வேடன் ஒருவன் ஒரு ஏரிக்கரையில் வலை விரித்து வைத்தான். அதில் நிறைய பறவைகள் சிக்கிக் கொண்டன. அந்தப் பறவைகள் பெரியவை என்பதால், அவை வலையைத் தூக்கிக் கொண்டு மொத்தமாகப் பறக்க ஆரம்பித்து விட்டன. வேடன் அவற்றைத் துரத்திக் கொண்டே ஓடினான். அப்போது வழியில் வந்த ஒரு விவசாயி அவனைப் பார்த்து, “ ஏன் இப்படி ஓடுகிறாய்? இப்படி ஓடி அந்தப் பறவைகளைப் பிடித்துவிட முடியுமா?“ என்று கேட்டான்.
“வலையில் ஒரே ஒரு பறவை சிக்கியிருந்தால், என்னால் பிடிக்க முடியாது. நிறைய சிக்கி இருப்பதால், பிடித்து விடலாம்,“ என்றான் வேடன்.
அப்படித் தான் நடந்தது.
மாலையில் வலையில் சிக்கிய பறவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசை நோக்கி இழுத்தன. ஒன்று தனது கூடு இருக்கும் திசைப் பக்கம் இழுத்தது. மற்றொன்று காட்டுப்பக்கம் இழுத்தது. வேறொரு பறவை ஏரிப்பக்கம் இழுத்தது. இன்னொன்று வயல் பக்கம் இழுத்தது. இந்தப் போராட்டத்தில் எல்லாம் களைப்படைந்து தரை இறங்கிவிட்டன. வேடன் அவற்றை சட்டென்று பிடித்துவிட்டான்.
டால்ஸ்டாயின் சிறார் கதைகள்: ராஜாவும், சட்டையும் – தமிழில் ச.சுப்பா ராவ்
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 2: அரசரும், விவசாயியும் – தமிழில் ச.சுப்பா ராவ்
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 3: தானியக் களஞ்சியத்தில் எலி – தமிழில் ச.சுப்பா ராவ்
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 4: ஓநாயும், கிழவியும் – தமிழில் ச.சுப்பா ராவ்
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 5: சம பங்கு – தமிழில் ச.சுப்பா ராவ்
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 6: காக்கையும், அதன் குஞ்சுகளும் – தமிழில் ச.சுப்பா ராவ்
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 7: மூன்று பன்களும், ஒரு பிஸ்கெட்டும் – தமிழில் ச.சுப்பா ராவ்
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 8: கழுகும், கோழியும் | தமிழில்: ச.சுப்பா ராவ்
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 9: கொசுவும், சிங்கமும் | தமிழில்: ச.சுப்பா ராவ்