எழுவாய் திரௌபதி உன் ஆடையைக் காப்பாய்
எழுவாய் திரௌபதி உன் ஆடையைக் காப்பாய்
இப்போது கோவிந்தன் வரப்போவதில்லை
மருதாணியைக் கைவிட்டு கையை உயர்த்துவாய்
ஆடையை உருவாமல் காத்துக் கொள்க
பகடையுடன் சகுனி அமர்ந்திருக்கிறான்
இங்கே அனைவரின் உணர்வுகளும் விற்பனைக்கு.
எழுவாய் திரௌபதி உன் ஆடையைக் காப்பாய்
இப்போது கோவிந்தன் வரப்போவதில்லை
தம்மையே விற்றுக்கொண்ட செய்திப் பத்திரிகைகளை
நீ எவ்வளவு காலம் நம்பப் போகிறாய்?
துச்சாதனின் அரியணையிடமிருந்து
என்ன பாதுகாப்பை நீ கோருகிறாய்?
வெட்கமின்றிப் பொய் பேசும் அவர்கள்
உன் மானத்தைக் காப்பரா?
எழுவாய் திரௌபதி உன் ஆடையைக் காப்பாய்
இப்போது கோவிந்தன் வரப்போவதில்லை
அந்தகனாய் இருந்த மன்னன்
செவிடகவும் ஆகி விட்டான்
தமது காதுகளும் ஒட்டுக் கேட்கப்பட
மக்கள் ஊமைகளாக்கப்பட்டு விட்டார்கள்
உருண்டு விழும் உன் கண்ணீரை
அவர்கள் யாருக்குப் புரிய வைப்பார்கள் நீயே சொல்.
எழுவாய் திரௌபதி உன் ஆடையைக் காப்பாய்
இப்போது கோவிந்தன் வரப்போவதில்லை.
(சமூக ஊடகத்தில் வந்த இந்திக் கவிதை).
தமிழில் -: சம்புகன்.

