மொழிபெயர்ப்பு கவிதை: “அன்பு” – ஹிந்தியில் ஹரிவம்சராய் பச்சன் (தமிழில் : வசந்ததீபன்)

மொழிபெயர்ப்பு கவிதை: “அன்பு” – ஹிந்தியில் ஹரிவம்சராய் பச்சன் (தமிழில் : வசந்ததீபன்)

அன்பு
___________
நான் பறவையிடம் சொன்னேன்,
‘நான் உன்னைப் பற்றி
ஒரு கவிதை எழுத விரும்புகிறேன்.’
பறவை என்னிடம் கேட்டது ,
‘உன் வார்த்தைகளில்
என் இறக்கைகளின் வண்ணங்கள் இருக்கின்றனவா? ‘

நான் சொன்னேன்,  ‘இல்லை’.
‘உன்னுடைய வார்த்தைகளில்
என் குரலிசை இருக்கிறதா? ‘
‘இல்லை. ‘
‘உன்னுடைய வார்த்தைகளில்
என்னுடைய சிறகுகளின் பறத்தல்
இருக்கிறதா? ‘
‘இல்லை. ‘
‘உயிர் இருக்கிறதா? ‘
‘இல்லை.’
அப்போது நீ
‘என்னைப் பற்றி கவிதை
என்ன எழுதுவாய் ? ‘
நான் சொன்னேன்,
‘உன் மீது எனக்கு அன்பு இருக்கிறது. ‘
பறவை சொன்னது ,
‘அன்பிற்கும் வார்த்தைகளுக்கும்
என்ன சம்பந்தம் இருக்கிறது? ‘
ஒரு அனுபவம் ஏற்பட்டது
புதியதாய்.
நான் மெளனமானேன்.


ஹிந்தியில் : ஹரிவம்சராய் பச்சன் 
தமிழில் : வசந்ததீபன்
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *