துவண்டு நாடு கிடக்குது!
(கோவி.பால.முருகு)
அகண்ட பாரத மாதாவுக்கு
ஆடை அலங்காரம் செய்யுது-இங்கே
புகழும் பாரத மாதாவின்
புடவைத் துணியை அவிழ்க்குது!
பாரதத் தேவியைப் பாவிகள்
பாலியல் துன்பம் பண்ணுது-அட
கோரத் தாண்டவம் ஆடியே
கொலையும் இங்கே செய்யுது!
ஆர்எஸ்எஸ் கயவர் ஆண்குறி
ஆயுதமாய் இங்கே ஆகுது!-அட
பாரதத் தேவியைக் கூட
படுக்கை மேலே தள்ளுது!
பெண்களை அம்மணம் ஆக்கியே
பேரின்பம் இங்கே அடையுது!-அட
கண்களாய்ப் போற்றிடும் பெண்களைக்
காட்சிப் பொருளாய் ஆக்குது!
கோபியர் கூட்டத்தின் ஆடையைக்
கொள்ளை அடித்த கூட்டமே-இங்கு
மாபெரும் பாவத்தைச் செய்து
மானுட நேயத்தை அழிக்குது!
பாஞ்சாலி சேலையை உருவிய
பாவிகள் ஆட்சி நடக்குது!-இன்று
மாய்ந்தாலும் சேலையை உருவுது
மதவெறி பிடித்தே ஆடுது!
பிள்ளையார் கொழுக்கட்டை சிரிக்கிது
பிரதமர் வாயில் இருக்குது !-இங்கே
தொல்லையின் ஆட்சி நடக்குது
துவண்டே நாடு கிடக்குது!
2
ஒழிவதே மாட்சி
நிலவுடன் கதிரவன் நெருங்கியே ஆய்வார்
நித்திரை கொண்டே சாதியால் தேய்வார்!
தலைமுதல் கால்வரை மருத்துவம் ஆய்வார்
தறிகெட் டறிவின்றி மதத்திலே சாய்வார்!
ஆயிர மாயிரம் அறிவியல் காண்பார்
ஆனாலும் சாதகம் சோதிடம் பார்ப்பார்!
தாயினைப் போற்றும் தன்மை அறிவார்
தையலர் உரிமைக்குத் தடையாய் இருப்பார்!
பெண்களின் ஆற்றலைப் பேசிக் களிப்பார்
பெண்சிசு என்றாலே முகத்தைச் சுளிப்பார்!
ஆண்களும் பெண்களும் சமமெனச் சொல்வார்
ஆதிக்கம் கொண்டே பெண்களை அடைப்பார்
நீதி நேர்மை பேச்சில் உரைப்பார்
நீங்கிட உண்மை வாழ்வில் துறப்பார்!
பாதியைக் கூட சொல்வதில் செய்யார்
பார்த்திட நல்லவர் போலவே நடிப்பார்!
மக்கள் நலனைப் பெரிதாய்ப் பேசுவார்
மதவெறி கொண்டே கலவரம் செய்வார்!
சிக்கலைச் செய்தே நாட்டை அழிப்பார்
சிந்தனை கொண்டால் சிரசை அறுப்பார்!
பொய்யை மறைத்துப் புனிதராய் வாழ்வார்
போற்றிடும் வாய்மை போற்றா தழிவார்!
வாயால் வடையைச் சுட்டுத் தருவார்
வாய்மை அதுவென சொல்லி வருவார்!
நாயின் பிழைப்பே அவருக் காகும்
நானிலம் தழைக்க இதுவா ஆகும்!
பேயின் ஆட்சி பிணத்தின் காட்சி
பேரிடர் நீங்க ஒழிவதே மாட்சி!