டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 9: கொசுவும், சிங்கமும் | தமிழில்: ச.சுப்பா ராவ்சிங்கத்தின் முகத்தருகே பறந்த கொசு ஒன்று சிங்கத்திடம், “நீ எல்லாம் பெரிய பலசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் ! உனக்கு என்ன பலம் இருக்கிறது? குடியானவப் பெண்கள் சண்டை போடுவது போல,  நகங்களால் கிழிப்பாய். பற்களால் குதறுவாய் நீ எல்லாம் என்னைவிடப் பலசாலியா என்ன ? மோதிப் பார்ப்போமா?“ என்றது.

சிங்கம் கர்ஜித்தவாறே எழுந்தது. கொசு அதன் மூக்கிலும், கன்னத்திலும் மாறி மாறிப் பறந்து உட்கார்ந்தது. கொசுவை அடிப்பதற்காகத் தனது முகத்தில் அறைந்து கொண்டது சிங்கம். அதன் கூரிய நகங்கள் பட்டு முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டது தான் மிச்சம். ஒரு கட்டத்தில் சிங்கம் களைப்படைந்து தன் தோல்வியை ஒப்புக் கொண்டது.

கொசு உற்சாகமாகப் பறந்து போனது. சற்று கவனக் குறைவாகச் சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டுவிட்டது. சிலந்தி அதன் ரத்தத்தை உறிஞ்ச வந்த போது, “நாங்க எல்லாம் சிங்கத்தையே ஜெயிச்சவங்க. இப்படி கேவலமா ஒரு சிலந்தி கிட்ட மாட்டிக்கொண்டோம்,“ என்று புலம்பியது.

  

டால்ஸ்டாயின் சிறார் கதைகள்: ராஜாவும், சட்டையும் – தமிழில் ச.சுப்பா ராவ்

  

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 2: அரசரும், விவசாயியும் – தமிழில் ச.சுப்பா ராவ்

  

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 3: தானியக் களஞ்சியத்தில் எலி – தமிழில் ச.சுப்பா ராவ்

 டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 4: ஓநாயும், கிழவியும் – தமிழில் ச.சுப்பா ராவ் 

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 5: சம பங்கு – தமிழில் ச.சுப்பா ராவ்

 டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 6: காக்கையும், அதன் குஞ்சுகளும் – தமிழில் ச.சுப்பா ராவ்

 டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 7: மூன்று பன்களும், ஒரு பிஸ்கெட்டும் – தமிழில் ச.சுப்பா ராவ்

 டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 8: கழுகும், கோழியும் | தமிழில்: ச.சுப்பா ராவ்