world science champion China | அறிவியல் | Ayesha Era Natarasan | ஆயிஷா இரா.நடராசன் - https://bookday.in/

உலக அறிவியலில் தளத்தில் இன்றைய சாம்பியன் சீனா

உலக அறிவியலில் தளத்தில் இன்றைய சாம்பியன் சீனா தான்

தி எக்கனா மிஸ்ட் ஜூன் 15 இதழில் சீனா அறிவியலின் எழுச்சி என்கிற ஒரு கட்டுரையை வாசித்தேன் அதுவர வேற்கத்தக்கதா இல்லையா என்பது குறித்து அந்த கட்டுரை ஆய்வு செய்தது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் நேச்சர் இதழ் உலக அளவில் அந்த ஆண்டு வெளிவந்த ஆய்வு கட்டுரைகள் ஆய்வின் முடிவுகள் அறிவியலின் எழுச்சி போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு தரவரிசையை வெளியிடுகிறது. இந்த தரவரிசையில் இந்த ஆண்டு அமெரிக்காவை முந்திக் கொண்டு சீன பல்கலைக்கழகம் ஒன்று முதலிடம் பிடித்தது.. அது சரி இந்தியாவின் இடம் என்ன? சீனா இப்படிப்பட்ட ஒரு அசுர வளர்ச்சியை அடைந்தது எப்படி?

world science champion China | அறிவியல் | Ayesha Era Natarasan | ஆயிஷா இரா.நடராசன் - https://bookday.in/

முதலில் நேச்சர் இதழ் வெளியிட்டிருக்கக்கூடிய தரவரிசைப் பற்றி பார்ப்போம். 2015 ஆம் ஆண்டிலிருந்து நேச்சர் என்கின்ற உலகப் பிரசித்தி பெற்ற அறிவியல் ஆய்விதழ் ஆண்டு தோறும் ஆய்வு சமர்ப்பித்தலின் தரவரிசையை வெளியிட்டு வருகிறது.. இந்த தரவரிசையில் முதல் 10 இடங்களைப் பிடிப்பது எந்த பல்கலைக்கழகம் என்பதற்கு உலகளவில் கடுமையான போட்டி நிலவுகிறது. முதல் 100 இடங்களுக்குள் ஒரு பல்கலைக்கழகம் வந்துவிட்டாலே அந்த பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச அங்கீகாரம் என்பதும் அந்த பல்கலைக் கழகத்தின் ஆய்வுகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு என்பதும் பலமடங்கு அதிகரிக்கும் அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இந்த நேச்சர் ஆய்வு தரவரிசை விளங்குகிறது.

நேச்சர் தரவரிசை  2024 ஜூன் 18 அன்று வெளியிடப்பட்டது இந்த ஆண்டு முன்னணி 10 நிறுவனங்களில் ஏழு நிறுவனங்கள் சீனாவை அடித்தளமாகக் கொண்டவை. வரலாற்றிலேயே முதல் முறையாக ஸ்டான் ஃபோர்ட் பல்கலைக் கழகம் இந்த தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருந்து நழுவி கீழ்நோக்கி சென்றுவிட்டது. இப்படி ஸ்டான் ஃபோர்ட் பல்கலைக் கழகம் 10 இடங்களுக்குள் வராமல் போனதால் அப்பல்கலைக்கழகத்தின் உடைய செனட் உறுப்பினர்கள் மாற்றப்படுகிறார்கள். பல்கலைக்கழக அறிவியல் துறை முழு மாற்றத்துக்கு உட்படுத்தப்படுகிறது அப்படியானால் இந்த தரவரிசை எவ்வளவு கௌரவமான பிரச்சனை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

world science champion China | அறிவியல் | Ayesha Era Natarasan | ஆயிஷா இரா.நடராசன் - https://bookday.in/

நேச்சர் இன் டெக்ஸ் தாக தளத்தில் கண்காணிக்கப்படும் இயற்கை மற்றும் சுகாதார அறிவியல் இதழ்களுக்கான ஆய்வுக் கட்டுரைகளின் பங்களிப்பு மிக மிக கௌரவமான பிரச்சனையாகும் சைனீஸ் அகாடமி ஆஃப் ஸைந்ஸஸ் cas சீனாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு நிறுவனங்களை உள்ளடக்கிய உலகின் மிகப் பெரிய அறிவியல் அமைப்பு என்று பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. 2743.22 எனும் தரவுகள் பெற்று அது முதலிடத்தைப் பிடித்தது.

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் இது சென்ற ஆண்டு முதல் இடத்தில் இருந்தது தற்போது 1143.43 புள்ளிகள்வுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. மூன்றாவது இடத்தில் ஜெர்மனியின் மேக்ஸ்பிளாக் பல்கலைக்கழகம் வெறும் 642 புள்ளிகள் பெற்று பின் தங்கியது இது எதனைக் காட்டுகிறது.. நேச்சர் இன்டெக்ஸ் ஆராய்ச்சி தலைமையிடம் தற்போது சீனாவிடம் சென்று விட்டது. 2015ஆண்டில் முதல் முறை அட்டவணை வெளியிடப்பட்ட பொழுது முதல் மூன்று இடங்களிலும் அமெரிக்க நிறுவனங்கள் இருந்தன அடுத்த இரண்டு இடங்களை இங்கிலாந்து இரண்டை ஜெர்மனி ஒன்றை ஃப்ரான்ஸ் மற்றும் ஒன்றை ஜப்பான் தட்டிச் சென்றது முதல் 10 இடங்களில் சீனா இடம் பெறவில்லை. ஆனால் இன்று முதல் 10 இடங்களில் இடம் பெற்ற நிறுவனங்களில் ஏழு சீனாவில் உள்ளது முதலிடத்தை சீனாவின் சைனீஸ் அகாடமி ஆஃப் ஸைந்ஸஸ் பெற்றுவிட்டது.

ஜேம்ஸ் ஹோல்டர்ஸ் சங்கம் என்கின்ற ஜெர்மனி நிறுவனம் மெசேஜ் சூட்ஸ் தொழில் நுட்ப நிறுவனம் எனும் அமெரிக்க நிறுவனம் அமெரிக்காவின் ஸ்டான் ஃபோர்ட் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்கள் ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகம் இங்கிலாந்தின் உடைய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இவற்றோடு சரி சமமாகவோ அல்லது தர வரிசையில் மேலானதாகவோ சீனாவின் நிறுவனங்கள் விளங்குகின்ற. குறிப்பாக சன்யாட்சென் பல்கலைக்கழகம் தொழில் நுட்பத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது சீனாவின் சிச்சுவான் பல்கலைக்கழகம் இயற்பியலில் முதலிடம் பெற்றது ஷங்காய் ஜியோ டோன் என்கின்ற சீனாவின் பல்கலைக்கழகம் உயிரியல் அறிவியலில் முதலிடம் பிடித்தது.

world science champion China | அறிவியல் | Ayesha Era Natarasan | ஆயிஷா இரா.நடராசன் - https://bookday.in/

சரி… இந்தியாவின்நிலைஎன்ன. இந்தியாஸ் விச்ர்லாந்தை பின்னுக்கு தள்ளி அனைத்து அறிவியல் ஆய்வுகளுக்குமான ஒட்டுமொத்த பகுதியில் நாம் ஒன்பது இடங்கள் முன்னேறி இருக்கிறோம்.. முதல் 200 இடத்தில் இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்று கூட இல்லை. இந்தியாவினுடைய இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மும்பை 247 வது இடத்தில் உள்ளது முதல் 500 இடங்களில். ஒரு வழியாக ஆஸ்திரேலியாவையும் , ஸ்விச்ர்லாந்துயும் முந்தி இருக்கிறோம். ஆனால் நம் நாட்டில் சீனாவோடு ஒப்பிடும் போது ஆய்வு நிறுவனங்கள் ஆய்வு சமர்ப்பிக்கின்ற வேகம் ஆய்வின் அடிப்படை நிதியாக்கம் ஆய்வுக் கட்டுரைகளின் அங்கீகாரம் ஆய்வு இதழ்களின் எண்ணிக்கை இவையாவுமே  500 மடங்கு குறைவு என்று இந்த தரவரிசை பட்டியலின் கட்டுரை நேரடியாக நம்மை எச்சரிக்கிறது.

world science champion China | அறிவியல் | Ayesha Era Natarasan | ஆயிஷா இரா.நடராசன் - https://bookday.in/

ஒரு காலத்தில் உலக ஆய்வு அரங்கில் கொடி கட்டிப்பறந்த டாடா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபண்ட மெண்டல் ரிசர்ச் தற்போது உலகளவில் 283 வது இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது.. கல்கத்தாவினுடைய இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 50 இடம் பின்தங்கி 321வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கனடா , தாய்வான், இத்தாலி, ஃபிரான்ஸ் ,சுவீடன், போலந்து, சிங்கப்பூர் இன்று நமக்கு இணையாகவோ அல்லது நம்மை விட சிறிய நாடுகளாகவோ இருப்பவை நம்மை முந்திவிட்டன.

உலக அளவில் தரமான ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்க முடிந்த நாடுகளின் பட்டியலில் இப்போதும் நம்பிக்கையோடு இந்தியா  ஒன்பதாவது இடத்தில் உள்ளது. சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், ஜப்பான், ஃப்ரான்ஸ், கனடா, தென்கொரியாவுக்கு அடுத்த படியாக.. இந்தியா தன் தரத்தை விட்டுக்கொடுக்காமல் தற்போதும் சிறந்த அறிவியல் நாடாக பெயர் பெற்று திகழ்கிறது.

ஆனால் புதிய தேசிய கல்விக்கொள்கை ஆங்கிலத்தை கைவிட தயாராக உள்ளது என்பதை உலக அளவில் நிபுணர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்..உலக அளவில் அறிவியல் தொழில் நுட்பம்குறித்த ஆய்வு கட்டுரைகளின் உடைய மொழி இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் ஆங்கிலத்தை சார்ந்தே உள்ளது சீனாவில் வெளியிடப்படுகின்ற எந்த ஆய்வுக்கட்டுரையாக இருந்தாலும் அது ஆங்கிலத்தில் தான் வெளியிடப்பட வேண்டும் என்கிற கட்டாயம் தற்போது திணிக்கப்பட்டுள்ளது

.world science champion China | அறிவியல் | Ayesha Era Natarasan | ஆயிஷா இரா.நடராசன் - https://bookday.in/

இத்தனைக்கும் சீனர்கள் முழுக்க முழுக்க தங்கள் சீனமொழியை கைவிடமாட்டார்கள் ஆனால் இன்று ஆங்கிலம் எவ்வளவு மிக முக்கியம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.. PUBLISH IN ENGLISH OR PERISH என்கிற ஆங்கில சொல்லாக்கம் இன்று உலக மறைவாசகம்.. சீன மொழியில் கல்வி கற்றிருந்தாலும் ஆங்கில மொழியை சீனாவில் பெரிய பெரிய மைதானங்களில் இளைஞர்களை ஆயிரக்கணக்கில் உட்காரவைத்து தற்போது போதிக்கிறார்கள்.. இது கடந்த பத்தாண்டுகளாக நடந்துவருகிறது.. நம்முடைய நாட்டின்  NCERT தலைவர் ஆங்கில கல்வி கற்பது தற்கொலைக்கு சமமானது என்று பேட்டியளித்திருக்கிறார்!!

world science champion China | அறிவியல் | Ayesha Era Natarasan | ஆயிஷா இரா.நடராசன் - https://bookday.in/

அது மட்டுமே அல்ல.. சீன அரசு அறிவியலை முழுமையாக ஏற்று ஆதரிக்கும் அரசாக உள்ளது. அவர்கள் தங்கள் கண்டு பிடிப்புகளை உலகெங்கும் எடுத்துச் செல்வதற்கு தனியாக ஒரு பிரம்மாண்ட அமைப்பை வைத்து இருக்கிறார்கள் என்று தி எக்கனாமிஸ்ட் இதழ் குறிப்பிடுகிறது. மக்கள் பயன்பாட்டுக்கான அறிவியலில் இந்தியா அனைவரையும் மூன்றுவதாக உள்ளது. ஃப் மின்சாரத்தில் இயங்கும் ஊர்திகள் மிக குறைவான விலையில் சீனாவில் இருந்து இன்றைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற நிலையில் உள்ளது. கணிச்சு சுகர் முதல் ஃப் வேளாண்மை வரை சீனர்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான அறிவியலை ஒருபோதும் கை விடுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் முனைவர் பட்டம் வாங்குவதை விட அந்த  நாட்டில் ஒரு வருடைய கண்டுபிடிப்பிற்கு உரிமம் வழங்குவதில் அதிகாரிகள் அளவில் ஊழல் கிடையாது.

world science champion China | அறிவியல் | Ayesha Era Natarasan | ஆயிஷா இரா.நடராசன் - https://bookday.in/

ராணுவ வீரர்கள் கூட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். பள்ளிக்கூட ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் இரண்டு வருடங்களுக்கு நான்கு ஆய்வு கட்டுரைகள் ஆவது சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. ராணுவ பயன்பாட்டு அறிவியல் முதல் க்வாண்டம் கணினி வரை இன்று சீனா அறிவியலில் அதிவேக நடை போடுகிறது… உலகிலேயே அறிவியல் தொழில் நுட்பத்துக்கு தன்னுடைய வருடாந்திர பட்ஜெட்டில் 50 சதவீதத்துக்கு மேல் (52%) ஒதுக்கும் ஒரே நாடு என்கிற பெருமையையும் சீனர்கள் அடைந்திருக்கிறார்கள்.

ஒரே நாடு,  ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தலைவர், ஒரே கட்சி என்கின்ற அபத்தங்களை எல்லாம் விட்டு விட்டு இந்த விஷயத்தில் நாம் நம்முடைய பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை அறிவியல் ஆய்வு அறிவியல் மனப்பான்மை அறிவியல் வளர்ச்சி என்பதில் தீவிர கவனம் செலுத்தினால் மட்டுமே இனி வரும் ஆண்டுகளில் நம்மால் உலக தரத்திற்கான அறிவியலை வழங்க முடியும்..

அதற்கு பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை நாம் அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த கல்விக்கு தீவிர முக்கியத்துவம் தரவேண்டும்.. அல்லது நாமும் வருடத்திற்கு ஒரு முறை விண்வெளியில் இத்தனை ராக்கெட் செலுத்தினோம் இவ்வளவு செயற்கைக் கோள் விட்டோம் என்பதோடு வேதத்தில் அறிவியல் புராணத்தில் தொழில் நுட்பம் ஆன்மீக அறிவியல்.. என்றெல்லாம் கற்பனை அறிவியலை பேசிக் கொண்டு இருந்து விட வேண்டியது தான்.

எழுதியவர்: 

Neanderthal gene | நியாண்டர்தால் மரபணு | ஹோமோசேப்பியன் | Homo Sapiens | ஜேபிஎஸ் ஹால்டேன் (JBS Haldane) | ஆயிஷா இரா.நடராசன் | Ayesha Era.Natarasan

ஆயிஷா இரா.நடராசன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 1 Comment

1 Comment

  1. இதுவொரு விழிப்புணர்வு கட்டுரை. முக்கியமானது. ஒன்றிய அரசைக் கிண்டல் செய்வதைத் தவிர்க்கலாம். தமிழக பல்கலைக்கழகங்கள் அதளபாதாளத்தில் கிடக்கின்றன. தேவையில்லாத இன உணர்வு, மொழி வெறி புகுத்தப்பட்டு அறிவியல் பின்ப்தள்ளப்படுகிறது. ஆய்வுகளில் தரக்கட்டுப்பாடு இல்லை. Peer reviewed journal களில் வெளியிட்டால்தான் உலக அங்கீகாரம் கிடைக்கும் எனும் உண்மை இன்னும் இங்கு தெரியவில்லை. குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு, சேரர், சோழர், தமிழ்த் தேசியம் என பெருமை பேசிக்கொண்டு வாளாவிருக்கிறான் தமிழன். தமிழா! அறிவு கொண்டு விழித்தெழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *