நகரத்தில் படிப்பை முடித்துவிட்டு கிராமத்தில் இருக்கும் தன் வீட்டிற்கு வந்தான் மகன்.
விவசாயியான அப்பா, “மகனே! இன்று நம் வயலில் உழ வேண்டும். கலப்பையை எடுத்துக் கொண்டு என்னுடன் வா,“ என்றார்.
படித்தவன் என்ற கர்வம் கொண்ட மகன், “நான் படித்த அறிஞன். எனக்கு இந்த விவசாயம் சம்பந்தப்பட்ட வார்த்தைகள் எல்லாம் மறந்து போய்விட்டன. கலப்பை என்றால் என்ன?“ என்றான்.
அப்பா ஒன்றும் பேசாமல் நகர்ந்துவிட்டார். அவர் பின்னாலேயே சென்ற மகன் வாசலில் கிடந்த கலப்பையை கவனிக்காமல், தடுக்கி கீழே விழுந்தான். நெற்றியில் சரியான அடி.
“எந்த முட்டாள் இப்படி இந்தக் கலப்பையை வழியில் போட்டது?“ என்று கத்தினான்.
டால்ஸ்டாயின் சிறார் கதைகள்: ராஜாவும், சட்டையும் – தமிழில் ச.சுப்பா ராவ்
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 2: அரசரும், விவசாயியும் – தமிழில் ச.சுப்பா ராவ்
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 3: தானியக் களஞ்சியத்தில் எலி – தமிழில் ச.சுப்பா ராவ்
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 4: ஓநாயும், கிழவியும் – தமிழில் ச.சுப்பா ராவ்
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 5: சம பங்கு – தமிழில் ச.சுப்பா ராவ்
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 6: காக்கையும், அதன் குஞ்சுகளும் – தமிழில் ச.சுப்பா ராவ்
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 7: மூன்று பன்களும், ஒரு பிஸ்கெட்டும் – தமிழில் ச.சுப்பா ராவ்
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 8: கழுகும், கோழியும் | தமிழில்: ச.சுப்பா ராவ்
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 9: கொசுவும், சிங்கமும் | தமிழில்: ச.சுப்பா ராவ்
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 10: வலையில் சிக்கிய பறவைகள் | தமிழில்: ச.சுப்பா ராவ்
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 11: முயலும், முள்ளம்பன்றியும் | தமிழில்: ச.சுப்பா ராவ்