இது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு சாதாரண இடதுசாரி பாந்த்சிங் பற்றிய கதை இவர் ஹர்பன்ஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து, எட்டு குழந்தைகளுடன் வறுமை நிறைந்த மகிழ்ச்சியில் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர் மிகச் சிறந்த கருத்துள்ள பாடல்களை பாடி வருகிறார், பாடல்களை பாடுவதையும் விருப்பம் அதிகம் உடையவராக உள்ளார்…
அங்கு வாழும் உயர் சாதியினராக கருதப்படும் ஜாட் சமூகத்தினர் நிலவுடைமயாளராகவும், தலித் மக்கள் கூலி தொழிலாளியாய் காலம் காலமாக இருந்து வருகிறார்கள்… தலித் சமுகத்தினரின் மீது அடிமைத்தனத்தையும், பெண்களின் மீதான பாலியல் சுரண்டல்களும் வலுக்கட்டாயமாக திணித்து வந்துள்ளார்கள்…
எதிர்த்து கேள்வி கேட்க முடியாத சாமானிய மனிதர்களாக தலித் மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஒரு கட்டத்தில் பாந்த்சிங் மகள் ஜாட் சமூகத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்….
இதற்கு எதிராக குரல் கொடுத்து அவர்களுக்கு தண்டனையும் பெற்றுத் தருகிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாத ஜாட் சமூகத்தினர் பாந்த்சிங்கை கடுமையாக தாக்கி அவரின் இரண்டு கைகளையும் ஒரு காலையும் இழக்க செய்கிறார்…
இதற்கு எதிராக இடதுசாரி அமைப்பு தோழர்கள் அனைவரும் குரல் எழுப்புகிறார்கள். இருப்பினும் பாந்த்சிங் மனம் தளராமல் இடது பயணத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தன்னுடைய குரல் வலத்தின் மூலம் மக்களுக்கான கருத்தை வெளிப்படுத்தக்கூடிய பாடல்களை பாடி வருகிறார்…
குறிப்பு: ஜிப்ஸி படத்தில் பேசப்படக்கூடிய முக்கிய நபர் பாந்த்சிங். இவரைப் பின்பற்றி தான் ஜிப்ஸி பட கதாநாயகன் இவரைப் போன்று பாடகராக வலம் வருகிறார்…
புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கிய தோழர் Kannan Malai Sfi அவர்களுக்கு நன்றி..
துணிவின் பாடகன் பாந்த்சிங்…
ஆசிரியர் : நிருபமா தத்
தமிழில் : கமலாலயன்
சிறந்த புத்தக அறிமுகம் வாழ்த்துகள் பிருந்தா..😊