புதுதில்லி, ஜுன் 26 – புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை அனைத்து தேசிய மொழிகளிலும் வழங்கிட வேண்டும்; கருத்துச் சொல்வதற்கான கால அவ காசத்தை நீட்டித்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக கையெழுத்திட்டு கடிதம் அளித்துள்ளனர்.

மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை வெளி யிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை முற்றிலும் கல்வி விரோதமானது. ஏழை – எளிய மாணவர்களது கல்வி வாய்ப்பை  ஒட்டுமொத்த சிதைப்பது மட்டுமல்ல; இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான முறையில் இந்தித் திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு உள்ளிட்ட நாசகர அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.

இதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழ கத்தில் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் கல்வியாளர் களும் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கி யுள்ளனர்.  இந்நிலையில், தமிழக மக்களின் உணர்வுகளை எடுத்துரைக்கும் விதத்தில் புதனன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை நேரில் சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்கள் தொல். திருமாவளவன், முனைவர் ரவிக்குமார் ஆகியோர் ஒரு கடிதம் அளித்தனர்.

அக்கடிதத்தில், கல்விக் கொள்கை வரைவு அறிக்கை தொடர்பாக கருத்துக் கூறுவதற்கான கால அவகாசம் ஜுன் 30 என்று மத்திய  அரசு நிர்ணயித்திருப்பது மிக மிக குறுகிய காலமாக உள்ளது; எனவே கால  அவகாசத்தை நீட்டித்து வழங்கிட வேண்டும். வரைவு அறிக்கை ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே உள்ளது. அதை உடனடியாக அனைத்து தேசிய மொழிகளிலும் பிராந்திய மொழி களிலும் வழங்கிட வேண்டும்.

நாட்டின் பல்வேறு தரப்பிலிருந்து வந்துள்ள கருத்துக்களை கணக்கில் கொண்டு திருத்தங்கள் செய்து அரசு வரைவு அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இக்கடிதத்தில் தமிழக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இடம் பெற்றுள்ள 42 நாடாளுமன்ற உறுப்பினர் களின் கையெழுத்துக்களுடன் அமைச்சரி டம் வழங்கப்பட்டது.

சிபிஎம் உறுப்பினர் கள் டி.கே.ரங்கராஜன், பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன், சிபிஐ உறுப்பினர்கள் து.ராஜா, கே.சுப்பராயன், செல்வராசு ஆகிய இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர் கள் உள்பட திமுக, காங்கிரஸ், மதிமுக, வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டிருந்தனர்.

தீக்கதிர் நாளிதழ் – 27.06.2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *