டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 3: தானியக் களஞ்சியத்தில் எலி – தமிழில் ச.சுப்பா ராவ்முன்னொரு காலத்தில் ஒரு தானியக் களஞ்சியத்தின் கீழ் எலி ஒன்று வாழ்ந்து வந்தது. களஞ்சியத்தின் தளத்தில் சிறு ஓட்டை ஒன்று இருந்தது. அதன் வழியாக தானியங்கள் எலியின் வளைக்குள் விழும். எலி அதைத் தின்று சந்தோஷமாக வாழ்ந்தது.

தனது சந்தோஷத்தை தன் நண்பர்களிடம் பெருமையாகக் காட்டிக் கொள்ள நினைத்தது. அதற்காக களஞ்சியத்தின் சிறு ஓட்டையை பற்களால் கடித்துக் கடித்து நன்றாகப் பெரியதாக்கி வைத்துவிட்டு தன் நண்பர்களான மற்ற எலிகளை தன் வளைக்கு அழைக்கச் சென்றது..

“வாருங்கள் நண்பர்களே ! என் வளைக்குள் நிறைய தானியங்கள் உள்ளன. விருந்துண்ண வாருங்கள்,“ என்று அழைத்து வந்தது.

நண்பர்களுடன் வளைக்குள் நுழைந்து மேலே பார்த்தால், ஓட்டையைக் காணவில்லை.

ஓட்டை பெரிதாக இருந்ததால் விவசாயி அதைப் பார்த்துவிட்டான். உடனே அதை அடைத்து விட்டான். 

டால்ஸ்டாயின் சிறார் கதைகள்: ராஜாவும், சட்டையும் – தமிழில் ச.சுப்பா ராவ்

  

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 2: அரசரும், விவசாயியும் – தமிழில் ச.சுப்பா ராவ்