கைப்பிடி அரிசி
_______________________

ஏய்… எனது வேதனைக்குள்ளாக்கப்பட்ட
மூதாதையர்களே…
உமது நினைவுகள்
இந்த தரிசு நிலத்தின்
நெஞ்சின் மேல்
இப்போதும் வாழ்கின்றன
தமது பசுமையுடன்.

உமது முதுகின் மேல்
காயத்தின் நீல ஆழமான குறி
உம்முடைய
சாகஸத்தையும் தைரியத்தையும்
மறக்க இயலாததால் இருக்கின்றன
இப்போதும் வரை.

கடினமான கைகளின் மேல்
விழுந்த கீறல்கள்
ரத்தக் கசிவுடன்
பாரம்பரியத்தில்
கொடுத்து இருக்கின்றன
குவியலாக ஞாபகங்கள்
அவை வளர்வதற்கு இருக்கின்றன
எனக்கு இந்த பூமியின் மீது
பச்சை , நீலம் , சிவப்பு பூக்களில்
குடியேற்றங்களிலிருந்துஅன்பு செய்வதா வெளியேற்றப்பட்டது
ஓ … எனது முன்னோர்களே
நீ மவுனமாக
இருந்து கொண்டிருந்த
அந்த இரவுகளில்
எப்போது உன்னை
அன்பு செய்து இருந்தது
ஆலிங்கனத்தில் கட்டப்பட்டு
தமது மனைவிகளை
நீவிர் தேடிக் கொண்டு
கைப்பிடி அரிசி
கனவுகளை பணயம் வைத்து.

ஓ… எனது அறியாமை ,
பெயருள்ள முன்னோர்களே
உம்முடைய ஊமை வார்த்தைகள் எரிந்து கொண்டிருக்கின்றன
கொழுந்து விட்டு எரிகிற
சாம்பலைப் போல
சாம்பல் : அது தொடர்ச்சியாக நடுங்கிக் கொண்டிருக்கிறது
ரோசத்தில் நிரம்பி
நான் அறிய விரும்புகிறேன்
உம்முடைய வாசனை…
உமது வார்த்தைகள்…
உமது பயம்…
அது முழுவதும் காற்றிற்கு நடுவிலும்
எரிந்து கொண்டிருக்கின்றன
தீபங்கள் போல யுகங்கள் _ யுகங்களாக.

வசந்ததீபன்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *