மொழிபெயர்ப்பு நாட்டுப்புறப் பாடல் – ஹிந்தியில் மங்கலேஷ் டபரால் (தமிழில்: வசந்ததீபன்)(1) நாட்டுப்புறப் பாடல்
—————————————-

நிறைய சரிவுகள் வந்து எங்கு செல்கின்றன
பல நாட்களாக
யாரும் அங்கு வசிக்கவில்லை
மக்களின் சில விஷயங்கள்
அங்கும் இங்கும் வாழ்கின்றன
அநியாய புத்திசாலிகள்
சிலரின் வீட்டிற்குச் செல்லவேண்டாம்
அலங்கார உடையணிந்தவனின்
பேராசைக்குப் பின்னால்
இன்னொன்றை எடுத்துக் கொள்ளுங்கள்
கடின உழைப்புக்கும்
விலை இருக்கவில்லை
விரித்த படுக்கையை
சுருட்டி எடுத்துக் கொள்ளுங்கள்
சிறிது நேரம் உட்கார்ந்து கொள்ளுங்கள்
பல கற்களில்
உங்களுக்குத் தெரிந்த
கற்களிலொன்று இருக்கும்
மறைக்கப்பட்ட காற்று இங்கு வரும்
உங்களைப் பார்த்து,
ஏதோ செடி அசைந்து வருகிறது
இவ்வளவு போதுமானது
முன்னுக்கு முன்னால் வருவது
தூங்கிக் கொள்ளுங்கள்
அங்கு ஒரு சுவரின் நிழல்
வாழ்க்கையின் மேல் விழும்.(2)

நான் நகரைப் பார்த்தேன்
மற்றும்
நான் புன்னகைத்தேன்
அங்கே ஒருவர்
எப்படி வாழ முடிகிறது?
இதை அறிய
நான் போனேன்
மற்றும்
நான் திரும்பி வரவில்லை.

 

ஹிந்தியில் : மங்கலேஷ் டபரால்

தமிழில் : வசந்ததீபன்