துணிச்சல் காரி – நூல் அறிமுகம்
“ஒவ்வொரு குழந்தையும் வன்முறை இல்லாத மகிழ்ச்சியான உலகில் வாழ வேண்டும்..”
பள்ளியில், பேருந்தில், வீட்டில், பொது இடங்களில் இன்னும் பல்வேறு இடங்களில் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதை செய்தித்தாள்கள் மூலமும் ஊடகங்கள் மூலமும் அனுதினமும் அறிந்து வருகிறோம்.
இந்த சூழலில் இருந்து தங்களை பாதுகாப்பதோடு மட்டுமின்றி எப்படி எதிர்கொள்வது என்பதை சிறு நாவலாக படைத்துள்ளார் நூல் ஆசிரியர்.
“குழந்தைகளுக்கான துணிச்சல் விதை தான் துணிச்சல்காரி எனும் இந்த நூல்”.
இந் நூலுக்கு சிறந்த குறு நாவல் விருதை கவிதை உறவு எனும் அமைப்பு சமீபத்தில் வழங்கி பாராட்டியுள்ளது.
சாதி, மதம், படித்தவன், நன்கு படிக்காதவன், ஏழை, பணக்காரன் என்று எந்த பாகுபாடும் இன்றி ஆசிரியர்கள் குழந்தைகளை சமமாக நடத்த வேண்டும்.
வீட்டிலும், பள்ளியிலும் குழந்தைகளிடம் குட் டச் என்பது எது, பேட் டச் என்பது எது, என்பதையெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும். முக்கியமாக குழந்தைகள் உரிமைகள் என்னென்ன என்பதையும் கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும்.
ஆணாதிக்க சமூகம் குழந்தைகளை வன்கொடுமை செய்வதை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது.
இதிலிருந்து நம் குழந்தைகளை பாதுகாப்பதற்கு துணிச்சலை கற்றுக் கொடுக்க வேண்டும். துணிச்சல் உள்ள குழந்தை தன்னைத்தானே பாதுகாப்பதற்கு தயார்படுத்திக் கொள்ளும்.
பாகுபாடின்றி அனைத்து குழந்தைகளுக்கும் தற்காப்பு பாதுகாப்பு கலையை பள்ளிகளிலும், வீட்டிலும் கற்றுத் தருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதன் மூலம் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளை அவர்களாகவே தடுத்து நிறுத்தி விட முடியும்.
இது போன்ற பல்வேறு நிகழ்வுகளை தன்னுடைய நாவலில் மிக அருமையாக பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் முனைவர் சர்மிளா.
இந்த நூலை வயது வித்தியாசம் இன்றி வாசிப்போம். அனைத்துப் பகுதி மக்களிடம் இந்நூலை கொண்டு செல்வது அவசியம்.
குறிப்பாக ஆசிரியர் சமூகம், பெற்றோர்கள், பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித்துறை மத்தியிலும், தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்கள் எல்லாம் தமிழக அரசு கொண்டு செல்ல வேண்டும்.
பள்ளிப் பாடத்திட்டத்திலும், உயர் கல்வி பாடத்திட்டத்தில் இந்த நூலை கொண்டு செல்வது மிக அவசியமாகும்.
இதன் மூலம் வன்முறை இல்லாத, மகிழ்ச்சியான உலகில் நம் குழந்தைகள் இருக்க முடியும் என்பதில் ஐயமில்லை.
முனைவர் சர்மிளா கல்லூரி பேராசிரியர். கல்லூரியிலும், பள்ளியிலும் பயிலும் குழந்தைகள் எவ்வாறு அன்றாடம் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை
அனுபவபூர்வமாக கண்டுணர்ந்தவர்.
எனவே இந்த சிறு நாவல் மிக அற்புதமாக படைக்கப்பட்டிருக்கிறது. நூலாசிரியருக்கும், இந்த நூலை பதிப்பித்த புக் ஃபார் சில்ட்ரனுக்கும் பேரன்பு நன்றிகள்.
நூலின் தகவல்கள் :
நூல் : துணிச்சல் காரி (இளையோர் நாவல்)
நூலாசிரியர்: ஈரோடு சர்மிளா
விலை : ரூபாய் 80/-
வெளியீடு : புக்ஸ் பார் சில்ட்ரன்
சென்னை-600018.
தொடர்பு எண்: 04424332924
நூல் அறிமுகம் எழுதியவர் :
MJ. பிரபாகர்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
நூல் குறித்த சிறந்த அறிமுகம்.
நூலின் சாராம்சம் சிறப்பு.