம் விலகிப் போகுமா?

அடங்கி ஒடுங்கி அழிந்தது போதும்
அடுத்தவன் கொழிக்க அழுதது போதும்
ஆற்றல் தன்னை அகிலம் உணர்த்திடு
ஆட்சியில் உழைக்கும் வர்க்கம் உயர்த்திடு!

நெடுநாள் கனவு நனவாய் ஆகும்!-உன்
நீண்ட துன்பம் விலகிப் போகும்!

எழுதியவர்:

கோவி.பால.முருகு
வடலூர்.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *