டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 7: மூன்று பன்களும், ஒரு பிஸ்கெட்டும் – தமிழில் ச.சுப்பா ராவ்பசியோடிருந்த ஒரு விவசாயி ஒரு கடையில் ஒரு பன்னை வாங்கித் தின்றான். பசி அடங்கவில்லை. எனவே இன்னொரு பன்னை வாங்கித் தின்றான். அப்போதும் பசி தீரவில்லை. சரி என்று மூன்றாவது முறையாக ஒரு பன்னை வாங்கித் தின்றான். அப்போதும் பசி அடங்கவில்லை. சரி என்று சில பிஸ்கெட்டுகளை வாங்கினான். அதில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டான். பசி அடங்கி விட்டது.

அவன் தலையில் அடித்துக் கொண்டு, “ நான் எவ்வளவு பெரிய முட்டாள். எதற்காக இப்படி  மூன்று பன்களை தேவையில்லாமல் தின்றேன்? முதலிலேயே இந்த ஒரு பிஸ்கெட்டை வாங்கித் தின்றிருக்க வேண்டும் !” என்று புலம்பியபடி சென்றான். 

டால்ஸ்டாயின் சிறார் கதைகள்: ராஜாவும், சட்டையும் – தமிழில் ச.சுப்பா ராவ்

  

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 2: அரசரும், விவசாயியும் – தமிழில் ச.சுப்பா ராவ்

  

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 3: தானியக் களஞ்சியத்தில் எலி – தமிழில் ச.சுப்பா ராவ்

 டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 4: ஓநாயும், கிழவியும் – தமிழில் ச.சுப்பா ராவ் 

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 5: சம பங்கு – தமிழில் ச.சுப்பா ராவ்

 டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 6: காக்கையும், அதன் குஞ்சுகளும் – தமிழில் ச.சுப்பா ராவ்