தீரா தொல்லைதான்
எங்கேயும் எல்லையென்றாலே!
வீட்டுக்கு வீடு
நிலத்திற்கு நிலம்
ஊருக்கு ஊர்
இப்படியாக….
எல்லைகள் என்றாலே
தொல்லைதான்!
அவரவர்
எல்லைகளை உணர்பவருக்கு
இல்லை….
எப்போதும் தொல்லை!
இப்போது…
தம் உரிமை கோருகின்றன…
ஆறு ஏரி குளம் குட்டை
ஓடை
ஆறு
நதி!
அதனதன் எல்லைகளை
அதனதன் புழக்கத்திற்கு
விட்டு விடும்போது….
நல்லது.
இல்லையெனில்
காலம் முழுவதும் கண்ணீர்!
😭😭😭😭
கவிஞர் பாங்கைத் தமிழன்…
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

