நேர நிர்வாகம் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : “நேர நிர்வாகம்”
நூல் ஆசிரியர்: பிரையன் டிரேசி
தமிழில் :நாகலட்சுமி சண்முகம்
வெளியீடு : இதுவோர் மஞ்சுள்பப்ளிஷிங் ஹவுஸ் வெளியீடு
எட்டாம் பதிப்பு : 2024
124 பக்கங்கள். ரூபாய் 199/-
நேரத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் இந்த அறிமுகத்தை வாசிக்க நேரம் ஒதுக்குவார்கள் என நம்புகிறேன். இந்த நூல் தன்முன்னேற்ற வகையாகவோ அல்லது மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு உதவுவதாகவும் இருக்கலாம் என்றாலும் கூட பொதுவாழ்வில். சமூக வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும் பல கருத்துக்கள்உதவக்கூடும் என்பதால் இந்நூலை அறிமுகப்படுத்துகிறேன். இந்நூலில் உள்ள முக்கியமான கருத்துக்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
நீங்கள் உங்கள் நேரத்தை எவ்வளவு சிறப்பாக பயன்படுத்துகிறீர்களோ நீங்கள் அவ்வளவு அதிகமாக சாதிப்பீர்கள் அவ்வளவு அதிகமான வெகுமதிகளை பெறுவீர்கள்.. உச்சபட்ச ஆரோக்கியத்திற்கும் தனிப்பட்ட செயல் திறனுக்கும் நேர நிர்வாகம் அவசியம்.இன்றைய உச்சபட்ச செயல் திறனை கைவசப்படுத்துவதற்கு இன்றியமையாத நான்கு முக்கிய அம்சங்கள் ஆழ்விருப்பம், உறுதியான தீர்மானம், மன உறுதி ஒழுங்கு நான் இப்போது செய்து கொண்டிருப்பதை நான் ஏன் செய்து கொண்டிருக்கிறேன் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்..
நீங்கள் அனுபவிக்கின்ற மன அழுத்தமும் கவலையும் நீங்கள் ஆழமாக நம்புகின்ற மற்றும் மதிக்கின்ற விஷயங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டுள்ள ஒரு விஷயத்தை செய்வதில் இருந்துதான் வருகின்றன.தேவையான நேரத்தில் நிதானமான சிந்தனையில் ஈடுபடத் தவறுவதுதான் வாழ்வின் நாம் செய்கின்ற பல தவறுகளுக்கு காரணம் என்று டேனியல் கூறுகிறார். வெறித்தனம் என்பது நீங்கள் உங்கள் இலக்கை மறந்த பிறகு உங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்குவதாகும் என்று அம்புரோஸ் குறிப்பிடுகிறார்.
இறுதி முடிவை மனத்தில் வைத்து துவக்கவும் என்று ஸ்டீபன் கவி கூறியுள்ளார் . மோசமான அனுமானங்கள்தான் தோல்விகளின் அடித்தளங்களாக இருக்கின்றன என்று பீட்டர் டிரக்கர் கூறுகிறார்.
விஷயம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்ற கேள்வியைப் பற்றி நீங்கள் சிந்திக்கும் போது இதைச் செய்வதற்கு இதைவிட சிறந்த வழி ஏதேனும் இருக்கிறதா என்ற இன்னொரு முக்கியமான கேள்வியையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.வெறுமனே படுவேகத்தில் வாழ்வது மட்டும் வாழ்க்கை அல்ல ..
எந்த ஒரு துறையிலும் அல்லது வேலையிலும் நீங்கள் செய்கின்ற மிக முக்கியமான மற்றும் மிகவும் மதிப்பு வாய்ந்த செயல் எது தெரியுமா? சிந்தித்தல்தான்.. அது வாழ்க்கையை பின்னால் திரும்பிப் பார்த்தல்.. நிகழ்வுகளை மனத்தில் அசைபோடுதல்.. தனிமையில் நேரம் செலவிடுதல்.. முன்னோக்கி சிந்தித்தல்… ஆகியவற்றிலிருந்து- தான் மேன்மைத்துவம் முளை விடுகிறது. சில சமயங்களில் தனிமையில் சிந்திக்கும்போது கிடைக்கின்ற ஒரே ஒரு நல்ல யோசனை கூட பல மாத அல்லதுபல வருட கடின உழைப்பை உங்களுக்கு மிச்சப்படுத்தி கொடுக்கக்கூடும்.. நீண்டகால முன்னோக்கு.. குறுகிய காலத் தீர்மானம் மேற்கொள்ளுதலை மேம்படுத்துகிறது.. என்பது விதி..நீங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியாவிட்டால் நீங்கள் எந்த பாதையிலும் செல்லலாம் ..
நீண்ட கால கண்ணோட்டத்தை வளர்த்து எடுக்கும் பழக்கம் சக்தி வாய்ந்த பழக்கமாகும். எதிர்காலத்துக்குள் முன்னோக்கிப் பார்த்து பிறகு நிகழ்காலத்திற்குள் பின்னோக்கிப் பார்ப்பதன் மூலம் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் நீங்கள் தவிர்க்கக்கூடிய தவறுகளையும் உங்களால் பார்க்க முடியும்..
நீங்கள் எதை சாதிக்க விரும்புகிறீர்கள் என்பதையும் அதை அடைவதற்கான சிறந்த வழியையும் நீங்கள் தெளிவாக அறிந்திருக்கும் போது மட்டுமே சக்தி வாய்ந்த நேர நிர்வாக உத்திகளை உங்களால் பயன்படுத்த முடியும்.. திட்டமிடுவதில் செலவிடப்படுகின்ற ஒவ்வொரு நிமிடமும் அத்திட்டத்தை செயல்படுத்துவதில் பத்து நிமிடங்களை மிச்சப்படுத்துவதாக ஒரு விதி கூறுகிறது ..உங்கள் இலக்கு என்ன என்பது உங்களுக்கு தெளிவாக தெரிந்தவுடன் அந்த இலக்கை அடைவதற்கு நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தோன்றுகிறதோ அவை அனைத்தையும் ஒரு பட்டியலிடுங்கள்.. பிறகு கூடுதல் யோசனைகள் உங்களுக்கு தோன்றும்போது எல்லாம் அவற்றைப் பட்டியலில் சேர்த்துக் கொண்டே வாருங்கள்.. தனித்திட்டத்தை நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதல் நடவடிக்கையில் இருந்து கடைசி நடவடிக்கை வரை காலவரிசைப்படி நீங்கள் ஒழுங்கமைக்க வேண்டும்.. அடுத்து உங்கள் பட்டியலில் உள்ளவற்றில் 20 சதவீதம் நடவடிக்கைகள் உங்களுடைய மொத்த நடவடிக்கைகளில் மதிப்பும் மற்றும் முக்கியத்துவத்தின் 80 சதவீதத்திற்கு காரணமாக இருக்கின்றன …
உங்களுடைய திட்டங்களை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மறுபரிசீலனை செய்யுங்கள்.. புதிய தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும் போது உங்கள் திட்டங்களை திருத்தி அமைத்துக் கொள்ள தயங்காதீர்கள்..
திட்டமிடப்படாத நடவடிக்கைகள்- தான் தோல்விக்கான காரணங்கள் ..எந்த ஒரு வகையான வெற்றிக்கும் தொடர்புடைய மிக முக்கியமான வார்த்தை ‘தெளிவு’ என்பதுதான்.. நீங்கள் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் அனைத்திலும் எந்த 20 சதவீத பிரச்சனைகள் உங்களுக்கும் உங்கள் இலக்கிற்கும் குறுக்கே இருக்கின்ற 80 சதவீத தடைகளுக்கு காரணமாக இருக்கின்றன என்பதை கண்டறியுங்கள் ..
உங்கள் பணி திட்டத்தில் உங்களோடு இணைந்து பணியாற்ற உள்ள நபர்களோடு வெறுமனே உரையாடு கொண்டிருப்பதை விட ஒவ்வொருவருக்கும் தெளிவான மற்றும் எழுத்துப்பூர்வமான இலக்குகளை நிர்ணயத்து கொடுப்பதன் மூலம் நீங்கள் அதிகமாக சாதிப்பீர்கள் .நீங்கள் தங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை மக்கள் தாங்களாகவே அறிவார்கள் என்று ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.. நீங்கள்தான் உங்கள் எதிர்பார்ப்புகளை அவர்களிடம் தெளிவாக எடுத்துக் கூற வேண்டும்.. சிந்திப்பதற்கான திறன்தான் உங்களுடைய மிக அற்புதமான திறமை ..நேரத்தை வெற்றிகரமாக பயன்படுத்துபவர்கள் எழுத்துப்பூர்வமாக சிந்திக்கின்றனர் .அடுத்த நாளுக்கான பட்டியலை முதல் நாள் இரவே தயாரிப்பது சிறந்த பலன் அளிக்கும் .ஏனெனில் நீங்கள் தூங்கும்போது உங்கள் ஆழ்மனம் அந்த பட்டியலின் மீது செயல்படும்.. அன்றாடம் செய்யப்பட வேண்டிய வேலைகளை முன்கூட்டியே எழுத்துப்பூர்வமாக பட்டியல் இட்டுக் கொள்வதுதான் நேரத்தை சிறப்பாக நிர்வகிப்பதற்கு மிகச்சிறந்த கருவி.. மறுநாள் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை ஒரு பட்டியலாக உருவாக்கிக் கொண்டால் நீங்கள் நன்றாக தூங்குவீர்கள். காலையில்புத்துணர்ச்சியுடன் எழுவீர்கள்..
தினமும் அன்றைய நாளுக்கான உங்கள் வேலைகள் இப்படி பட்டியலிட்டு கொள்வதற்கு வெறும் 12 நிமிடங்களே தேவைப்படுகின்றன அதனால் 120 நிமிடங்கள் மிச்சமாகும்.. வேலைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து அளிப்பதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்..
வேலை உலகில் உங்களிடம் உள்ள ஒரே விற்பனை பொருள் நேரம் மட்டும்தான்..
செய்ய வேண்டிய வேலைகள் பட்டியலை போலவே… செய்யக்கூடாத வேலைகள் பட்டியலும் உங்களுக்கு இன்றியமையாதது ..உங்கள் நேரத்தை காவு வாங்கக்கூடிய மதிப்பேதும் இல்லாத எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ள மறுத்து விடுங்கள்.. குறைந்த மதிப்பு கொண்ட விஷயங்களை செய்வதை நீங்கள் முற்றிலுமாக நிறுத்தும்போதுதான் உங்கள் நேரத்தை உங்களால் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.. நீங்கள் செய்கின்ற வேலைகளில் 20 சதவீதம் நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மொத்த மதிப்பில் 80 சதவீதத்திற்கு காரணமாக இருப்பதாக ஒரு விதி கூறுகிறது ..
உங்களுக்கு நீங்களே அழுத்தம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்..
எந்த பாதையில் குறைவான எதிர்ப்பை தாங்கள் எதிர்கொள்வோமோ… எது தங்களுக்கு மிகவும் வசதியாக இருக்குமோ அந்தப் பாதையை பின் தொடர்ந்து செல்வதுதான் மக்களுடைய இயல்பான போக்காக இருக்கிறது ..
இக்கணத்தில் என்னுடைய நேரத்தின் மிகச் சிறந்த பயன்பாடு எது என்று அடிக்கடி கேட்டுக் கொள்ளுங்கள் ..
உங்களுடைய வேலையை பொறுத்தவரை முன்னுரிமைகளை நிர்ணயித்தல் என்பது ஒரு சில முக்கியமான வேலைகளை குறைவான முக்கியத்துவம் வாய்ந்த பல வேலைகளில் இருந்து பிரிப்பது பற்றியதுதான்..
எந்த வேலையையும் பகிர்ந்தளியுங்கள் ..
ஒருமித்த கவனம் என்றால் நீங்கள் உங்களுடைய மிக முக்கியமான வேலை எது என்பதை கண்டறிந்து அதை துவங்கியவுடன் எந்த கவனிச்சிதறலும் இல்லாமல் அதை முழுமையாக செய்து முடிப்பதற்கு உறுதி ஏற்பதாகும் .
ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தின் மீது முழுமையான கவனம் செலுத்த உங்களால் முடியாவிட்டால் உங்களால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது.. வாழ்வில் நிகழ்த்தப்படுகின்ற மாபெரும் சாதனைகள் ஒவ்வொன்றுக்கும் முன்பாக ஒருமித்த கவனத்தை உள்ளடக்கிய ஒரு நீண்ட கால உழைப்பு இருந்திருக்கும் என்று ஏர்ல் நைட்டிங்கேள் கூறுகிறார் .
ஒரு நேரத்தில் ஒரு வேலையின் மீது கவனம் செலுத்துவது நேர நிர்வாக உத்திகள் மற்றும் வாழ்க்கை நிர்வாகக் கொள்கைகளில் மிக முக்கியமானதாகும்..
உங்கள் தொலைபேசி அழைப்பு மணி ஒலித்த உடனே அல்லது உங்கள் கணினி துறையில் ஒரு மின்னஞ்சல் தோன்றி உடனே நீங்கள் கடகடவென்று அதற்கு பதில் அளிக்க வேண்டியதில்லை..
எல்லோருக்கும் ஏகப்பட்ட வேலைகள் இருக்கின்றன.. ஆனால் நேரம் மட்டும் மிகக் குறைவாக இருக்கிறது ..
ஓர் இலக்கை பல சிறிய இலக்குகளாக நீங்கள் பிரித்துக் கொண்டால் எந்த ஊர் இலக்கையும் உங்களால் அடைய முடியும் என்பது ஒரு விதி.. இரண்டு சதவீத மக்கள் மட்டுமே தங்கள் வேலையை வேகமாக முடிப்பதில் தீவிரமாக இருக்கின்றனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.. படைப்பாற்றல் ரீதியான வேலைகளை நிர்வாக வேலைகளோடு நீங்கள் ஒன்று கலக்கக்கூடாது.. ஒரு குறிப்பிட்ட வேலைக்கு நிதானமான சிந்தனை தேவைப்படும்; மற்றொன்றுக்கு வேகமான சிந்தனை தேவைப்படும் ..ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு வகையான சிந்தனைகளும் ஒரு வேலைக்கு தேவைப்படுவதில்லை ..
“வேலை நேரம் முழுவதும் வேலை செய்யவும்’ என்பதுதான் நீங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறை ..
யாரேனும் உங்களை தொலைபேசியில் அழைத்தால் உடனடியாக விஷயத்திற்கு வாருங்கள் என்று விஷயத்தை மட்டும் திட்டமிட்டு பேசுங்கள்..
உங்கள் வேலைகளை பல தொகுதிகளாக பிரித்து ஒழுங்கமைத்துக் கொள்வது என்றால் ஒரே மாதிரியான விஷயங்களை ஒரே நேரத்தில் செய்வது என்று பொருளாகும் ..
காலையில் ஒருபோதும் உங்கள் மின்னஞ்சல்களை படிக்காதீர்கள் என்று நேர நிர்வாக அலுவலரான ஜூலி மூர்க்கன் கூறுகிறார் .முதலில் காலையில் 11:00 மணிக்கு மதியம் 4 மணிக்கு என்று ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே மின்னஞ்சல்- களுக்கு பதில் அளிக்கலாம் என்று முடிவு செய்வது- கூட நல்லதுதான் ..உங்கள் மின்னஞ்சல்களை தினமும் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே படித்து பதிலளியுங்கள்.. ஒரு செய்தி முக்கியமானதாக இருந்தால் அது எப்படியாவது உங்களுக்கு தெரிந்து விடும் ..
நான் உங்களுடன் இப்போது பேசலாமா இப்போது பேசுவது உங்களுக்கு வசதிப்படுமா ..என்று விசாரித்து பேசுவது தான் இங்கிதமான செயலாகும் ..
சந்திப்பு கூட்டங்கள் ஏகப்பட்ட நேரத்தை கபளீகரம் செய்து விடுகின்றன.. ஆனால் அவற்றிலிருந்து கிடைக்கும் விளைவுகள் நீடித்த மதிப்பு கொண்டவையாக இருப்பதில்லை.. நமக்கு பலன் அளிக்கும்படி அவற்றை திட்டமிட்டு நிகழ்ச்சி நிரல்- படி கையாள வேண்டும்.. ஒரு சந்திப்பு கூட்டம் தேவை இல்லை என்றால் கூட்டம் நிச்சயமாக நடைபெறக்கூடாது ..நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய தேவை இல்லை என்றால் அதை தவிர்த்து விடுங்கள்.. நீங்கள் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறீர்கள் என்றால் யாரெல்லாம் அதில் கண்டிப்பாக கலந்துகொண்டாக வேண்டும் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொண்டு அவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுங்கள்.. கூட்டத்தின் தலைவர் என்ற முறையில் விவாதங்களும் கலந்துரையாடல்களும் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு.. திட்டமிட்ட நேரத்தில் சந்திப்பு கூட்டங்கள் துவக்குவதும் முடிப்பதிலும் உறுதியாக இருங்கள்.. எந்த ஒரு சந்திப்பு கூட்டத்திலும் குறைவாக பேசுங்கள் ..அதிகமாக காது கொடுத்து கேளுங்கள்.. அதிகமான கேள்விகளைக் கேளுங்கள் ஃ.நீங்கள் ஒருவர் மட்டுமே எல்லா நேரமும் பேசிக்கொண்டு இருந்தால் அது சாத்தியப்படாது.. நிர்வாகத்தின் நேரத்தில் 25 சதவீதத்திற்கும் அதிகமான நேரம் சந்திப்பு கூட்டங்களில் செலவிடப்பட்டால் நிறுவனத்தின் நிர்வாகத்தில் கோளாறு இருக்கிறது என்று பொருள் என்று பீட்டர் டிரக்கர் கூறுகிறார் ..
நீங்கள் எதை படிக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்.. அதற்கு சிறிது நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். உங்கள் வேலைக்கு வாழ்க்கைக்கும் முக்கியமானவற்றை மட்டுமே படியுங்கள். நீங்கள் இணையதளத்தை துழாவிக் கொண்டிருக்கும் போது முக்கியமான தகவல்களோ யோசனைகளோ கட்டுரைகளோ உங்கள் பார்வையில்பட்டால் அவற்றை அச்சிட்டு ஒரு கோப்பில் போட்டு வைத்து பின்னர் படியுங்கள்.. செய்தித்தாள்கள் போன்றவற்றை படிக்கும் போது மிக நீண்ட கட்டுரை படிக்க பொருத்தமானதாக இருந்தால் அந்தப் பக்கத்தை கிழித்து தனியே ஒரு கோப்பில் போட்டு வைத்து பின்னர் படியுங்கள்.. புத்தக விமர்சனங்களைபடியுங்கள் ..ஒரு புத்தகத்தைப் பற்றி ஒரு சில நிமிடங்களில் நீங்கள் நன்றாக புரிந்து கொள்வீர்கள் ..ஒரு புத்தகத்தின் உள்ளடக்கத்தையும் அறிமுகப் பக்கங்களையும் நூலாசிரியர் பற்றிய தகவல்களையும் கவனமாக ஆராய்வதற்கு நீங்கள் ஒரு சில நிமிடங்களை
செலவிட்டால் புத்தகம் தேவையா இல்லையா என்பதை முடிவு செய்யலாம் ..நீங்கள் எங்கெல்லாம் காத்திருக்க வேண்டிய நேரங்கள் இருக்கிறதோ.. பயணம் செய்ய வேண்டிய நேரங்கள் இருக்கிறதோ அப்போதெல்லாம் படித்து உங்கள் அறிவை பெருக்கிக் கொள்ள திட்டமிடுங்கள் ..
நீங்கள் உங்கள் காரில் பயணம் செய்யும்போது ஆடியோ மூலமாக கேட்டு விடுங்கள் ..ஒருவர் சராசரியாக ஆண்டுக்கு 500 முதல் 1000 மணி நேரம் தன் காரில் பயணிக்கிறார் ..அதை பயன்படுத்துங்கள் ..உங்கள் துறையில் வல்லுனர்களாக இருக்கின்றவர்கள் நடத்துகின்ற கருத்தரங்குகளிலும் பயிலரங்கங்ளிலும் ஆண்டுக்கு நான்கு முறையாவது கலந்து கொண்டு நிறைய நேரத்தை மிச்சப்படுத்தலாம் .
நீங்கள் உங்கள் வேலையை துவக்குவதற்கு முன்பாக உங்கள் மேசையை முற்றிலும் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். முடிந்தவரை ஒரே ஒரு வேலையை மட்டுமே உங்கள் முன் இருக்கும் படி பார்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள் ..ஒரு வேலையை துவங்குவதற்கு முன்பாக அதுக்கு தேவையான அனைத்தும் உங்களிடம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். குப்பையாக உள்ள மேசைகளில் வேலை செய்கின்ற மக்கள் தங்களுக்குதேவையானவற்றை தேடுவதில் தினமும் ஏராளமாக நேரத்தை செலவிடுகின்றார்கள் ..
உங்கள் வாழ்வில் நீங்கள் நிலைப்படுத்த வேண்டிய இரண்டு விஷயங்கள் நிதானம் மற்றும்
சமநிலை.
அக வளர்ச்சிக்கு நேரம் ஒதுக்கிடுங்கள்.
கடந்த காலத்தை திரும்பிப் பார்த்து சிந்தியுங்கள் ..
முக்கியமாக உங்கள் ஆரோக்கியம் ..உங்கள் உடல் நலம் மோசமாக இருந்தால் நீங்கள் எவ்வளவு வெற்றிகளை குதித்தாலும் அவற்றால் உங்கள் உடல் நலனை ஈடு செய்ய முடியாது ..
உங்கள் உறவுகளுக்கு நேரம் ஒதுக்கி கொள்ளுங்கள்..
நீங்கள் யார் மீது அக்கறை கொண்டு உள்ளீர்களோ யார் உங்கள் மீது அக்கறை கொண்டிருக்கிறார்களோ அவர்கள்தான் உங்கள் வாழ்வில் உங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள்.. உறவுகளை உதாசீனம் செய்யும் அளவுக்கு நீங்கள் உங்கள் தொழில் வாழ்க்கையில் ஒருபோதும் மூழ்கி விடக்கூடாது..
நூல் அறிமுகம் எழுதியவர் :
இரா. இயேசுதாஸ்
மன்னார்குடி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.