(1) நூற்றாண்டின் இறுதியில் மனிதனுக்காக ஒரு சோக கீதம்
______________________________________
மனிதன் மனிதனாக இருந்தால்
எவ்வளவு நல்லாயிருக்கும்
மனிதன் மரமாய் இருக்க வேண்டாம்
நர்சரி செடியாய் இருக்க வேண்டாம்
ரப்பர் பூவாக இருக்கவேண்டாம்
மனிதன் மனிதனாக இருக்கணும்
அவன் நட் ஆக இருக்க வேண்டாம்
போல்ட் ஆக இருக்க வேண்டாம்
அவன் காய்ந்து போன கட்டை ஆக இருக்க வேண்டாம்
அடிக்கடி திரும்பத் திரும்பச் செல்லும்
பிலிம் பாடமாக இருக்க வேண்டாம்
நாடக உரையாடலாகவே முற்றிலும் இருக்க வேண்டாம்
அவன் தொலைக்காட்சியில் வரும் மனிதனுடைய ப்ளூ பிரிண்ட் ஆவதிலிருந்து தப்பித்தால்
உண்மையை ஒத்துக் கொள் ,
இந்த நூற்றாண்டின் எல்லாவற்றையும் விட  பெரிய
விபத்தின் திகிலாய் ஆகட்டும்
அவன் எல்லாம்  இருக்கணும்
ஆனால் இந்த நாகரீகத்தில் நாகரீகத்தின் எல்லாமான உபசரிப்பு
மரியாதைச் சொல்
வெள்ளைப் புலியாக இருக்க வேண்டாம்.
இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்.


(2) அந்தக் கவிதை
_______________________________
அந்தக் கவிதை யார் எழுதியதென்று
சரியாக ஞாபகமில்லை
அதில் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும்
மற்றும் மீண்டும் மீண்டும் கர்ப்பத்திலேயே  இறந்து போகும் சபிக்கப்பட்ட குழந்தை
தன்னுடைய ஆசைகளை மீண்டும் மீண்டும் சொல்லியபடி வாழ்ந்திருந்தது
அதில் நடு _ நடுவில் இருந்தது முதலையின் முதுகின் மீது
தண்ணீரின் ஒலிக்கும் சப்தம்
அதில் டிடிஹரியின் பாதங்களின் அசைவொலி வந்தபடி இருந்தது
அதில் வார்த்தை _ வார்த்தையில்
ஆர்வத்தின் பாணங்களால் கொல்லப்பட்ட கிளிகள்
பிறந்தும்
ஆர்வத்திற்கு விரோதமாக பேசியபடி இருந்தன
அதில் எங்கே _ எங்கே நதிக்கரை வலையில் சிக்கிய
ஏதோ மீன் கதை சொல்லியபடி இருந்தது
ஓ..வழிப்போக்கனே…
ஓ…செம்படவனே…
என்று.
குறிப்பு : 
____________________
டிடிஹரி  நீர் ஓரத்தில் வசிக்கும் ஒரு பெண் பறவை


(3) கொத்தின் கவிதை
________________________________
கொத்து… யே…கொத்து…
கனவுகளின் கொத்து
பொம்மைகளின் கொத்து
மற்றும் களாக்காய்களின் கொத்து
அல்லது  சாவிகளின் கொத்து என
அல்லது நான்கு நண்பர்கள் வாழ்கிறார்கள் கொத்தைப் போல
அல்லது ஒருவருக்கொருவர் பிணைத்துக்கொண்டபெண்களின் கொத்து
அல்லது கொத்தின் செதில்களில் பறவைகள் கொத்து
அல்லது வீட்டில் வாழ்பவர்களைப் பார்த்தால் கொத்து போல என
அந்த கொத்துக்களை காப்பாற்றுங்கள்
இந்த வரலாற்றில் கொத்துக்கள் உடையக்கூடிய நேரம் இருக்கிறது
எல்லாம் சிதறும் நேரம் இருக்கிறது
சக ,தோழன் , கதை _ சிறுகதை
ராஜகுமாரியின் பட்டாணி மாலையின் தானங்கள் சிதறும் நேரம் இருக்கிறது
இருந்த போதிலும் கொத்துக்களுக்கு முகவரி இல்லை
ஆனால் மெள்ள மெள்ள இந்த நேரம் ரெம்ப முன்னதாகவே வரத் தொடங்கியிருந்தது
ஒருவேளை 1950லிருந்தே
அவை  எப்பொழுதும் உணர்வற்று இருக்க முடிந்தது
அப்போது பறவைகள் அழுதது
மற்றும்
நரிகள் காதுகளை படபடக்க வைத்தது.
நிற்க
விட்டுவிடுங்கள் இந்த எல்லா விஷயங்களை
பிறகு
கொத்தைக் காப்பாற்றுங்கள்
கொத்து…யே….கொத்து
பேனாச் செடியின் கொத்து.
ஹிந்தியில் : பத்ரி நாராயணன்
தமிழில் : வசந்ததீபன்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *