ஒரு நாள் ஒரு முயல் ஒரு முள்ளம்பன்றியைப் பார்த்தது. “நீ ஏன் இவ்வளவு அசிங்கமாக இருக்கிறாய்? கால்கள் வளைந்து, தடுமாறி நடப்பது போல் இருக்கிறது,” என்றது முயல்.

முள்ளம்பன்றிக்குக் கோபம். “ஏன் என்னைப் பார்த்து கேலி செய்கிறாய்? என் வளைந்த கால்களால் உன்னை விட வேகமாக ஓட முடியும். ஒரு நிமிடம் பொறு. வீடு வரைக்கும் போய்விட்டு வருகிறேன். பிறகு நாம் இருவரும் ஓட்டப்பந்தயம் வைத்துக்கொள்ளலாம்,” என்றது.

வீட்டுக்குப் போன முள்ளம்பன்றி, மனைவியிடம், “எனக்கும் முயலுக்கும் வாக்குவாதம் ஆகிவிட்டது. அதோடு ஓட்டப்பந்தயம் ஓடப்போகிறேன்,” என்றது.

மனைவி முள்ளம்பன்றி, ”உனக்கென்ன லூசா? முயலோடு நீ எப்படி ஓட்டப்பந்தயம் ஓட முடியும்? அதன் கால்கள் எப்படி வலிமையானவை, உன் கால்கள் வளைந்தவை அல்லவா?“ என்றது.

”அதன் கால்கள் வலிமையாக இருக்கலாம். ஆனால், எனது அறிவு அதைவிட வலிமையானது. நான் சொல்வதை மட்டும் செய். இப்போது நாம் வயலுக்குச் செல்லலாம்,” என்றது.

இருவரும் முயல் காத்திருந்த வயலுக்குச் சென்றனர்..

முள்ளம்பன்றி தன் மனைவியிடம், “ நீ இந்த இடத்தில் உள்ள புதரில் ஒளிந்து கொள். நாங்கள் எதிர் பக்க முனையிலிருந்து ஓடிவருவோம். முயல் சற்று முன்னால் போனவுடன், நான் திரும்பி விடுகிறேன். அது இந்த முனைக்கு வரும்போது. நீ புதரிலிருந்து வந்து, ‘நீ இப்போது தான் வருகிறாயா? நான் அப்போதே வந்துவிட்டேனே,‘ என்று முயலிடம் சொல்ல வேண்டும். நம் இருவருக்கும் யாராலும் வித்தியாசம் காண முடியாது என்பதால் முயல் உன்னை நான் என்று நினைத்துவிடும்,” என்றது.

அதுபோலவே, மனைவி முள்ளம்பன்றி ஒளிந்து கொள்ள, மறுமுனையிலிருந்த முயலும், கணவன் முள்ளம்பன்றியும் பந்தயத்தை ஆரம்பித்தனர்.

முயல் சற்று முன்னால் போனதும், கணவன் முள்ளம்பன்றி பின்னால் போய் மறைந்து கொண்டது. முயல் எதிர்முனைக்கு வந்ததும், மனைவி முள்ளம்பன்றி கணவன் சொல்லிக் கொடுத்ததை அப்படியே சொன்னது. முயலுக்கு ஆச்சரியம் !

‘இதென்ன விந்தை ! ‘ என்று யோசித்தது. அது மனைவி முள்ளம் பன்றியைக் கணவன் முள்ளம்பன்றி என்றே நினைத்தது. உடனே அது,” வா, திரும்பவும் பந்தயம் வைப்போம். எதிர் முனை வரை ஓடலாம்,“ என்றது.

இப்போது முயல் சற்று முன்னால் போனதும், மனைவி முள்ளம்பன்றி பின்னால் சென்று ஒளிந்து கொண்டுவிட்டது. முயல் எதிர்முனையை அடையும் போது, தனது மறைவிடத்திலிருந்து வெளியே வந்த கணவன் முள்ளம்பன்றி, “என்ன, இப்போது தான் வருகிறாயா? நான் அப்போதே வந்துவிட்டேன்,“ என்றது.

‘இது என்ன மாயம்,‘ என்று நினைத்த முயல் திரும்பவும் போட்டிக்கு அழைத்தது. இந்த முறையும் பழையபடியே முள்ளம்பன்றிகள் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றின. முயல் திரும்பவும் இரண்டு மூன்று முறை போட்டி வைத்து இதே மாதிரி தோற்றது. கடைசியில் தனது தோல்வியை ஒப்புக் கொண்டது.

அதன் பிறகு அது யாரையும் கேலி செய்வதில்லை.“

 



டால்ஸ்டாயின் சிறார் கதைகள்: ராஜாவும், சட்டையும் – தமிழில் ச.சுப்பா ராவ்

 



டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 2: அரசரும், விவசாயியும் – தமிழில் ச.சுப்பா ராவ்



டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 3: தானியக் களஞ்சியத்தில் எலி – தமிழில் ச.சுப்பா ராவ்



டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 4: ஓநாயும், கிழவியும் – தமிழில் ச.சுப்பா ராவ்



டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 5: சம பங்கு – தமிழில் ச.சுப்பா ராவ்



டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 6: காக்கையும், அதன் குஞ்சுகளும் – தமிழில் ச.சுப்பா ராவ்



டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 7: மூன்று பன்களும், ஒரு பிஸ்கெட்டும் – தமிழில் ச.சுப்பா ராவ்



டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 8: கழுகும், கோழியும் | தமிழில்: ச.சுப்பா ராவ்



டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 9: கொசுவும், சிங்கமும் | தமிழில்: ச.சுப்பா ராவ்



டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 10: வலையில் சிக்கிய பறவைகள் | தமிழில்: ச.சுப்பா ராவ்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *