புலி : சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்ப்புகள் – திறனாய்வு ; மதுராந்தகன்

மொழிபெயர்ப்பு வகைகளில் மாதிரிக்கொன்றாய் எடுத்தது போல் இந்நூலில் தொகுத்திருக்கிறார் ஆசிரியர். கதைகள், கட்டுரைகள் , கவிதைகள் என.  சுற்றுச்சூழல் பற்றி சுப்ரபாரதிமணியன் எவ்வளவோ நாவல்களில் கட்டுரைகளில் பல கருத்துக்களைக் கூறியுள்ளார் . அவரின் சாயத்திரை, புத்து மண் போன்ற நாவல்களும் பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைத் தொகுப்புகளும் அதற்கு உதாரணங்கள்…உலகம் முழுவதும் இது பெரிய பிரச்சனை பொதுவாக விவசாயம் பற்றி எந்த அரசும் சரியாக கவனிப்பதில்லை என பலவித கருத்துக்களை கூறியுள்ளார். போப் பிரான்சிஸ் 2011 ஆம் ஆண்டுஅவர் எழுதிய கடிதத்தில் இந்த சுற்றுச்சூழல் விஷயங்களை கூறியுள்ளது எந்தக் காலத்திலும் எந்த நாட்டிற்கும் பொதுவானது .விவசாயம் செய்தால் மட்டுமே மக்கள் நலமுடன் வாழ முடியும் .நல்ல திட்டங்களை தீட்டி ஒற்றுமையுடன் அதை செயல்படுத்தினால் நாடு செழிக்கும் மக்கள் வாழ்வு சிறக்கும். சுற்றுச்சூழலைக்காக்கலாம் இதுபோன்ற போப்பின் கருத்துக்களை தேடிப்பிடித்து தமிழ் படிக்கும் வாசகர்களுக்கு மொழிபெயர்ப்பு கட்டுரை ஒன்றின் மூலம் தந்திருக்கிறார் சுப்ரபாரதிமணியன், விவசாயம் காக்கப்படவேண்டும் நதிகள் காக்கப்படவேண்டும்.  வனங்கள் காக்கப்பட வேண்டும் இயற்கையை காக்க உறுதி எடுப்போம் என்கிறார் .

எனக்குப் பிடித்த புத்தகம் ...
புலி : சுப்ரபாரதிமணியன்

 மிஜோ மொழி கதை மிகவும் முக்கியமானது.சேனா என்ற பாத்திரத்தின் அறிமுகம் மிகவும் அருமை ,12 வயது மாஜமா அவன் நண்பர்களோடு அரட்டை, வேட்டையாடி பறவைகளை வீழ்த்திய  விவரங்களை பெருமை என்று கூறிக் கொண்டிருந்தான் ஒரு நண்பர் உடன் நீண்ட தூரம் சென்ற போது  ஒரு பறவையை வேறு யாரோ அடித்து அந்த பறவை கீழே விழுகிறது. அதை கையில் எடுத்துப் பார்க்கிறான் .அது துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சிந்திக்கிறான். மனிதனின் உழைப்பால் ஆனது அல்ல .பறவை அதன் சுதந்திரத்தை மனிதன் பறித்துக் கொள்கிறான் .அது பறந்து செல்லத்  துடிக்கின்றது. முடிவில் இறந்துவிடுகிறது வேட்டையாடுவது பற்றி  குற்ற உணர்வுடன் யோசிக்கிறான் இந்த கதை மனிதாபிமான உணர்வுகளை மிக அருமையாக  ஏற்றியுள்ள அம்சமாகும்.  இது வேற்று மொழிகதைக்களனாக  இருந்தாலும் தமிழ் படுத்தியிருக்கும் விதம் அருமை .அடுத்த கதை அஸ்ஸாமிய மொழிக்கதை. இந்த கதையில் ஒரு தாயின் பாசத்தை மிக நல்ல முறையில் சொல்கிறார் .அந்த நகரத்தின் போக்குவரத்தை கூறும் போது ஏற்படும் குழப்பங்கள் லாரி ஓட்டுநர்களின் அலட்சியம் குழந்தைகளின் திருட்டு செயல்கள் என்று சுவாரசியமாக சொல்கிறார் .மோடி என்ற சிறுவனின் இழப்பு அவன் தாய் படும் பாடு என நெஞ்சம் பதறுகிறது. அந்தத் தாய் எவர் உதவியும் ஏற்றுக்கொள்ளாது வைராக்கியமாக இருப்பது..

ஒரு கை வண்டிக்காரன் அன்போடு ஆதரவு காட்ட சில பொருள்கள் தருகிறேன் என்று கூறும்போது மறுத்துவிடுகிறார் . உணவுக்கு வழியின்றி தடுமாறும் போது அவள் நிலைகுலையவில்லை. கைவினை பொருள்கள் கொடுக்குமாறு சொல்லலாமே என்று நினைக்கிறார் .பசி வந்தால் பத்தும் பறந்து போய்விடும் என்பது நிதர்சனமாக இந்தக் கதைகளைப் படிக்கும்போது தெரிகிறது ,அசாமிய மொழி கதையானாலும் தமிழ் படித்தி உள்ள விதம் மிக எதார்த்தமாக ஒரிஜினல் தமிழ் கதை படிப்பது போல் உள்ளது.தமிழாக்கம் செய்த சுப்ரபாரதிமணியனின் பாராட்டத்தான் வேண்டும் .இதில் உள்ள கவிதைகளை- பதினோரு கவிதைகள் குறிப்பாக- மொழிபெயர்த்த விதம் மிகவும் எளிமையானது  நன்றி என்ற ஒரு கவிதையும் இன்னும் சில மலையாள கவிதைகளும் தரமாக உள்ளது . செபாஸ்டியன் என்ற மலையாளக்கவிஞரை தமிழ் உலகம் அவ்வளவாய் அறிந்ததில்லை.ஆனால் மலையாள வாழ்வியலை,சாதாரண மலையாள வாழ்க்கை அனுபவங்களை அவர் தந்திருக்கும் வகையில் முக்கியத்துவம் பெற்ற கவிஞராக வெளிப்பட்டுள்ளார். தமிழாக்கம் உறுத்தாமல் இருப்பது தொடர்ந்து மொழிமாற்றம் செய்யும் பணியின்  சிறப்பைச் சொல்கிறது..,

அவரின் கீழ்க்கண்ட மொழிபெயர்ப்பு நூல்களும் இவ்வகையில் குறிப்பிட வேண்டியவை. 1 உயில் மற்றும் பிற கதைகள் ( சாகித்ய அகாதமி சென்னை வெளியீடு ,  சாகித்ய அகாதமி பரிசு பெற்ற ஜெ.பி.தாஸின் ஒரியக்கதைகள் * 2. அகதிமுகாமில் ஓர் இரவு ( ஒடியக்கவிதைகள். மூலம் சுப்னபெஹேரா. பெண் கவிஞர், * 3. கான்சிபூரின் நிலவு ( ஒடியக்கவிதைகள். மூலம் சங்ராம் ஜெனே 4.* பெண்களும் தொழிற்சங்கங்களும் .

இதில் உள்ள ஒடியக்கவிதைகள் நூலிலிருந்து இடம் பெற்ற 4 கவிதைகள் குறிப்பிடத்தக்கவை. நூலின் தலைப்பாகவும் அது அமைந்துள்ளது. பெண்களும் தொழிற்சங்கங்களும்  என்ற அவரின் மொழிபெயர்ப்பு நூல் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வெளியீட்டின் மொழிபெயர்ப்பாகும். அது வெகுவாக குறிப்பிடத்தக்க .பெண்களின் தொழிற்சங்கப் பங்களிப்பைச் சொல்வதாகும்.

இவ்வகையில்  சுப்ரபாரதிமணியனின் மொழிபெயர்ப்புப் பணிகளை நன்கு அறிந்து கொள்ள இந்நூல் புலி உதவுகிறது. ( ரூ 75 ., கனவு திருப்பூர் வெளியீடு -9486101003  )

மதுராந்தகன்

முகவரி 8/.33 94 பாண்டியன் நகர் வடக்கு

தாய்த்தமிழ்ப் பள்ளி அருகில்  திருப்பூர் 641 602